தமிழக அரசின் தலைமை தகவல் ஆணையர் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில், கடந்த மார்ச் மாதம் வழக்கு தொடரப்பட்டது. விஜயலட்சுமி என்ற வழக்கறிஞர் இந்த பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார். மாநில தகவல் ஆணையத்தின், தலைமை ஆணையர் நியமனத்தில், அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் கருத்து கேட்கப்படவில்லை என்றும், ஆகவே சட்டப்படி இந்த நியமனம் செல்லாது என்றும், விஜயலட்சுமி தன் மனுவில் கூறியிருந்தார். இதே விஜயலட்சுமி, மாநில தகவல் ஆணையர்களாக, மூன்று பேர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து மற்றொரு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கிலும், ஆணையர்கள் நியமனத்தில் எதிர்கட்சி தலைவரின் கருத்து கேட்கப்படவில்லை, ஆகவே நியமனத்தை செல்லாது என, நீதி மன்றம் அறிவிக்கவேண்டும் என கோரி இருந்தார்.
இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதி மன்றம் அப்போதைய தி.மு.க அரசை, இதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், தேர்தல் வந்துவிட்டதால் இந்த வழக்குகள் விசாரணைக்கு வரவில்லை. தற்போது இந்தவழக்குகளில், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கைகள், சம்பந்தப்பட்ட துறையின் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகளில், தலைமை தகவல் ஆணையர் நியமனத்திற்கு முன், அப்போதைய எதிர்கட்சி தலைவர், ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கு ஜெயலிதா எழுதிய பதில் கடிதத்தில், தேர்தல் நெருங்குவதாலும், அப்போதைய இந்திய அரசின் தலைமை கண்காணிப்பு ஆணையர் (பி.ஜே.தாமஸ்) தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், மாநில தலைமை தகவல் ஆணையர் நியமனத்தை தேர்தலுக்கு பின் நடத்தலாம் என்றும் கூறியதாக தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் ஜெயலிதாவின் கோரிக்கையை நிராகரித்த தி.மு.க அரசு, எதிர்கட்சி தலைவர் வராமலேயே தலைமை தகவல் ஆணையராக ஸ்ரீபதியை நியமித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மூன்று தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக, ஜெயலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டபோது, பரிசீலினையில் உள்ள நபர்களின் பட்டியலை அவர்கேட்டதாகவும், அதை அப்போதைய அரசு தரமறுத்ததால் நியமன கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இவற்றை சுட்டி காட்டியுள்ள, அரசு செயலாளர்கள், முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட, தலைமை தகவல் ஆணையர் மற்றும் மூன்று ஆணையர்கள் நியமனம் சட்டத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளனர். ஆகவே இவர்களின் நியமனம் செல்லாது என்று கூறியுள்ளனர். இதேபோல், சமச்சீர் கல்வி வழக்கில், அரசின் தலைமை செயலாளர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், சமச்சீர் கல்வி தொடர்பாக கடந்த அரசு எடுத்த "கொள்கைமுடிவு" சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார். இன்னும் வெளிப்டையாக, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை, "மாநில கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம்" மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று, அரசின் தலைமை செயலாளர், அரசானை ஒன்றை பிறப்பித்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தலைமை செயலாளர் இப்படி ஒரு உத்தரவை பிறப்பிப்பதன் உள்நோக்கம், ஜெயலிதாவை காப்பாற்றுவதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? கற்
இனிவரும் காலங்களில், துறை செயலாளர்கள் பிறப்பிற்க்க உள்ள உத்தரவின் மூலம், ஜெயலலிதா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் (அது எளிதில் நடக்க கூடியது). ஒவ்வொரு அரசும் மாறும்போதும், அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக செயல்பட நிர்பந்திக்கபடுவது என்பது இயல்பே. ஆனால் இந்தளவுக்கு வெளிப்படையாக அதிகாரிகளின் கைகளில் கட்டப்பட்ட கையிற்றை ஆட்டுவது, மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவர்களால் மட்டுமே செய்யமுடியும்.
நாம் உண்மையில் முட்டாள்களா?
அசீப்