பெண் சிசுக்கொலை மீண்டும் தலைதூக்கக்கூடிய அபாயம்!

பெண் சிசுக்கொலை மீண்டும் தலைதூக்கக்கூடிய அபாயம்!


இதுநாள் வரைக்கும் தாய் கருவுற்று நான்கரை மாதங்கள் கழிந்த பின்னரே ஸ்கேன் மூலம் கருவிளுள்ளது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து வந்தார்கள் மக்கள். ஆனால், சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தாய் கருவுற்ற 7 வது வாரத்திலேயே கருவிளுள்ளது ஆணா? பெண்ணா? என்பதை அறியமுடியுமாம்!

கருவுற்ற தாயின் ரத்த மாதிரியை எடுத்து அதிலுள்ள மரபணுவை சோதிப்பதன் மூலம் அதை அறிந்துகொள்ள முடியுமாம்! இது இன்னும் சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வரவுள்ளதாம்!

ஏற்கனவே, இன்றும் சில இடங்களில் பெண் சிசுக்கொலை நடந்து வருகிறது. கிராமங்களில் பிறப்பதற்கு முன்னாள் ஆணா? பெண்ணா? என்பது தெரியாத காலத்தில், பெண் குழந்தைப் பிறந்தால், பிறந்த சில மணிநேரங்களிலேயே கள்ளிப்பால் கொடுத்தும், உயிரோடு குழியில் புதைத்தும் கொலை செய்யும் கொடூரம் நடந்தது!

அதன் பிறகு, விஞ்ஞானம் வளந்ததும், பிறப்பதற்கு முன்பே ஸ்கேன் மூலம் ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கருவிலேயே அழிக்கும் கொடுமையும் நடந்தது! அதன் பிறகுதான் அரசு விழித்துக்கொண்டு, பெண் சிசுக் கொலையைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றியது. தற்போது சில இடங்கள் தவிர வெகுவாக அக்கொடுமை குறைத்துவிட்டது.

ஆனால், வருங்காலத்தில் மேற்கூறிய அந்த புதிய ஆராய்ச்சி முறை நடைமுறைக்கு வருமானால்? விளைவுகள் மோசமாகும்! அமெரிக்காவில் அது நடக்காவிட்டாலும், இந்தியாவில் அம்முறையைப் பயன்படுத்தி 7 வாரங்களிலேயே கரு ஆணா? பெண்ணா? என்பதைச் சோதித்து அழித்து விடுவார்கள்!

எனவே இந்த புதிய ஆராய்ச்சி முறை கண்டிப்பாக நடைமுறைக்கு வரவே கூடாது. அப்படியே அமெரிக்காவில் அமலானாலும், இந்தியாவில் அதை அரசுகள் அனுமதிக்கவே கூடாது!

- உமர் முக்தார் 

1 comments:

stalin 14 August 2011 at 03:02  

தற்போது இந்த பிரச்சினையில் மத்திய அரசு அவசர அவசரமாக முடிவெடுத்திருப்பது ராஜீவ் கொலை குற்றவாளிகளை தண்டிப்பதற்கல்ல. மாறாக, வழக்கம் போல், பற்றி எரியும் பெரும் தீயில் குவளைத் தண்ணீர் ஊற்றும் காரியம் தான். ஸ்பெக்ட்ரம்,காமன் வெல்த்,நாடாளுமன்றத்திற்கு இலங்கை எம்பிக்களின் வருகை இலங்கை அரசை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் வலுவான கோரிக்கை உள்ளிட்டவற்றை திசை திருப்புவதற்காகவே இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. தடா சட்டத்தின் கீழ் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் பேரறிவாளன் சாந்தன் முருகன். ஆனால் தற்போது அந்தச் சட்டமே நடைமுறையில் இல்லை. நடைமுறையில் இல்லாத சட்டத்தில் எப்படி 3 பேருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியும். மேலும் கருணை மனு மீது 3 ஆண்டுகளுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்¢க வேண்டும் என்கிறது நீதிமன்றம். ஏனென்றால், சிதையில் எரியும் பிணம் அந்த நொடிகள் மட்டுமே எரிவதாகவும் ,தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடும் கைதிகளின் மனமோ ஒவ்வொரு நொடியும் எரிகிறது என்றும் கூறிய வரலாறு உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு. அந்த விதிமுறையும் இவர்கள் வழக்கில் மீறப்பட்டுள்ளது. ஏறத்தாழ 13 ஆண்டுகள் இவர்களுடைய கருணை மனு பரீசிலனையில் இருந்துள்ளது. இது சட்டப்பிரிவு 21க்கு எதிரானது என்கின்றனர் சட்ட வல்லூநர்கள்.

மேலும் பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகளாகிறது. இத்தனை ஆண்டுகளாக அதை நிறைவேற்றாமல் அவர்களை சிறையில் வைத்திருந்ததன் மூலம் அவர்கள் ஆயுள் தண்டனையையும் அனுபவித்ததாக கணக்காகிறது. தற்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால்,அவர்களுக்கு இரட்டை தண்டனையை அளித்ததாகவும்,அது 2ம் நிறைவேற்றப்பட்டதாகவும் அர்த்தம் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு நீதிமன்றங்கள் விதித்தது ஒரு தண்டனை மட்டுமே. பின் எப்படி நிறைவேற்ற முடியும் தூக்குத் தண்டனையை. பாகிஸ்தான் சிறையில் உள்ள சப்தர் சிங்கை தூக்கிலிடக் கூடாது என்று கோரும் இந்தியப் பேரரசு, பேரறிவாளனுக்கும் முருகனுக்கும் சாந்தனுக்கும் எப்படி மரண தண்டனையை நிறைவேற்ற முடியும்.

Post a Comment

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive