பி.ஜே.பி.யின் மதவாத இரட்டை வேடம்!

பி.ஜே.பி.யின் மதவாத இரட்டை வேடம்!


       ராம்ஜெத்மலானி


நாடாளுமன்ற தாக்குதுக்கு காரணம் என்று கூறி பொய் வழக்குப் புனையப்பட்டு கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது அப்சல் குருவுக்கு! 

அப்சல் குருவை உடனடியாக தூக்கில் போட வேண்டுமென்று தங்களின் மதவாத பிரச்சாரத்தைத் துவக்கியது பி.ஜே.பி.

அதேபோல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு, பொய் வழக்குப் புனையப்பட்டு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு. 11 ஆண்டுகள் கழித்து ஜனாதிபதி கருணை மனுவை தள்ளுபடி செய்தார். பிறகு தமிழகமெங்கும் போராட்டம் தீவிரமானது. தமிழக அரசு கைவிரித்துவிட்டதாக கூறி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்து 8 வாரம் இடைக்காலத் தடையும் வாங்கியாயிற்று. 

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அப்சல் குருவை தூக்கில் போடவேண்டுமென்று கத்திவரும் பி.ஜே.பி.யைச் சேர்ந்த எம்.பி.யும் வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானிதான் இம்மூவருக்கும் தூக்கு தண்டனை கூடாது என வாதாடினார்! 

இதன்மூலம் பி.ஜே.பி.யின் மதவாத முகம் மறுபடியும் வெளியாகியிருக்கிறது! முஸ்லிம் என்பதாலேயே அப்சல் குருவை மட்டும் தூக்கில் இட வேண்டுமென்று கூறிவருவது தெளிவாகியுள்ளது!

- உமர் முக்தார் 

0 comments:

Post a Comment

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive