ஹிலாரியுடன் ஒரு நாள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹிலாரி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்கா உதவி செய்யும்¢ என்றார். இலங்கையில் அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய ஹிலாரி, அங்கு தமிழர்கள் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அவர் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த பிறகும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை சொந்தஇடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஹிலாரி உறுதியளித்தார்.
தமிழத்தில் முதல¦டு செய்ய அமெரிக்கா முன்வர வேண்டும் என ஹிலாரி கிளின்டனிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து கலாஷேத்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹிலாரி கிளின்டன் பங்கேற்றார். தமிழக கலை, கலாச்சாரம் தம்மை வெகுவாக கவர்ந்ததாகவும் ஹிலாரி மகிழ்ச்சி தெரிவித்தார்.
Ýùï¢î¢°ñ£ó¢
0 comments:
Post a Comment