1990 பிறகு இந்தியாவில் உலகமயமாக்கல், தாராளமயம்,தனியார்மயம் இந்த வார்த்தைகள் எல்லாம் இந்தியாவில் வேகமாக பரவ ஆரம்பித்தாகிவிட்டது.இதற்கு புள்ளையார் சுழி போட்டு வரவேற்றது நரசிம்மராவ் அரசு .சந்தைகள் கிடைக்காமல் இருந்த வெளிநாட்டு முதலாளிகள் (முதலைகள்) தங்கள் பொருட்களோடு இங்கு வந்திறங்க தொடங்கின.இதெற்கெல்லாம் அரசு சொல்லும் காரணம் தொழில்வளர்ச்சி .ஆனால் யாரோடைய வளர்ச்சி என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியது .நிச்சயம் அது அதிகாரவர்கத்தின் வளர்ச்சிக்கு தான்.அதன் பின் ஒவ்வொரு ரூபத்தில் வெளிநாட்டு சக்திகளும், உள்நாட்டு பெருமுதலாளிகளும் நம் வளத்தையும் ,மக்களையும் சுரண்ட ஆரம்பித்துவிட்டன. அதில் சமீபத்திய வரவு சிறப்பு பொருளாதார மண்டலம் (Special Economic Zone ) .
நவீன காலனிசம்:
பிரிட்டிஷ் அரசு இந்தியா போன்ற நாடுகளை காலனியாக மாற்றி அதன் வளங்களை சுரண்டியதை படித்து இருப்போம்.இன்று அது போல செய்யமுடியாது நிலையில் வல்லரசு நாடுகள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் தங்கள் காலனிகளை மறைமுகமாக திணிக்கின்றனர் .அதற்கு நம் அரசு பச்சை கொடி காட்டிவருகிறது.மத்திய-மாநில அரசுகள் வெளிநாட்டு முதலாளிகளை வரவேற்கின்றனர் .
சிறப்பு பொருளாதார சட்டம் :
இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எந்த இடையூறும் இல்லாமல் அரங்கேற மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு 2005 ம் நாடாளுமன்றத்தில் சட்டம் ஒரு சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றியது .இதில் வேடிக்கை என்ன வென்றால் இதை எதிர்க்க எந்த கட்சியும் முன்வரவில்லை மாறாக வெளிநடப்பு செய்தனர் .இதன் மூலம் தங்கள் மறைமுக ஆதரவை தெரிவித்து சென்றுவிட்ட்னர்.அவ்வளவு தான் வெளிநாட்டு ,உள்ளநாட்டு முதலாளிகள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர் .மத்திய அரசும்,மாநில அரசும் இனி பொருளாதார வளர்ச்சி வின்னைதொடும் என பரப்புரை செய்தனர்.
இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வெளிநாடு ,உள்நாடு மூலதனத்தின் சொர்க்க பூமி .இங்கே தாங்கள் விரும்பிய தொழிலால் தோண்ட அனுமதி உண்டு .இதற்கு அனுமதி வாங்குவது என்பது மிக எளிது ஒற்றை சாளர முறையில் எளிதாக வாங்கிவிடமுடியும் .ஆனால் இங்கு ஒரு சாதாரண குடிமகன் ரேஷன் அட்டை வாங்க பல வழிமுறைகளை பின்பற்றவேண்டும் .இதற்கு வெறும் வணிக அமைச்சகத்திடம் அனுமதி வாங்கினால் போதுமானது ,நிதி அமைச்சகதிடமோ ,ரிசர்வ் வங்கிடமோ அனுமதி வாங்க அவசியம் இல்லை .
இங்கு தயாரிக்கப்படும் எந்த பொருளுக்கும் வரி கிடையாது .இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் எந்த ஒரு இந்திய அரசியல் சட்டமும் செல்லுபடியாகாது .ஏற்றுமதி ,இறக்குமதி வரியும் கிடையாது .ஏற்றுமதி ,இறக்குமதி செய்யும் பொருகளை இந்திய சுங்க துறையினர் சோதனை போடமுடியாது.அதாவது இந்திய நாட்டிற்குள் அவர்கள் தங்கள் நாடு அரசாங்கத்தை நடத்துவர் .இங்கு வழங்கப்படும் வரி சலுகைக்கு வரி விடுமுறை என்று பெயர் ( Tax Holiday) .இதனால் இன்று வரை ஏற்பட்டிருக்கும் இழப்பு 2 லட்சம் கோடிக்கும் மேலும் .இது இன்னும் அதிகரித்து கொண்டே போகும்.
மேலும் இவர்களுக்கு தடை இல்லா மின்சாரம் இலவசமாகவும் ,மானிய விலையிலும் கண்டிப்பாக தரபடுகிறது .இப்பொழுது இருக்கும் மின்வெட்டிற்கு இதுவே காரணம் .அது மட்டும் இல்லை தடை இல்ல தண்ணீர் வசதியையும் அரசே செய்ய வேண்டும் .
சரி இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க வேண்டிய நிலம் எங்கிருந்து கையகபடுத்தபடுகிறது .எப்படி எடுக்கபடுகிறது .பன்னாட்டு முதலாளிகளும் ,உள்நாட்டு முதலாளிகள் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் தொழிலை இங்கு தொடங்க மத்திய அரசோடும் மாநில அரசோடும் சேர்ந்து உள்நாட்டு தரகர்களோடு நிலம் தேடி அலைகின்றனர் .அவர்கள் விரும்பும் இடம் பல்லாயிர கணக்கான ஏக்கர் நிலங்கள் அது கிடைக்கு இடமாக புறநகர் ,மற்றும் கிராமங்களை தேர்வு செய்கின்றனர்.
இதற்கு நில ஆர்ஜிதம் செய்ய 1894 நில ஆர்ஜித சட்டத்தையே பின்பற்றி செயல்படுகின்றனர் .நிலம் கையகபடுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு கொடுக்கபடுகிறது .மக்களுக்கு ஆசை வார்த்தை சொல்ல படுகிறது இங்கே தொழில்சாலை வந்தால் உங்களுக்கு தான் நல்லது .வீட்டில் ஒருவருக்கு வேலை என்றெல்லாம் மாய்மாலம் காட்டுவார்கள் .மயங்கினால் அவர்கள் வேலை எளிது,இல்லையென்றால் துப்பாக்கி வைத்து செல்லமாக மிரட்டபடுவார்கள்.அதையும் மீறி எதிர்பவர்கள் நக்சல் என முத்திரை குத்தபடுவார்கள் .சரி அவர்களுக்கு உரியவிலைக்கு நிலம் விற்கப்படுமா என்றால் இல்லை .பெரிய முதலாளிகள் தானே மக்கள் கேட்கும் விலைக்கு கொடுத்தால் என்ன ,நிச்சயம் கொடுக்கமாட்டர்கள் அடி மாட்டு விலை பேரம்பேசி அரசே விலை நிர்ணயம் செய்யும். தாங்கள் பிறந்து ,வளந்த ஊரை காலி செய்துவிட்டு பல மயிலுக்கு அப்பால் குடியேறும் அவலங்கள் தொடர்கின்றனர் .அவர்கள் வாழ்வு ஆதாரமே அந்த பகுதியை நம்பி தான் இருக்கும் அதையும் விட்டாகிவிட்டது .இனி இவர்கள் பாடு திண்டாட்டம் தான் .நாளை நமக்கும் .
இந்த மாதிரி பல சலுகைகள் இருப்பதால் வெளியில் உள்ள தொழில் நிறுவனங்களும் இங்கே தொழில் தொடங்க படை எடுகின்றனர். 1000 ஏக்கர் முதல் 40,௦௦௦ ஏக்கர் வரை நிலம் எடுக்கபடும் பட்சத்திலும் தொழில் நிறுவனகள் இதில் வெறும் 25% தான் ஏனைய 75% திரை அரங்கம்,குடியிருப்பு,மருத்துவமனை ,கேளிக்கை விடுதி ,அங்காடிகள் ,கோல்ப் மைதானங்கள் தான்.யார் வீடு இடத்தில யார் இதெல்லாம் கட்டுவது .
சிறப்பு பொருளாதார மண்டலங்களால் மக்களுக்கு ஆரசு சொல்லும் படியான எந்த நன்மையையும் கிடையாது .நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள் தான்.மீறி கேட்டால் கல்வி தகுதி என எதாவது சொல்லி தட்டி கழிப்பார்கள்.மேலும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வெளிநாட்டு தூதரக அலுவலங்களுக்கு நிகரானது ,அங்கு இருப்பது போல் உள்நாட்டு சட்ட தட்டங்கள் இங்கு செல்லாது .இங்கு விழி செய்பவர்களுக்கு மலிவான கூலி தான் கிடைக்கும் .தொழிலார்கள் சட்டம் என்றால் என்ன அர்த்தம் என கேட்பார்கள் .எட்டு மணி நேர வேலை,பணி பாதுகாப்பு,ஓய்வுதியம் ,பேறு காலவிடுப்பு என்பதற்கு இவர்களின் அதிகாரத்தில் இடம் இல்லை .அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் ,பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள் சாதாரமானவை .
ஆனால் இங்கு இருக்கும் முதலாளிகளுக்கு ஆயிரம் சலுகைகள் ,ஏன் நிலம் கொடுக்கும் மக்களுக்கு அந்த நிறுவனத்தின் பங்கு பத்திரங்கள் தரலாமே மாட்டார்கள் அந்த பங்கு வைத்து இருப்பவர்களுக்கும் வரி சலுகை உண்டு .காலம்காலமாக வாழ்ந்து ,உழுத நிலத்திற்கு யாரோ விலை பேசுகிறார்கள் .
இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அரசிற்கு அதிகமான வரி இழப்பையும் ,நிதி நெருக்கடியும் ஏற்படுத்தும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து .ஏற்கனவே அரசுகள் நிதி நிலைமையை காட்டி மக்கள் நல திட்டங்களை நிறுத்திவருகிறது.இதன் மூலம் மேலும் பல தனியார் நிறுவங்களை வர வழிவகை செய்யும் .
இதெற்கெல்லாம் வெறும் அரசு மட்டும் தான் காரணமா இல்லை நாமும் தான் வெளிநாட்டு மோகத்தால் நுகர்வு என்னும் கலாசாரத்தில் சிக்கி தவிக்கும் நம் பலவீனம் தான் இந்த சிறப்பு பொருளாதார மண்டலகள் அமைய காரணங்கள் இதை பயன்படுத்தி தங்கள் அராஜங்களை காட்டிவருகின்றனர் .உதாரனம் சொல்ல போனால் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் avenue அதுவும் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் தான் .அங்கு செல்லாத சென்னை இளைஞர்களே இல்லை எனலாம் .அங்கு சென்று வருவது எதோ வெளி நாட்டிற்கே சென்று வருவதை போல் எண்ணம்.அங்கு விற்கும் ஒரு காலனி விலை 4000 ரூபாய் அதை வாங்கவும் ஆள் உள்ளது .ஆனால் இங்கு பலருக்கு அது தான் மத சம்பளமே .இது மனிதர்களிடையே இடைவெளியை உருவாக்கும்.மேலும் விலை வாசி ஏற முதல் காரணமும் இது தான் ,அங்கே இருக்கும் விலையே நாளடைவில் வெளியேயும்.
சிறப்பு பொருளாதார மண்டலம் என நடக்கும் அவலங்களை இடதுசாரிகள் கூட கண்டுகொள்ளுவதில்லை.இது நாட்டின் மறு காலனியம் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம் .இதை இப்பொழுதே எதிர்க்காவிட்டால் பின்விளைவுகள் மோசம் என்பது உண்மை