அம்மாவுக்கு இரண்டாவது ஆப்பு!
'எவ்வாறு உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் 2 ஜி ஊழல் வழக்கில் ஜாமீன் வேண்டி உச்ச நீதிமன்றத்திலேயே மனு செய்து, அதை உச்ச நீதிமன்றமும் நிராகரித்து எப்படி தி.மு.க.வினர் அவமானப்பட்டார்களோ? அதே மாதிரியான அவமானத்தைதான் அ.தி.மு.க. அரசும் படப்போகிறது என்பது நிஜம்!'
கடந்த ஜூலை 18 ஆம் தேதி சமச்சீர் கல்வி குறித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கிடைத்தப் பிறகு மேலே உள்ளவாறு நாங்கள் கூறியிருந்தோம். அது இன்று நிஜமாகியிருக்கிறது!
கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் சமச்சீர் கல்வித் திட்டம், அதை நாம் ஏன் அமல் படுத்தவேண்டும்? என்கிற ஈகோவோ அல்லது சிறந்த முழுமையான சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்கிற நல்லெண்ணமோ தமிழக அரசுக்கு இல்லை. மாறாக, தனியார் பள்ளிகளின் தூண்டுதலுக்கு அரசு படிந்தது என்பதே நிதர்சன உண்மை!
ஏனெனில், அரசு மற்றும் தனியாரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்கவேண்டுமென ஆசைப்பட்டுத்தான் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கின்றனர். சமச்சீர் கல்வி அமலானால் அனைத்து அரசு மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒரே மாதிரியான சமமான, சீரான கல்வி வந்துவிடும், அவ்வாறு வந்தால் கல்வியை வியாபாரமாக்கிய தனியார் பள்ளிகளுக்கு பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படும். ஏனென்றால், மேற்கூறிய அரசு மற்றும் தனியாரில் வேலை பார்பவர்கள் குறைந்த செலவில் அரசு பள்ளியிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விடுவார்கள். அவ்வாறு சேர்த்தால் தங்களது கஜானா காலியாகிவிடும் என்பதை அறிந்த தனியார் முதலாளிகள் 'செட்டில்' செய்து அரசை பணியவைத்தனர். அரசும் அதனாலேயே எதையும் கண்டுகொள்ளாமல் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. தற்போது அதே உச்ச நீதிமன்றம் தனியாருக்கும், தமிழகத்தை ஆளும் அம்மாவுக்கும் ஆப்பு வைத்ததுபோல் தீர்ப்பைக் கூறியிருக்கிறது!
இனியாவது தமிழக அரசு எதிலும் தனியாருக்கு சாதகமாக செயல்படாமல் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு செயல்படவேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்!
குறிப்பு: சமச்சீர் கல்வியில் அரசு மேற்கொண்ட இந்த வகையான நடவடிக்கை நிச்சயம் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும்!
- உமர் முக்தார்
0 comments:
Post a Comment