ரையிடு நடத்தும் அலுவலகத்திலேயே ரையிடு!
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகமான ஆயகர் பவனில் சி.பி.ஐ. இன்று காலை 8 மணிமுதல் அதிரடி சோதனை நடத்தினர். சி.பி.ஐ.க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நடைபற்ற இச்சோதனையின்போது 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறை கூடுதல் இயக்குனரான திரு.அண்டசு ரவீந்தர் கைது செய்யப்பட்டார். மேலும் ரவீந்தர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஒரு கோடி ருபாய் ரொக்கப்பணமும், வெளிநாட்டு மதுபானங்களும் சிக்கியதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும்பொழுது, கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்களைக் குறைத்துக்காட்ட லஞ்சம் பெற்றதாக ரவீந்தர் மீது குற்றசாட்டு கூறப்பட்டுள்ளது!
0 comments:
Post a Comment