June 14:
அந்த ஐந்து தோட்டாக்கள் அவருக்கு ஐந்து நட்சத்திரங்கள் ஆயின ..
ஜோதிர்மாய் டே ---
மும்பை மிட் டே இதழின் சிறப்பு புலனாய்வு செய்தியாளர், ஜோதிர்மை டே. கடந்த சனிகிழமை பிற்பகல், போவாய் அருகே 2.40 மணிக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேர் , நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்து அவரை தாக்கி இருக்கிறார்கள் .
. ஐந்து குண்டுகளை உடம்பில் ஏந்தி மும்பை நகரத்து சாலையில் தன் உயிரை இழந்திருக்கிறார் டே .
தொடர்ந்து மும்பையின் நிழல் உலகத்தை பற்றி பல கட்டுரைகள் எழுதி வந்தவர் டே .
ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் ,நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியுள்ளார் டே ..
எப்போதும் செல்போனுடனே காட்சியளிக்கிற டே , தன்னுடைய நிழல் உலக தொடர்புகளை எப்போதும் தன் தேவைக்கு பயன்படுத்தியதில்லை என்கிறார்கள் மும்பையின் மூத்த செய்தியாளர்கள் ..
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக , ஜீரோ டயல் என்னும் ஒற்றர்களை பற்றிய தன் சிறப்பு நூலை, டே வெளியிட்டார் .. புலனாய்வு தொடர்பான 3 நூல்களை இதுவரை டே வெளியிட்டுள்ளார்.
அண்மையில் தாவூத் இப்ராகிம் சகோதரரின் மரணம் குறித்து கூட கட்டுரைகள் வெளியிட்டு இருந்தார் டே . ஆனால் சமீபத்தில், அவர் எந்த சிறப்பு புலனாய்வு கட்டுரையும் எழுதாத நிலையிலும் , அவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது, செய்தியாளர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது
.சில மாதங்களுக்கு முன்பாக , ரயில்வே சிறப்பு காவல் படை கலனில் நடைபெற்று வந்த முறைகேடுகளை, அகேலா என்னும் செய்தியாளர் புலனாய்வு செய்து வெளியிட்டதற்காக மாநில அரசால் கைது செய்யப்பட்டிருந்தார்..
ஜோதிர்மாய் டே, அரசின் இந்த செயலை கண்டித்து செய்தியாளர்கள் அமைப்பினர் பலருடன் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் பாட்டிலை சந்தித்து செய்தியாளர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு தன் கண்டனத்தை
தெரிவித்துள்ளார் .
மேலும் மாநில மற்றும் மத்திய அரசின், பல மக்கள் விரோத செயல்பாடுகளையும், தன்னுடைய கட்டுரைகளில் கடுமையாக எதிர்த்து வந்தார் டே ..
அரசுக்கு எதிரான செய்திகளோ , நிழல் உலகம் பற்றிய செய்திகளோ , எவ்வித தயக்கமும் இன்றி மக்களுக்கு உண்மையை தொடர்ந்து எழுதி வந்துள்ளார் டே ..
கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் மூன்று செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
.
பத்திரிகை துறை இது மாதிரியான சவால்களை தொடர்ந்து சந்தித்தே வந்திருக்கிறது ..இது மாதிரியான அச்சுறுத்தல்களால் புலனாய்வு செய்தியாளர்களின் எண்ணிக்கை எவ்விதத்திலும் குறையாது என்கிறார் தேசிய செய்தியாளர்கள் சங்க தலைவர் நின்னான் ...
டே வின் மரணம் குறித்த உண்மையான தகவல்களை மாநில அரசு வெளியிட வேண்டும் என்றும், தேசிய செய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது...
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காக கொலை செய்யப்பட்ட சதீஷ் செட்டி , நிழல் உலகம் பற்றி செய்தி வெளியிட்ட ஜோதிர்மாய் டே என மும்பை மாநகரம் சமூக மாற்றத்திற்காக போராடும் போரளிகளின் ரத்த பூமியாகி வருகிறது .
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர உழைப்பவர்களுக்கு மரணமே பரிசானாலும் ,அந்த பாதையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தான் சமூக மாற்றத்திற்கான உந்துதல் சக்தி ..
மக்கள் செய்தியாளர் "ஜோதிர்மை டே" வுக்கு வீரவணக்கம்!
செய்தியாளர் நெல்சன் சேவியர் .
June 13:
பாபா ராம்தேவின் நாடகம்!
"என் வாழ்க்கையில் இதுவரை இப்படியொரு வன்முறையை நான் பார்த்ததேயில்லை" என ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் யோகா குரு பாபா ராம்தேவ். யோகா வகுப்பு நடத்தவும், மாலை 6 மணிக்குள்ளாக அனைவரும் கலைந்துச் சென்று விடுவோமென்றும் காவல் துறையிடம் அனுமதி வாங்கினார் பாபா. ஆனால், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என ஊடகங்களுக்குக் கூறினார். இதனால் அங்கு கூடி வந்த கூட்டத்தைப் பார்த்து தனது முடிவை மாற்றி களைந்து போக மருத்துவிட்டார் பாபா.
இதனால் வேறுவழி இல்லாமல் மத்திய அரசு காவல் துறையை ஏவி கூட்டத்தைக் கலைத்தது. வெறும் 2000 பழங்குடியினரை கலைப்பதர்க்கெல்லாம் துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்களை கொள்ளும் காவல் துறை ராம்லீலா மைதானத்தில் கையாண்டவிதம் மென்மையானதே. இதற்கே பாபா, 'இப்படியொரு வன்முறையைப் பார்த்ததில்லை' என கூறுகிறார் என்றால் அவர் (பாபா) இத்தனை நாள் மிகவும் பாதுகாப்பான, சொகுசான வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கிறார் என்று பொருளாகிறது.
"ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்படும் லோக்பால் அமைப்பு பிரதமரையும், இந்திய தலைமை நீதிபதியையும் விசாரிக்கக் கூடாது" என்று கூறியவரே இந்த ராம்தேவ்தான். அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மாற்றாக மத்திய அரசாங்கத்தால் உருவாகப்பட்டவராககூட பாபா ராம்தேவ் இருக்கலாம்!.
கறுப்புப் பணம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை, அதேவேளை அதற்காக பாபாவின் போராட்டத்தை ஊக்குவிக்க வேண்டுமா? அவர் கூறும் கோரிக்கைகள்தான் என்ன?
- ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டுமென கோருகிறார். கொலை செய்த குற்றவாளிகளுக்கே மரண தண்டனை கொடுக்கக் கூடாதென பலர் கூறிவரும் வேளையில் ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை என்பது இந்தியாவில் நடக்காத காரியம்!.
- 500, 1000 ஆகிய ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கிவிட வேண்டுமெனவும் கூறுகிறார். இந்த நோட்டுகளை ஊழல் பெரிச்சாளிகள் மட்டுமா வைத்துள்ளார்கள்? சாதாரண உழைத்து உண்பவர்கள்கூடதான் வைத்துள்ளார்கள். எனவே இதுவும் வேலைக்கு ஆகாத கோரிக்கை!.
- ஜனநாயக இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாக்கத்தின் அடையாளங்கள் அளிக்கப்பட வேண்டுமென்கிறார். அதாவது ஆங்கிலத்தில் நடக்கும் நிர்வாகம், கல்வி எல்லாம் நிறுத்தப்பட வேண்டுமாம். ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் தீர்வு காணும் எளிமையான பிரச்சனை அல்ல, மக்களிடையே விவாதம் நடத்தப்பட வேண்டிய பெரிய விஷயம் இது. ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு எல்லா இடங்களிலும் இந்தியைக் கொண்டு வரும் முயற்சி என்பதே இதன் பொருள். இது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிவாசிகளுக்கு எதிரானது. எனவே இந்தக் கோரிக்கையும் செல்லுபடியாகாது!.
- அடுத்து மிகவும் முக்கிய கோரிக்கையை அவர் வைக்கிறார். அது இந்திய பிரதமர் நேரடியாக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்கிறார். அதாவது நாடாளுமன்ற ஜனநாயகம், பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆகியவை பாபாவுக்கு வேம்பாகக் கசக்கிறது போலும்! அந்தந்த மாநில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ராம்தேவ்கள் போன்றோரின் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பதிலாக அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் பாபா! ஆக இந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப் படவேண்டியதுதான்!.
இந்தக் கோரிக்கைகளை எல்லாம் பெரிதாக ஊடகங்கள் விவாதிக்காமல், காவல் துரையின் அத்துமீறல்களை மட்டுமே சுட்டிக்காட்டி பரபரப்பை ஊட்டுகின்றன. இவருக்குப் பின்னால் உள்ள ஜனநாயக விரோதமான கோரிக்கைகளை அம்பலப்படுத்தத் தவறுகின்றன. மேலோட்டமாக ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லப்படும்போது, அதற்கு ஆதரவு அளிப்பது கடமை அன்று தோன்றுகிறது. இதனைத் தவிர்த்துப் பார்க்கும்போது இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்ற எண்ணமே மேலோங்குகிறது!.
மேலும், பாபா ராதேவ் உண்ணாவிரத நாடகத்தை 9 நாள் கழித்து இன்று முடிதுக்கொண்டிருக்கிறார். கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தேராடவுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மற்றொரு ஆன்மீகவாதியான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும் செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வெளிவந்து இருக்கின்றன.
பாபா உண்ணாவிரதம் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பி.ஜே.பி. ஆட்களுமே அதிகம் வந்து பாபாவுக்கு ஆதரவளித்தனர். ஆக பாபா ராம்தேவை பின்னாலிருந்து இயக்குவதே ஹிந்துத்துவா சக்திகள்தான் என்று ஒரு சந்தேக எண்ணம் தோன்றுகிறது.
எது எப்படியோ, பாபாக்களும், ஹசாரேக்களும் ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்குப் புகழ் சேர்த்துக்கொண்டு, மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பதே நிஜம்!.
- உமர் முக்தார்,
செய்தியாளர், வின் தொலைகாட்சி
0 comments:
Post a Comment