எங்களின், கிராமத்தையும், கானகத்தையும்
அன்னை பூமியையும் விட்டுத்தரமாட்டோம்!
எங்களின் போராட்டத்தையும் கைவிடமாட்டோம்!
அவர்கள் அணை கட்டினார்கள்,
எங்கள் கிராமம் நீரில் மூழ்கியது!
அவர்கள் தொழிற்சாலைகள் கட்டினார்கள்,
மரங்களை வெட்டினார்கள்,
கனிமங்களை தோண்டி எடுத்தார்கள்,
சரணாலயங்களை நிறுவினார்கள்.
நீரும், நிலமும் கானகமும் இல்லாமல்
நாங்கள் எங்கே போவது?
ஓ! வளர்ச்சியின் கடவுளே, தயவு கூர்ந்து சொல்!
எங்கள் வாழ்கையை நாங்கள் எப்படி பாதுகாப்பது?
யமுனா நதி வற்றிவிட்டது.
நர்மதாவும், சுவர்ணரேகாவும் வற்றிவிட்டது.
கங்கை, கலங்கிய குட்டையாகிவிட்டது.
கிருஷ்ணாவுக்கும் அதே கதிதான்.
நீங்கள் பெப்சி கோலாவும், பிஸ்லரி தண்ணீரும் குடிப்பீர்கள்.
நாங்கள் அசுத்தப்பட்ட நீரில்,
எங்கள் தாகத்தை போக்கிகொள்வது எப்படி?
இந்த கானகத்தை பாதுகாத்து,
நிலத்தை பசுமையாக்கி,
ஆறுகளை, தேனாக பாயும்படி பாதுகாத்த,
எங்கள் முன்னோர்கள் முட்டாள்களா?
உங்கள் சுயநலத்துக்காக
நிலத்தை நிர்மூலமாக்கி
அதன் பசுமையை திருடிக்கொண்டீர்கள்.
மீன்கள் செத்துவிட்டன.
பறவைகள், யாருக்கும் தெரியாத இடம் நோக்கி
பறந்துவிட்டன!
மந்திரிகள், தொழில் தரகர்களாக மாறி
எங்கள் நிலங்களை பிடுங்கிக்கொண்டார்கள்.
ஆயுதப்படை அவர்களை பாதுகாக்கிறது.
ராஜாக்களான அதிகாரிகளுக்கும்,
கோடீஸ்வர ஒப்பந்ததாரர்களுக்கும்,
எங்கள் கிராமம், விளையாட்டுமைதானம்.
ஓ! சகோதரா! அவர்களின் விளையாட்டு மைதானம்.
சகோதரர்களே!
உங்கள் மௌனத்தை கலைத்து, ஒன்றுசேர
பிஸ்ரா(ஆதிவாசிகளின் சரித்திர நாயகன்) அழைக்கிறார்!
மீனவர்களும், தலித்துகளும், ஆதிவாசிகளும்
ஒன்றிணைவோம்!
நிலங்களிலிருந்தும், சுரங்கங்களிலிருந்தும்
பறையதிர உதித்தெலுவோம்!
நாட்டு மக்களே! கேளுங்கள்!
போராட்டமே இறுதி வழி!
(காஷிபூரில், பாக்சைட் சுரங்கம் அமைவதற்க்கு எதிர்ப்புதெரிவித்து, பழங்குடிமக்களை ஒருங்கிணைத்து போராடிவரும் "பகவான் மாஜி" (அந்தமாதிரி பகவான் இல்லை) எழுதிய பாடல்)
0 comments:
Post a Comment