45 ஆயிரம் காலியிடங்கள் ஏன் ஏற்பட்டது?
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவோருக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு 35 நாட்கள் நடைபெற்று, 11 / 08 / 2011 அன்று நிறைவடைந்தது.
இந்தாண்டு கலந்தாய்வில் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, அதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 150 பேர்தான் கலந்தாய்வு முடிந்து அட்மிஷன் கார்ட் வாங்கி கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 45 ஆயிரம் இடங்கள் தமிழகமெங்கும் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது!
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹரிடம் கேட்டபோது, "கடந்தாண்டு 472 பொறியியல் கல்லூரிகள் இருந்தது, அதுவே இந்தாண்டு 502 கல்லூரிகளாக பெருகிவிட்டது என்றும் புதிய கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் விரும்பாததே 45 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதற்கு காரணமாக இருக்கும்" என்றும் தெரிவித்தார்.
இவர் இவ்வாறு கூறினாலும், மாணவ, மாணவிகளுக்கு பொறியியல் படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறைந்ததே காரணமாக இருக்கும்! ஏனெனில், வருடத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் பொறியியல் படித்து முடித்து வெளியேறுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், தெருவுக்குத் தெரு இஞ்சினியர் பட்டதாரிகள் இருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. எனக்குத் தெரிந்தே பல பொறியியல் படித்த நண்பர்கள் இன்னும் வேலையின்றி அலைகிறார்கள்!
பொறியியல் பட்டதாரிகள் லட்சம் பேரென்றால், கலை அறிவியல் பட்டதாரிகளும் அதற்கு நிகராக உள்ளனர்! அரசு மக்களுக்கு இலவசமாக டிவி, பேன், மிக்சி, கிரைண்டர் என்று கொடுப்பதற்கு பதில் இவாறு வேலையற்றுத் திரியும் பட்டதாரிகளுக்கு வீட்டுக்கொரு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்!
அப்பொழுதுதான் 45 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இல்லாமல், அனைத்தும் நிரப்பப்படும்! மாணவ, மாணவிகளும் படித்தால் வேலை வாய்ப்பு நிச்சயம் என்ற நம்பிக்கையில் சேர்ந்து படிப்பார்கள்!
சிந்திக்கட்டும் அரசு!
- உமர் முக்தார்
0 comments:
Post a Comment