சமச்சீர்: பிழைக்குமா?

சமச்சீர் கல்வியை நிறுத்திவைப்பதாக அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவுற்று, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை நீதிமன்றத்தில் அரசு தரப்பிலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பிலும் எடுத்துவைக்கபட்ட வாதங்களை காண்போம். 

அரசு தரப்பை பொறுத்தவரையில், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்திவைப்பதற்கு அவர்கள் கூறும் முக்கிய காரணம், 
  • சமச்சீர் புத்தகங்கள் தரம் குறைவாக உள்ளது.
  • தனிப்பட்ட நபரை, துதிபாடும் வகையில் சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • மத்திய அரசின், வழிகாட்டுதலுக்கு இணங்க பாடத்திட்டங்கள் வகுக்கப்படவில்லை. அதாவது, "தேசிய பாடத்திட்ட வரையறை குழு" வகுத்துள்ள வழிகாட்டுதல்கள், சமச்சீர் பாடத்திட்டம் தயாரிக்கும்போது கணக்கில் எடுத்து கொள்ளபடவில்லை.
  •  மத்திய அரசின் "அனைவருக்கும் கல்வி உரிமை" சட்டத்திற்க்கு எதிராக, சமச்சீர் கல்வி சட்டம் உள்ளது, கல்வி, பொதுப்பட்டியலில் உள்ளதால், மத்திய அரசின் சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்தாமல், சமச்சீர் சட்டம் நிறைவேற்றபட்டது சட்ட விரோதம்.
  • ஏற்க்கனவே, சமச்சீர் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்தும் முன், அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளாக, உயர்நீதி மன்றம் வகுத்து கொடுத்த வழிமுறைகள் எதுவும், முந்தைய அரசால் கடைபிடிக்க படவில்லை. 
  • கல்வி, பொது பட்டியலில் உள்ளதால், கல்வியை பொறுத்தவரையில், மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது. 
  • சமச்சீர் புத்தகங்களில், ஏராளமான சொல் மற்றும் கருத்து பிழைகள் உள்ளன.
  • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சமச்சீர் பாடத்திட்டம் சுமையாக இருக்கும். (அதாவது, அரசுப்பள்ளி மாணவர்களின் சிறு, மூளைக்கு ஏற்ற வகையில் சமச்சீர் பாடத்திட்டம் இல்லை)
  • சமச்சீர் குறித்து ஆராய்வதற்காக, உச்சநீதி மன்றத்தின் உத்தரவின்படி தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற, ஒய்.ஜி.பார்த்தசாரதி கல்விக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஜெயதேவ் என்பவர் ஏழை மாணவர்களுக்காக இலவச பள்ளி நடத்திவருபவர். விஜயலட்சுமி ஸ்ரீநிவாசன் என்பவர், மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் கல்வி நிலையத்தை நடத்தி வருபவர்.
  • இந்த குழு, நான்கு முறை மட்டுமே கூடியதாகவும், அதற்க்குள் 10400 பக்கங்கள் கொண்ட சமச்சீர் புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்தது எப்படி என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, குழு நான்கு முறைதான் கூடி இருந்தாலும், குழுவில் உள்ளவர்கள் தினமும் இரவு, பகல் பாராமல் தங்கள் வீட்டில் இருந்தபடி சமச்சீர் புத்தகத்தை ஆராய்ந்ததாக கூறப்பட்டுள்ளது.  
பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள்.
  • சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற அனைவரும், கல்வியாளர்கள் அல்ல. மாறாக, கல்வியை கொண்டு வியாபாரம் நடத்துபவர்கள்(ஒய்.ஜி.பார்த்தசாரதி, ஜெயதேவ், விஜயலட்சுமி ஸ்ரீனிவாசன்)
  • குழுவில் இடம்பெற்ற அனைவரும், முன்னதாக சமச்சீர் கல்வியை எதிர்த்தவர்கள்.
  • சமச்சீர் கல்வி சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம், சமச்சீர் கல்வியை மீண்டும் எப்போது நடைமுறை படுத்துவது என்பது குறித்து கூறவில்லை. ஆகவே, அரசு நிரந்தரமாக சமச்சீர் கல்வியை நிறுத்த நினைக்கிறது. 
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் சுமையாக அமையும் என்பது ஏற்றுகொள்ள முடியாத வாதம்.
  • சமச்சீர் குறித்து ஆராய்வதற்காக அமைக்கபட்ட குழுவின் தலைவரும், தமிழக அரசின் தலைமை செயலாளருமான, தேவேந்த்ரநாத் சாரங்கி, ஏற்கனவே நீதிமன்றத்தில் அரசு சார்பாக தாக்கல் செய்த மனுவில், சமச்சீர் குறித்து முந்தைய அரசு எடுத்த கொள்கை முடிவு சட்டவிரோதம் என்று கூறியுள்ளார். அப்படிபட்டவர் எப்படி நடுநிலைமையாக இருந்து சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்துவது குறித்து ஆராய்ந்திருப்பார்.
  • குழுவின் இறுதி அறிக்கையை முடிவு செய்தவர் தலைமை செயலாளர்தான். குழுவில் இருந்த மற்ற நபர்களுக்கு அந்த அறிக்கை காண்பிக்க படாமலேயே அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. 
  • குழுவின் அறிக்கை, அரசின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது. அல்லது, அரசுக்கு ஆதரவாக அறிக்கை அளிக்கும்படி, குழு உருவாக்க பட்டுள்ளது.
இதுதவிர சில விஷயங்கள்.....
  • சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்துவது குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற, ஒரு நபருடன், தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்துதாஸ், ஒன்றாக சுற்றி திரிந்ததை எங்கள் செய்தியாளர்கள் பலமுறை நேரில் பார்த்துள்ளனர்.
  • நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்காத நிலையில், பழைய பாடத்திட்டங்களின் அடிப்படையில் புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை அரசு செய்துவருகிறது. இதுகுறித்து செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்த செய்தியை சுட்டிகாட்டி, தலைமை நீதிபதி, அரசுதரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது, அதாவது, இது நீதி மன்ற அவமதிப்பு இல்லையா என்று நீதிபதி கேட்டபோது, அரசு தரப்பு சரியான விளக்கத்தை கொடுக்கவில்லை, மேலும் அந்த செய்தி குறித்து மறுப்பும் தெரிவிக்க வில்லை.
இந்நிலையில், நாளை மறுநாள் சமச்சீர் கல்வியை இந்தவருடம் நடைமுறை படுத்தலாமா, இல்லையா என்பது குறித்து, சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

அசீப் 

ஒரு வேண்டுகோள்!

நண்பர்களே!

கடந்தவாரம் நம் தோழர்கள் சந்திப்பின்போது, நாம் ஏற்கனவே யோசித்துவைத்தபடி ஒரு புத்தகத்தை அனைவரும் வாசித்து அது குறித்து வரும் வாரங்களில் விவாதம் நடத்தலாம் என்று முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில், அ.மார்க்ஸ் எழுதிய "ஆரிய கூத்து " என்ற புத்தகத்தின் முதல் இரண்டு தலைப்புகளை வரும் வாரம் விவாதிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். ஆகவே, அனைவரும் அப்புத்தகத்தை வாசிக்கும்படி கேட்டு கொள்ளபடுகின்றனர்.

 - மாற்றத்திற்க்கான செய்தியாளர்கள்.

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive