மீண்டும் மீண்டும்!
இராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) மறுபடியும் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. உலக அரசியல் வரலாற்றில் அதிக தடவை கூட்டணி மாறிய கட்சி பா.ம.க.வாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்!. அந்தளவிற்கு ஒவ்வொரு தேர்தலின் போதும், தேர்தல் முடிந்த பின்னரும் கூட்டணி மாறுவது இராமதாசுக்கு வாடிக்கை (போதை போல்) ஆகிவிட்டது.
நடைபெற்று முடிந்த தேர்தலுக்கு முன்பாக கூட்டணி பற்றிய பேச்சு அடிபடுகையில், கலைஞரை பா.ம.க.வைச் சேர்ந்த சிலர் அடிக்கடி சந்தித்துவிட்டு வந்தனர். சந்திப்பின்போது இராமதாசால் ஒரேயொரு கோரிக்கை மட்டுமே வைக்கப்பட்டது. அது, இராமதாசின் மகனான முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி இராமதாசுக்கு மாநிலங்களைவை உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டுமென்பதே!
இது பற்றி கட்சியினர் கூடி முடிவு அறிவிக்கப்படுமென கூறிய கலைஞர், 'பா.ம.க.வை வேண்டுமானால் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறோம், மாநிலங்களவைப் பதவி 2013 ஆம் ஆண்டுதான் தரமுடியும்' என நக்கலாக கூறினார். பிறகு சிறிது காலம் அடங்கியிருந்த கூட்டணி பேச்சுவார்த்தை தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் துவங்கியது. திடீரென்று கூப்பிட்டு 31 தொகிதிகளை கொடுத்தார் கலைஞர் (பிறகு ஒரு தொகுதியை பரித்த்துக்கொண்டார் என்பது வேறு விஷயம்).
தி.மு.க.மீது மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பு அலைப்பற்றி தெரியாமல் இராமதாசும் அதற்கு ஒத்துக்கொண்டார். 2013 ஆம் ஆண்டுதான் கனிமொழிக்கு மாநிலங்களவைப் பதவி முடிகிறது, அப்போது காலியாகும் அப்பதவிக்கு அன்புமணியை நிறுத்துகிறேன் என்று கூறியிருந்தார் கலைஞர். ஆனால் எதிர்பாராத விதமாக தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி படுதோல்வி அடைந்தது. பா.ம.க. வெறும் மூன்று தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது.
ஒரு கட்சிக்கு குறைந்தது 31(?) எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும். ஆனால் தி.மு.க.வோ வெறும் 23 இடங்களில்தான் வெற்றிபெற்றது. எனவே இந்த 5 வருடத்திற்கு தி.மு.க.விற்கு ராஜ்ய சபா பதவி கிடைக்க வாய்ப்பில்லை. எனவேதான் இராமதாஸ் திடீரென்று பொதுக்குழுவைக் கூட்டி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
குறிப்பு: ஒத்த கருத்துடைய கட்சிகள் பா.ம.க. தலைமையில் ஒன்றிணைய வேண்டுமெனவும் காமெடி செய்கிறார் மருத்துவர் அய்யா!
- உமர் முக்தார்.
1 comments:
சிறந்த பார்வை. நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்.
Post a Comment