4 மாதம், 3 வாரம், 2 நாட்கள்



ரொமானியா நாட்டை சேர்ந்த இப்படத்தை "கிறிஸ்டியன் முன்கயு" என்பவர் இயக்கியுள்ளார். சோவியத் யூனியன் உடையும் தருவாயில், அதாவது 1987 ஆம் ஆண்டு இக்கதை நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. சோவியத்தின் கலாச்சரம், ஏறக்குறைய முடிவுக்கு வந்த சூழ்நிலையில், முந்தைய சமூக ஒழுக்கங்களின் மிச்ச சொச்சமும், புதிய சமூக சூழலின் வருகைக்கான எத்தநிப்பும், மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தி இருந்த தாக்கத்தின் ஊடாக கதை நகர்கின்றது. 


ஒடிலியா-வும், கபிடா-வும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள். இருவரும் ஒரே அறையில் தங்கி படித்துவருகின்றனர். கபிடா, எதிர்பாராத விதமாக கர்ப்பமடைய, தன் சிநேகிதியின் சிசுவை கலைப்பதற்கு ஒடிலியா எவ்வாறு உதவி செய்கிறாள் என்பதே கதை(ஒன்-லைன்). சோவியத் மக்களின் சமூக ஒழுக்கங்களில் ஒன்றான, கருகலைப்பு தடை சட்டம் அமுலில் இருந்த நாட்களில், பிடிபட்டால் கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொண்டு, ஓடிலியா , கபிடாவுக்கு உதவுகிறாள். 


கபிடாவும், ஒடிலியாவும் ஒரு ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுக்கின்றனர். கபிடாவை அதில் தங்கவைத்துவிட்டு கருகலைப்பவனை(சட்டவிரோதமாக), ஏற்க்கனவே தொலைபேசியில் பேசியபடி, குறிப்பிட்ட இடத்திற்க்கு சென்று அழைத்துவருகிறாள் ஒடிலியா. அவன் கபிடாவை சோதனை செய்துவிட்டு, தொலைபேசியில் கபிடா கூறியதைவிட அதிகநாட்கள் கரு வளர்ந்துவிட்டதாக கூறுகிறான். இச்சூழ்நிலையில் கருகலைப்பு செய்ய கூடுதல் பணம் வேண்டும் என்கிறான் அவன். கபிடா, ஒடிலியாவிடம் ஹோட்டலுக்கு கொடுத்தது போக அவனிடம் ஏற்க்கனவே பேசிய தொகையை தாண்டி வேறு பணம் இல்லை அவர்களிடம். இனியும் கருவை வளரவிட்டால் அதை எப்போதும் கலைக்க முடியாது என்கின்ற நிலையில் கபிடா. அவளின் நிலை கண்டு எப்படியும் உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒடிலியா. இதைக்கண்டு கொண்ட அவன், கூடுதல் பணத்திற்க்கு பதிலாக ஒடிலியாவை தன்னுடன் பாலியல் உறவுக்கு அழைக்கிறான். வேறு வழி இன்றி அதற்க்கு சம்மதிக்கிறாள் ஒடிலியா.


அழிந்து வரும் சோவியத் சமூகத்தின் இறுதிகட்டத்தில் நிகழும் கலாசார மாற்றத்தால், ஒழுங்கிற்கும், ஒழுங்கின்மைக்கும் இடையில் நிகழும் போட்டியின் மத்தியில் மக்களின் வாழக்கைநிலையை கபிடா, ஒடிலியா வாழ்க்கையில் நிகழும் சில சம்பவங்களின் மூலம் அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார் இயக்குனர். 

