28 ஆம் தேதி புது டெல்லியில் உண்ணாவிரதம்!
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. எனவே இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுத் தர வலியுறுத்தியும், அதற்கு இந்திய அரசு துணை நிற்க வேண்டுமென்று வலியுறுத்தியும், வரும் 28 ஆம் தேதி புது டெல்லியில் நாடாளுமன்றம் முன்பாக ஒரு நாள் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. உலகத் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதத்தில் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சான்றோகள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பெருந்திரளானவர்கள் பங்கேற்க உள்ளனர்.
குறிப்பு: இந்த கட்டுரையைப் படிப்பவர்கள் எவரேனும் புது டெல்லியில் இருந்தால், இருக்க நேர்ந்தால், முக்கியமாக இலங்கைத் தமிழர்கள் மீது பற்று இருந்தால் தயவு செய்து கலந்து கொள்ளவும்.
- உமர் முக்தார்
0 comments:
Post a Comment