மார்கண்டேய கட்ஜு!
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியுமான திரு.மார்கண்டேய கட்ஜு, "போலி என்கவுன்ட்டர், நிரபராதிகளை குற்றவாளிகளாக சித்தரிப்பது, கருனைக்கொலையில் ஈடுபடுவது, வரதட்சனைக் கொடுமை செய்வது, உயர் பொறுப்புகளில் உள்ளவர்களைக் கொலை செய்வது உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, இந்திய ஜனாதிபதியால் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, தூக்கு தண்டனைக்கான தேதியும் செப்டெம்பர் 9, 2011 என குறிக்கப்பட்டு, தூக்கில் போடுவதற்கான உத்தரவு கடிதத்தையும் உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அனுப்பிவைத்து, அதை தமிழக அரசு சிறைத் துறைக்கு அனுப்பிவைத்து, வேலூர் சிறையில் தூக்கில் போடுவதற்கான வேலைகளும் துவங்கி, அதை தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் எதிர்க்கும் இச்சமயத்தில் நீதிபதி மார்கண்டேய கட்ஜு இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கக்கூடும்!
- உமர் முக்தார்
0 comments:
Post a Comment