உலக முதலாளிகளின் கைகூலியான இந்திய ஆளும்வர்க்கம், ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான, தன் வெளிஉறவு கொள்கையை மாற்றும் வரை, ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க போவதில்லை என்பதை உணர்வோம்!
இந்த பன்னாட்டு முதலாளிகளின் ஆதரவு கொள்கையினால், பாதிக்கபட்டுள்ள ஒவ்வொரு தமிழனையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திற்க்கு அணிதிரட்டுவதன் மூலம், இந்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மாற்றுவோம்!
தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமே, தமிழீழம் அமைவதற்கும், ஈழ தமிழர் துயர் நீங்குவதற்கும், இனவெறியர்களை தண்டிப்பதற்கும் ஒரேவழி என்பதை உணர்வோம்!
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமே, ஈழ தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் என்ற உண்மையை உணர்ந்து போராடுவோம்!
தமிழீழ விடுதலைக்காக, சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடி உயிர் நீத்த, ஒவ்வொரு ஈழ தமிழனுக்கும், எங்கள் சிரம்தாழ்த்தி வீரவணக்கம் செய்கின்றோம்!!!
வீரவணக்கம்! வீரவணக்கம்!! வீரவணக்கம்!!!
மாற்றத்திற்க்கான செய்தியாளர்கள்!