அசீப்

ஐயா, அம்மாவிடம் மாறி மாறி சிக்கித் தவிக்கும் தமிழகம்


கருணாநிதி முதல்வர் பதவியை இழந்தும், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றும் இரண்டு மாத காலமாகிவிட்டது. ஜெயலலிதாவின் அணுகுமுறையிலும், பணியாற்றும் விதத்திலும் ஓரளவு மாற்றம் இருந்தாலும், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்வதிலும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதிலும் அவரது வழக்கமான பாணி தொடர்கிறது.
முந்தைய திமுக அரசு செயல்படுத்திய இலவச அரிசி, கான்கிரீட் வீடு, காப்பீட்டு போன்ற திட்டங்களை பெயர் மாற்றி செயல்படுத்த முனைந்துள்ள போதிலும், தமிழகத்தின் நீண்டகால கனவுத் திட்டமான சமச்சீர் கல்விமுறையை நிறுத்தி வைத்ததன் அனைத்து தரப்பினரின் எதிர்ப்புகளையும் ஜெயலலிதா சம்பாதித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகளும் பெற்றோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் 600 கோடி ரூபாய்க்கும் மேலான மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் பூட்டிவைத்துள்ளதன் மூலம் ஜெயலலிதா இன்னும் மாறவில்லை எனத் தெரிகிறது. தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்கு அதிமுகவின் கூட்டணிக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக கட்சிகள் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் அதை நிறுத்தி வைக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்தார். தற்போது நீதிமன்ற உத்தரவால் சமச்சீர் கல்வியை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
 திமுக கொண்டுவந்தது, கட்டியது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தியும், தலைமைச் செயலகத்துக்கு பூட்டுப்போட்டுவிட்டார்கள் என்று ஜெயலலிதா மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த பணிகளை இன்னமும் தொடங்காததால் தேர்தல் சமயத்தில் முடங்கிப்போன அரசு இயந்திரம் இன்னமும் செயல்பட ஆரம்பிக்கவில்ல.

­கடந்த காலத்தைப் போல சாலையில் செல்லும்போது நீண்டநேரம் போக்குவரத்தை நிறுத்தி வைக்காமல் மக்களுக்கு இடையூறு இன்றி நடந்து கொள்வது சற்று ஆறுதல் அளிக்கிறது. அதேபோல் பத்திரிகைகளை புறக்கணிக்கும் நிலையை கைவிட்டு வாராவாரம் பிரஸ் மீட் தருவதாக சொல்லி இருப்பது செய்தியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
 தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகள் சிலவற்றை ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் தடாலடியாக நிறைவேற்றி மக்களின் பாராட்டை பெற்றுள்ளார் ஜெயலலிதா. எளிமையாக இருந்து அமைச்சர்களையும் எளிமையாக மாற்றியது, அரசு விழாக்களை ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்துவது போன்ற நடவடிக்கைகள் ஜெயலலிதா தமிழகத்துக்கு நல்லாட்சி தருவார் என்ற நம்பி்க்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆட்சி வரும்போதெல்லாம் திமுகவின் தி்ட்டங்களை ரத்து செய்வதும்,திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதிமுகவின் திட்டங்களை ரத்து செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்தப் போக்கு கட்டாயம் மாற்றப்பட வேண்டும். ஒரு அரசு செயல்படுத்தும் நலத்திட்டம் அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைவதற்கு 5 ஆண்டுகாலத்துக்கு மேல் ஆகிவிடுகிறது. இந்நிலையில் அத்திட்டத்தை அடுத்து வரும் அரசு ரத்து செய்துவிட்டால் அது எப்படி பயனாளிகளை சென்றடையும்? செயல்படுத்தும் ஒரு சில திட்டங்களையும் இப்படி ரத்து செய்துகொண்டே சென்றால் அவை மக்களுக்கு நன்மை பயக்காது. ஆட்சியாளர்களுக்கே பயனளிக்கும். எனவே, ஆட்சிமாறும்போது எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டங்களை ரத்து செய்யும் இந்த கீழ்த்தரமான கலாச்சாரத்தை திராவிடக் கட்சிகள் கைவிட்டால் மக்களும் செழிப்பார்கள். தமிழகமும் செழிக்கும்.

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive