ரஷ்ய நாட்டு படமான் "குக்கூ", அலெக்சாந்தர் ரோகோச்கின் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போர் முடிவடையும் தருவாயில், மூன்று வெவ்வேறு மொழிபேசும் கதாபாத்திரங்களின் சந்திப்பும், ஒருவரின் மொழி மற்றவருக்கு புரியாத நிலையில், அவர்களுக்கிடையே நிகழும் பரிமாற்றங்களை அழகாக படம்பிடித்துள்ளார் அலெக்சாந்தர்.
பின்லாந்து நாட்டு ராணுவ வீரன் விக்கோ. ராணுவத்தில் செய்த தவறுக்காக விக்கோ, ஜெர்மன் இராணுவவீரனை போல் உடை அணிவிக்கப்பட்டு ஒரு காட்டுக்குள் விலங்கினால் கட்டிபோட படுகிறான். அந்த விலங்கின் ஒருபகுதியை உடைத்துக்கொண்டு மற்றபகுதியை உடைப்பதற்காக நடக்க ஆரம்பிக்கிறான். ரஷ்ய நாட்டு ராணுவ வீரனான இவான், எதிர்பாராத விதமாக நடைபெறும் விபத்தினால், ராணுவ நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்புகிறான்.
ஆர்டிக் பிரதேச 'சமி' பழங்குடி இனத்தை சேர்ந்தவள் ஆனி. போரில் தன் கணவனை இழந்த ஆனி, காட்டின் விளிம்பில் உள்ள தன் குடிசையில் வாழ்கிறாள். காயங்களுடன் ஆனியின் குடிசையை வந்தடைகிறான் இவான். அவன் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கிறாள் ஆனி. கைவிலங்கை உடைப்பதற்காக ஆனியின் உதவியை நாடிவருகிறான் விக்கோ. ஜெர்மன் உடையில் விக்கோவை பார்த்த இவான், விக்கோ மீது பகை கொள்கிறான்.
விக்கோ பேசுவது பின்லாந்து மொழி. ஆனி பேசுவது ஆர்டிக் பழங்குடி மொழி. இவான் பேசுவது ரஷ்ய மொழி. மூன்று பேருக்கும் மற்றவர் பேசுவது புரியாத நிலையில், இவான், விக்கோ மற்றும் ஆனி இடையிலான நட்பு வளர்கிறது. இறுதியில் மூவரும் பிரியும் தருவாயில் அவர்கள் பேசிய புரியாத மொழி, பார்வையாளர்களின் மனதில் ரீங்காரம் செய்கிறது.
அசீப்
0 comments:
Post a Comment