தனி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது, தி.மு.க வை விட, அ.தி.மு.க வில் உள்ள மற்ற கூட்டணி கட்சிகளுக்கே பெரும் இடியாக உள்ளது. அமைச்சரவையில் பங்குகேட்பதை அ.தி.மு.கவுக்கு அடுத்து அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ள தே.மு.தி.க வே கனவிலும் எதிர்பார்க்க முடியாத நிலையில், வெறும் ஒன்றிரண்டு இடங்களில் வென்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகள், பதவியேற்பு விழாவிற்க்காவது தங்களை அழைப்பார்களா என்ற சந்தேகத்தில் மூழ்கவைத்ததுதான் உண்மை.
பதவியேற்பு விழாவிற்க்கு, குஜராத்(கொலைகார) முதலமைச்சர் மோடிக்கு, ஜெயலலிதா, அழைப்பு விடுத்தது, கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. குஜராத்தில் முஸ்லிம் மக்களை கொன்று குவித்த மோடி, கலந்துகொள்ளும் விழாவில், முஸ்லிம் மக்களின் வோட்டின்(நம்பிக்கையின்) மூலம் வெற்றி பெற்ற மனித நேய மக்கள் கட்சி கலந்துகொள்வது சரிதான என்று அக்கட்சி சற்று தயங்கியது.
பதவியேற்பு விழாவில், மனித நேய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதைதொடர்ந்து, அக்கட்சி விழாவை புறக்கணித்து விட்டதாக தகவல்கள் பரவின. இது, வோட்டளித்த மக்களுக்கு அக்கட்சி உண்மையாக செயல்படுவதைபோன்ற பிம்பத்தை உருவாக்கியது. அ.தி.மு.க வின் அதிகார மையத்தை, தங்களுடைய கொள்கைக்காக எதிர்க்கும் தைரியமுள்ள ஒரு கட்சியும் உள்ளதே! என்று நினைத்து யாமும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்க வில்லை.
மனித நேய மக்கள் கட்சி சார்பாக, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தமீம் அன்சாரி, மோடி அழைக்கபட்டதன் காரணமாகவே தங்கள் கட்சி விழாவை புறக்கணிப்பதாக செய்தியாளர்கள் சிலரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் ஒருவர், அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வை தொடர்புகொண்டு பேசியபோது, அவர், தமீம் அன்சாரி கூறியதை மறுத்துள்ளார். மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவே தன்னால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். அக்கட்சியின் சார்பாக வெற்றிபெற்ற மற்றொரு சட்டமன்ற உறுப்பினருக்கு, அழைப்பிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அவராலும் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்க்குள், தமீம் அன்சாரி, செய்தியாளர்கள் சிலரை தொடர்புகொண்டு, தான் முன்னர் சொன்ன தகவலை செய்தியாக வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியை சந்தித்த செய்தியாளர்கள், அவரிடம், புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க புறக்கணிப்பது பற்றி கேட்டபோது, அது அவர்களின் விருப்பம் என்று பதில் அளித்தார்.அக்கேள்வியை மற்றொரு முறை செய்தியாளர்கள், தெளிவாக கேட்டபோது, தான் முன்னர் சொன்னபதிலை எண்ணி, அசடு வழிந்துகொண்டு, தயவு செய்து தன்னை சங்கடத்தில் மாட்டிவிட்டுடாதீங்க என்பதுபோல் கேட்டுகொண்டார்.
இதேபோல், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியை சந்தித்த செய்தியாளர்கள், அவரிடம், புதிய தலைமை செயலகத்தை அ.தி.மு.க புறக்கணிப்பது பற்றி கேட்டபோது, அது அவர்களின் விருப்பம் என்று பதில் அளித்தார்.அக்கேள்வியை மற்றொரு முறை செய்தியாளர்கள், தெளிவாக கேட்டபோது, தான் முன்னர் சொன்னபதிலை எண்ணி, அசடு வழிந்துகொண்டு, தயவு செய்து தன்னை சங்கடத்தில் மாட்டிவிட்டுடாதீங்க என்பதுபோல் கேட்டுகொண்டார்.
மக்களின் கவனத்திற்க்கு
அ.தி.மு.க அதிகார மையத்திற்கு முன், எப்பெயர் பெற்ற கட்சியும் அடிபணிந்து தீரவேண்டும் என்பதே உண்மை.
சிறுபான்மை மக்களின் நலன்களை உண்மையாக பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அ.தி.மு.க அதிகாரத்தை எதிர்க்க தயாராக வேண்டும்.
இதைவிடுத்து, எந்த தலைவராவது உங்களிடம், சகோதரி ஜெயலலிதா, (அல்லது அம்மா அவர்கள்), சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்று, வசனம் பேசினால், தயவுசெய்து நம்பிவிடாதீர்கள்!