விரைவில் கைது!

விரைவில் கைது!


கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியின் நிழலாக வளம் வந்தவர் முன்னாள் தமிழக உளவுத்துறை கூடுதல் இயக்குனர் திரு.ஜாபர் சேட். 

1996 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கலைஞர் ஒரு ஊரில் பிரச்சாரத்திற்கு போனபோது, அங்கு கலைஞரை கொலை செய்வதற்கு கத்தியைத் தூக்கிக்கொண்டு ஒருவன் ஓடி வந்தான். உடனே அவனை தடுத்து கலைஞரைக் காப்பாற்றினார் அப்போது அம்மாவட்ட கண்காணிப்பளராக இருந்த ஜாபர் சேட். பிறகு அத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த கருணாநிதியிடம் யாரை தங்கள் பாதுகாப்பு கண்காணிப்பளராக நியமிக்கலாமென அதிகாரிகள் கேட்டதற்கு, தன்னை காப்பாற்றிய சம்பவத்தைச் சொல்லி, அந்த நபரை கண்காணிப்பளராக நியமியுங்கள் என கருணாநிதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்தே ஜாபர் கருணாநிதியுடன் நெருக்கமானார்!

1996 - 2001 ஐந்தாண்டுகள் ஆட்டம்போட்டுவிட்டு, பிறகு 2001 - 2006 ஐந்தாண்டுகள் அ.தி.மு.க. ஆட்ச்சியில் அடக்கிவாசித்தார். பிறகு 2006 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சியமைத்ததும் அசுர வளர்ச்சி கண்டார். அப்பொழுதுதான், அதிகாரம் கண்ணை மறைக்க, தவறுகள் செய்யத்தொடங்கினார். தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், விருப்ப வீடு வழங்கும் திட்டத்தில் கோல்மால் செய்து ஒரே வீட்டு மனையை மூன்று முறை பெயர் மாற்றி வாங்கியுள்ளார். 

தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பெற்ற நிலத்தை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாதென்ற விதியையும் மீறி, லேன்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து பண்ணிரண்டு அடுக்குகளைக் கொண்ட குடியிருப்பைக் கட்டிவருகிறார். 

அதெல்லாம் தற்போது ஆட்சிமாரியபின் தோண்டியெடுக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் கடந்த வாரம் அவரின் இல்லங்களிலும், அவரின் தொடர்புடையவர்களின் இல்லங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஜாபரின் அண்ணா நகர் இல்லத்தில் கடந்த ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல்கள் அடங்கிய சி.டி.க்களைக் கைப்பற்றியுள்ளனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

தற்போது முதற்கட்டமாக தன்னுடைய ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாம் சிறப்புக் கூடுதல் இயக்குனர் பதவியிலிருந்து பணி இடை நீக்கம் (suspend) செய்யப்பட்டுள்ளார்!

அடுத்த கட்ட நடவடிக்கையாக, இன்னும் குறைந்தது ஒரு மாதத்திற்குள் ஜாபர் சேட் கைது செய்யப்படுவது நிச்சயம்!

இந்தக் கைது தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய முறைகேடுத் தொடர்புடையது. இதற்கு அடுத்தபடியாக, ஜாபர் அடிக்கடி வெளிநாடு சென்றுவந்துள்ளார், அது 
2 ஜி மூலம் கிடைத்த பணங்களை வெளிநாடுகளில் பதுக்கிவைக்க அதிகாரிஎன்ற போர்வையில் சென்றுவந்துள்ளாரா? அனுமதி பெற்று சென்றுவந்துள்ளாரா? என்பது குறித்தும் அவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்து வருகின்றனர்! இதன் மூலம் சி.பி.ஐ.யின் பார்வை இவர்மீது விழுந்துள்ளது. தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய வழக்கு முடிந்தவுடன் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. ஜாபரை கைது செய்ய நிறையவே வாய்ப்புள்ளது!

ஆக, இப்போதைக்கு அவர் நிம்மதியாக உறங்க வாய்ப்பேயில்லை!

- உமர் முக்தார் 
(reporteromar@gmail.com)

0 comments:

Post a Comment

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive