ரொமானியா நாட்டை சேர்ந்த இப்படத்தை "கிறிஸ்டியன் முன்கயு" என்பவர் இயக்கியுள்ளார். சோவியத் யூனியன் உடையும் தருவாயில், அதாவது 1987 ஆம் ஆண்டு இக்கதை நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. சோவியத்தின் கலாச்சரம், ஏறக்குறைய முடிவுக்கு வந்த சூழ்நிலையில், முந்தைய சமூக ஒழுக்கங்களின் மிச்ச சொச்சமும், புதிய சமூக சூழலின் வருகைக்கான எத்தநிப்பும், மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தி இருந்த தாக்கத்தின் ஊடாக கதை நகர்கின்றது.
ஒடிலியா-வும், கபிடா-வும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள். இருவரும் ஒரே அறையில் தங்கி படித்துவருகின்றனர். கபிடா, எதிர்பாராத விதமாக கர்ப்பமடைய, தன் சிநேகிதியின் சிசுவை கலைப்பதற்கு ஒடிலியா எவ்வாறு உதவி செய்கிறாள் என்பதே கதை(ஒன்-லைன்). சோவியத் மக்களின் சமூக ஒழுக்கங்களில் ஒன்றான, கருகலைப்பு தடை சட்டம் அமுலில் இருந்த நாட்களில், பிடிபட்டால் கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொண்டு, ஓடிலியா , கபிடாவுக்கு உதவுகிறாள்.
கபிடாவும், ஒடிலியாவும் ஒரு ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுக்கின்றனர். கபிடாவை அதில் தங்கவைத்துவிட்டு கருகலைப்பவனை(சட்டவிரோதமாக), ஏற்க்கனவே தொலைபேசியில் பேசியபடி, குறிப்பிட்ட இடத்திற்க்கு சென்று அழைத்துவருகிறாள் ஒடிலியா. அவன் கபிடாவை சோதனை செய்துவிட்டு, தொலைபேசியில் கபிடா கூறியதைவிட அதிகநாட்கள் கரு வளர்ந்துவிட்டதாக கூறுகிறான். இச்சூழ்நிலையில் கருகலைப்பு செய்ய கூடுதல் பணம் வேண்டும் என்கிறான் அவன். கபிடா, ஒடிலியாவிடம் ஹோட்டலுக்கு கொடுத்தது போக அவனிடம் ஏற்க்கனவே பேசிய தொகையை தாண்டி வேறு பணம் இல்லை அவர்களிடம். இனியும் கருவை வளரவிட்டால் அதை எப்போதும் கலைக்க முடியாது என்கின்ற நிலையில் கபிடா. அவளின் நிலை கண்டு எப்படியும் உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒடிலியா. இதைக்கண்டு கொண்ட அவன், கூடுதல் பணத்திற்க்கு பதிலாக ஒடிலியாவை தன்னுடன் பாலியல் உறவுக்கு அழைக்கிறான். வேறு வழி இன்றி அதற்க்கு சம்மதிக்கிறாள் ஒடிலியா.
அழிந்து வரும் சோவியத் சமூகத்தின் இறுதிகட்டத்தில் நிகழும் கலாசார மாற்றத்தால், ஒழுங்கிற்கும், ஒழுங்கின்மைக்கும் இடையில் நிகழும் போட்டியின் மத்தியில் மக்களின் வாழக்கைநிலையை கபிடா, ஒடிலியா வாழ்க்கையில் நிகழும் சில சம்பவங்களின் மூலம் அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார் இயக்குனர்.
அசீப்
0 comments:
Post a Comment