நக்கீரன்: காமெடி டைம்


கடந்த 13 ஆம் தேதி நித்யானந்தா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதைபற்றிய செய்திகள் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களில் வந்தவண்ணம் உள்ளன. இந்தவார நக்கீரனிலும் "காமெடி டைம்" என்ற தலைப்பில் அதைப்பற்றி செய்தி வந்துள்ளது. உண்மையை சொல்லவேண்டும் என்றால், நக்கீரன் பத்திரிக்கையைதான் காமெடி டைம் என்று சொல்லவேண்டும். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு நானும் சென்றிருந்தேன். உண்மைக்கு புறம்பான செய்தியை வெளி இடுவது, நித்யானந்தா போன்ற கபட ஆசாமிகளுக்கு சாதகமாக முடிந்துவிடும் என்பது நக்கீரனுக்கு ஏன் புரியவில்லை என்பது என்னுடைய வியப்பு!

சரி அப்படி என்னதான் நக்கீரன் எழுதி விட்டது என்கிறீர்களா?

எழுதியது: 
மேடைக்குவந்த நித்யானந்தா, ரஞ்சிதாவை பார்த்து வணங்கிவிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பை துவக்கினார்.
நடந்தது:
நித்யானந்தா மேடைக்குவந்தவுடன், முதலில் செய்தியாளர்களுக்கு வணக்கம் செய்துவிட்டு பின்னர் மேடையின் வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ளவர்களை வணங்கினார்(அங்குதான் ரஞ்சிதா உட்கார்ந்திருந்தார்).
கேள்வி:
நித்யானந்தா, ரஞ்சிதாவை வணங்கியது போல் எழுதியது, கிளுகிளுப்புக்காகவா?

எழுதியது:
முதல்வருக்கு வாழ்துசொல்லி வணங்கும்போது கரண்ட் கட் ஆகிவிட்டது! உடனே செய்தியாளர்கள் ஒரு மந்திரம் சொல்லுங்க சுவாமி கரண்ட் வந்துடும் என்று கிண்டல் அடித்தனர்.
நடந்தது:
கரண்ட் கட் ஆகா வில்லை. மைக் சரியாக வேலை செய்யவில்லை என்று ஒளிப்பதிவாளர்கள் சப்தம் எழுப்பினர்.
கேள்வி:
அ.தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு உள்ளது என்பதை தெரிவிக்கும் அரசியலா?

எழுதியது:
கரண்ட் வந்ததும், நித்யானந்தா பத்திரிக்கையாளர்களை திட்டினார். அனைவரும் சிவனின் சாபத்திற்கு ஆளாவிர்கள் என்று சபித்தார்.
நடந்தது:
அவர் அனைத்து செய்தியாளர்களையும் திட்டவில்லை. நக்கீரன் மற்றும் சன் டிவி-யை மட்டுமே திட்டினார் (இருப்பினும் அவர்கள் வேறு நாம் வேறு அல்ல என்பதால் இதை எழுதி இருப்பார்கள் போல). அனைவரும் சிவனின் சாபத்திற்கு ஆளாவிர்கள் என்று கூறியது, சன் டிவி குடும்பத்தை பார்த்துதான். சன் டிவி குடும்பத்தை சேர்ந்த பெண்கள் தன் ஆசிரமத்திற்கு வருவார்கள் என்று கூறிய நித்யானந்தா, அவர்களுக்கு சிவனின் சாபம் என்றே கூறினார்.
கேள்வி:
எதை தைரியமாக எழுதினால், பகுத்தறிவு குடும்பத்தார் கோபம் கொள்வார்கள் என்ற பயமா?

எழுதியது:
உங்கள் பக்கம் நியாம் இருந்தால் ஏன் ஓடி ஒளிய வேண்டும் என்று கேட்டதற்கு, விதி துரத்தியதால் ஓடினேன் என்றார்.
நடந்தது:
ஏர்செல் சிவ்சங்கரனே இவர்களுக்கு பயந்து நாட்டை விட்டே ஓடினார் என்றால், நான் என்ன செய்ய முடியும் என்றார்.
கேள்வி:
இதை இப்படியே பிரசுரித்தால், உங்களுக்கும் சிவசங்கரனின் கதி ஏற்படுமோ என்ற பயமா?

எழுதியது:
உங்களை ஏன் பெண்கள் சிறையில் அடைத்தார்கள் என்று கேட்டதற்கு, நான் ஆண், பெண் என்கின்ற இரண்டு நிலையையும் கடந்தவன், எனக்கு கையும் வாயும் வேலை செய்தால் போதும் என்றார்.
நடந்தது:
இந்தகேள்விக்கு அவரளித்த பதில், அது முன்பு பெண்கள் சிறையாக இருந்தது, ஆகவே அதை பெண்கள் சிறை என்பார்கள், மற்றபடி அது பெண்களுக்கான சிறை மட்டும் அல்ல என கூறினார். இதை தொடர்ந்து ஒரு செய்தியாளர், நித்யானந்தாவை பார்த்து உங்களை பெண்தன்மை உள்ளவர் என்று கூறுகிறார்களே என்று கேள்வி எழுப்பினார். அதற்க்குள், நக்கீரன் செய்தியாளர் தன்னை பார்த்து 9 என்று கூறியதாக நித்தியானந்தா கூறவே, அங்கு ஏற்பட்ட குழப்பத்தில் அவர் வெளியேற்றபட்டார்.
கேள்வி:
இப்படி ஒரு சம்பவம் நடந்ததை ஏன் மறைக்கவேண்டும்? இதுதான் பத்திரிக்கை தர்மமா?

குறிப்பு:
நக்கீரன் அட்டைப்படத்தில் நித்யானந்தாவுக்கு ஒரு சவால் விடுத்துள்ளது. அதேபோல், செய்தியாளர் சந்திப்பின்போது, நித்யானந்தா சென்னையில் நிலம் ஒன்றை ஆக்கிரமிப்பு செய்ததாக நக்கீரன் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அதை நிரூபிக்க தயாரா என்று அவர் பகிரங்கமாக சவால் விட்டதை ஏன் மறைத்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இத்தனைக்கும் பிறகு நித்யானந்தா ஏற்பாடு செய்திருந்த மதிய உணவில் சில பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். அவரால் மிகவும் விமர்சிக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியின் செய்தியாளரும் அதில் அடங்குவார் என சிலர் என்னிடம் சொன்னார்கள். அது பொய்யாக இருக்கவேண்டும் என ஆசைபடுகிறேன், ஒரு செய்தியாளனாக!

-செந்தில்

0 comments:

Post a Comment

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive