மார்கண்டேய கட்ஜு!

மார்கண்டேய கட்ஜு!


சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியுமான திரு.மார்கண்டேய கட்ஜு, "போலி என்கவுன்ட்டர், நிரபராதிகளை குற்றவாளிகளாக சித்தரிப்பது, கருனைக்கொலையில் ஈடுபடுவது, வரதட்சனைக் கொடுமை செய்வது, உயர் பொறுப்புகளில் உள்ளவர்களைக் கொலை செய்வது உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, இந்திய ஜனாதிபதியால் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, தூக்கு தண்டனைக்கான தேதியும் செப்டெம்பர் 9, 2011 என குறிக்கப்பட்டு, தூக்கில் போடுவதற்கான உத்தரவு கடிதத்தையும் உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அனுப்பிவைத்து, அதை தமிழக அரசு சிறைத் துறைக்கு அனுப்பிவைத்து, வேலூர் சிறையில் தூக்கில் போடுவதற்கான வேலைகளும் துவங்கி, அதை தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் எதிர்க்கும் இச்சமயத்தில் நீதிபதி மார்கண்டேய கட்ஜு இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கக்கூடும்!

- உமர் முக்தார் 

பாலுக்கு பூனையே காவலன்

பாலுக்கு பூனையே காவலன்!


தேர்தலுக்காக மட்டுமே இப்தாரில் கடந்தாண்டு தான் கலந்துகொண்டதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவது தவறு என்றும், தான் 1999 ஆம் ஆண்டு முதல் இப்தார் நோன்புத் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருவதாகவும், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு என்றென்றும் இருக்கும் என்றும் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா நேற்றைய இப்தார் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

எனக்கொரு சந்தேகம்? பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தன் உற்ற நண்பனாக வைத்திருக்கும் ஜெயலலிதா எவ்வாறு முஸ்லிம்களுக்குப் பாதுகாவலனாக இருப்பார்? இச்செயல் பாலுக்கு பூனையே காவலன் என்பதுபோல் அல்லவா உள்ளது!

- உமர் முக்தார் 

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive