விதைகளை விற்றுவிட்ட பாவிகள்

Microsoft ன் வியாபார வியூகம் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது கணினியின் இயக்கு மென்பொருளான windows operating system, Microsoft ன் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதே நேரம் இந்த os ல் இயங்கும் அனைத்து மென்பொருள்களும் Microsoft ன் தயாரிப்பாகவோ அல்லது Microsoft னால் அங்கிகரிக்கப்பட்டதாவோதான் இருக்கும். i pod, i phone உள்ளிட்ட apple ன் தயாரிப்புகளும் இதே சாரம்சத்தை கொண்டதாகவே இருப்பதை காணலாம். இதே யுத்தியைதான் விவசாயத்துறையிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளது பல வெளிநாட்டு நிறுவனங்கள்


விவசாயப் பின்னனியில் வளந்தவர்களுக்கு நன்றாக தெரியும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியத்தில் ஒருபகுதியை அடுத்த போகத்திற்கு விதைப்பதற்காக தனியாக எடுத்துவைப்பது வழக்கம். இந்த விதைகளின் மூலமே பாரம்பரிய தானியங்கள் விளைவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய வெளிநாட்டு நிறுவனங்களின் அமோக விளைச்சல் என்ற விளம்பரங்களினாலும் அந்நிறுவனங்களை ஊக்குவித்த மத்திய, மாநில அரசுகளினாலும் இன்று இந்திய விவசாயிகள் விதைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களிடம்  கையேந்தி நிற்க்கும் நிலை உருவாகியுள்ளது.


இந்நிறுவனங்கள் விற்க்கும் விதைகளுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் உரங்களையும் கட்டாயம் பயன்படுத்தவேன்டும். அதுமட்டும் அல்லாமல் காலம் காலமாக நாம் பின்பற்றி வந்த விவசாய முறையும் முற்றிலும் மாற்றப்டுகிறது. இந்த விதைகளின் மூலம் விளைவிக்கப்படும் தானியத்தை மீன்டும் விதையாக பயன்படத்துவது இயலாத காரியம். மேலும் இந்த விதைகளையும் உரங்களையும் பயன்படுத்துவதினால் சில ஆண்டுகளில் அந்த நிலம் விஷத்தன்மையுடையதாக மாற்றப்படுகிறது

விளைவுகள் அனைத்தும் தெரிந்திருந்தபோதிலும் அரசு இதை தொடர்ந்து ஆதரித்துவருகிறது.
                                                                                                                              ஆனந்த்குமார்

0 comments:

Post a Comment

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive