தனக்கென ஒரு வாழ்விடத்தை அமைத்துக்கொள்வது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. தனக்கென ஒரு வீடு வேண்டும் என்று ஆசைபடாத மனிதர்களே இல்லை. அதுவும் சென்னை யில் அதிகரித்துகொண்டே போகும் வானுயுர்ந்த கட்டிடங்கள், இதையே நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், அந்த கட்டிடங்களை எழுப்ப, அங்கே உள்ள குடிசை பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, எந்த ஒரு அறிவிப்பும், அவகாசமும் கொடுக்காமல், அவர்களின் வாழ்விடங்கள் அகற்றப்படுகின்றன. சட்டப்படி, குடிசைகளை அகற்றும் படி நேர்ந்தால், அதன் அருகாமையிலேயே அவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. பணம் இல்லாதவர்கள் சொல் பார்லிமென்ட் ஏறாது என்பது பழமொழி, ஆனால் அது சட்டசபைக்குள்கூட நுழையாது என்பதே உண்மை. இவ்வாறு தங்கள் சொந்த இடத்திலிருந்து வெளியேற்றப்படும் குடிசைவாழ் மக்களுக்கு, குடிசை மாற்று வாரியம், ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இடம் அளிக்கிறது. ஆண்டாண்டாக தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டு, ஊருக்கு வெளியே துரத்தப்படும் மக்கள், அனுபவிக்கும் துன்பத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை, சென்னைக்குள் வீடு இல்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கையே சென்னைக்குள்தான் உள்ளது. இந்த அவலம் நீங்க, குடிசைபகுதிகளை விலைக்குவாங்கும் பில்டர்களே இதற்க்கு பொறுப்பேற்க வேண்டும். நம் மக்கள், வசிக்க மாளிகை கேட்கவில்லை, ஒண்டிக்கொள்ள ஒரு சிறு இடம்போதும் அவர்களுக்கு. பொதுவாக ஒரு இடத்தை வாங்கும் ரியல்-எஸ்டேட் அதிபர்கள், அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு ஒரு பங்கு கொடுப்பார்கள். அதன் படி பார்த்தால் பில்டர்கள், நம் குடிசைவாழ்மக்களின் மறுவாழ்வுக்கு பொறுப்பேற்க வேண்டும். இதை வீட்டு வசதி வாரியமும், குடிசை மாற்று வாரியமும், பில்டர்களிடம் வலியுறுத்த வேண்டும். 30 மாடி கட்டிடங்களை, ஒரே வரிசையில் வானுயர கட்டும்போது, இவர்களுக்கு தேவையான வற்றை, பில்டர்களால் கண்டிப்பாக செய்யமுடியும். பொதுவாக, கருப்பு பணமே கட்டிடங்களாக உயரும் போது, அதை உண்மையாக அனுபவிக்க வேண்டியவர்கள், இருப்பதும் பிடுங்கப்பட்டு விரட்டி அடிக்கபடுவது எந்தவகையில் நியாயம்?
உலகம் சிலருக்கானது மட்டும் அல்ல! எல்லோருக்குமானது!
நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
0 comments:
Post a Comment