நாளை இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். "வங்கிகளை தனியார் மயமாக்காதே!" என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.
இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். தேசியவங்கிகள் அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட, மத்திய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதாக கூறினார் அவர். இந்த திட்டத்தை நிறைவேற்றவே, வங்கி துறையில் காலியாக உள்ள நான்கரை லட்சம் காலி பணியிடங்களை, கடந்த பதிமூன்று வருடங்களாக நிரப்பாமல், மத்திய அரசு அடம்பிடித்து வருவதாகவும் கூறினார் அவர். நாட்டில் தினந்தோறும் லட்சக்கணக்கான பேர் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிந்துவிட்டு, வேலைக்கான செய்திவரும் என்று காத்திருக்கும்போது, வங்கித்துறையில் உள்ள, இவ்வளவு காலிபணி இடங்களை அரசு நிரப்பாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, உண்மையில் தேசிய வங்கிகள் லாபத்தில் செயல்படுகிறதா என்று அவரிடம் கேட்டோம். அதற்க்கு அவர், தேசிய வங்கிகளில், லாபம் என்பதையும் தாண்டி, நம் பணம், நம்மிடம்பத்திரமாகவும் உள்ளதாக கூறினார்.
அமெரிக்காவில் அடிக்கடி வங்கிகள் திவால் ஆகும் செய்தியுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அவர் சொன்ன "பத்திரம்" என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் புரிந்தது.
வங்கி ஊழியர்களின் உண்மையான கோரிக்கை வெற்றியடைய வாழ்த்துவதுடன், தனியார்மயத்துக்கு எதிரான எங்கள் கருத்தையும் பதிவு செய்கிறோம்!
0 comments:
Post a Comment