பலி பீடத்தில் இருந்து பலியாடு தப்புவது எப்படி?


பலி பீடத்தில் இருந்து பலியாடு தப்புவது எப்படி? 


அதிர்ஷ்டத்தின் வாயிலாக அதிகார பீடத்தை அடைந்தவர்களை துரதிருஷ்டத்தின் அம்புகள் நிச்சயம் ஒரு காலத்தில் பதம் பார்க்கும். அவ்வாறு பதம் பார்க்கப்பட்டு, இன்று திகார் சிறையில் இருப்பவர்கள்தான், ராசாவும், கனிமொழியும். 
கஷ்டங்கள் வரும்போதெல்லாம், இயற்கையான இந்தியன், இயல்பாக கூறும் வாத்தை “எல்லாம் விதி” என்கிற இந்த வார்த்தைகளை கூறி ஆறுதல் அடைந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில்தான், இந்தியாவில் ஜோஷியமும், கடவுள் நம்பிக்கையும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. 
2009 ஆம் ஆண்டில் அதிகார பீடத்தில் வீற்றிருந்த, 2011ல் அடிப்பட்ட பாம்பாக விழுந்து கிடக்கிற, தி.மு.க. தலைவர்களான ஆ. ராசாவும், கனிமொழியும் திகார் சிறையில் இருக்கும்போது, தங்கள் முதுகுகளை குத்திய கணைகள் யாரால், எப்படி, எந்த வழியில், எய்யப்பட்டன என்பதை பற்றி, ஆர அமர யோசிக்க நிரைய நேரம் கிடைத்திருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ, சிக்கலான பதில்களை கொண்ட ஒரு சுலபமான கேள்வியை, தங்கள் தரப்பு வாதத்தில் வைக்கிறார்கள். 

                                 பலி பீடத்தில் இருந்து பலியாடு தப்புவது எப்படி?

தப்பிப்பதற்கான வழக்கமான வழிகள் எதுவும் இல்லாமல் 
தொடர்ந்து தி.மு.க.வினர், வலியால் துடிக்கிறார்கள். 
ஆனால் அந்த வழியை அரசியல் வலுவாக மாற்றுவதற்கான சக்தி 
இப்போது அவர்கள் இடத்தில் இல்லை.

கூட்டணி அரசுக்கு உலை வைக்க அவர்களால் முடியாது.
இந்த நிலையை தனக்கு சாதகமாக, 
முழுமையாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது காங்கிரஸ்
“அரசியலில் வெட்டு மிரட்டலைவிட, 
மோசமான சுய அழிவுப்பாதை வேறில்லை”
இன்றைய நிலையில் ராசாவிடம் இருப்பது ஒரே ஒரு ஆயுதம்தான்
அந்த ஆயுதம் என்னவென்றால், அவருடன் சம்மந்தப்பட்ட தலைவர்களை
எளிதில், மோசமான சிக்கலில் மாட்டிவிட முடியும். 
சொல்லபோனல், அதைத்தான் அவர் செவ்வன செய்யத் தொடங்கி இருக்கிறார்.

தற்காப்பே, தாக்குதலின் மிகச்சிறந்த வடிவம் என்றால், 
தாக்குதலின் அதி சிறந்த வடிவம் எதிர் தாக்குதல்.

வெட்டு பீடத்தில் வைக்கப்பட வேண்டிய தலை, 
தன்னுடையது மட்டுமல்ல என்பதை
பலி கடாவால் காட்ட முயன்றால், 
வெட்டப்படாமல் தப்பிப்பதற்கான வழிகள் பலவும் பிறக்கவே செய்யும். 
கப்பல் கவிழ போகிறது என்று தெரிந்தால், 
யாரும், தான் மட்டும் மூழ்க நினைக்க மாட்டார்கள்.

தன்னோடு பலரையும் சேர்த்துக்கொள்ளவே முயல்வார்கள். 
இதோடு ஒப்பிட்டு பார்க்கையில், 
ராசா, கனிமொழியின் உடல்மொழியை பார்க்கும்போது, 
அவர்கள் நம்பிக்கை மிளிர எப்போதும் காட்சியளிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் அவ்வாறு தோற்றமளிப்பது
வழக்கத்திற்கும் மாறாக உள்ளது.

அது ஏன் என்று, இப்போது நமக்கு தெரிந்துவிட்டது. அரசின் தலைமை அதிகார மையங்களில் நடந்த விவாதங்களின் சான்றுகளை ராசா தன் வசம் வைத்துள்ளார்.

இப்போது அரசியல் யுத்த களத்தில் மிகவும் வலுவான ஆயுதம் -
 "ஜெராக்ஸ் மிஸின்தான். "
ரகசிய கோப்புகளின் படிகள், 
இப்போது எல்லோர் கைகளிலும் இருக்கின்றன.

ராசாவின் குரல் வளையை நெருக்கியது அரசு, 
அரசின் கழுத்து நரம்புகளை குறி வைத்திருக்கிறார் இப்போது ராசா. 
ராசாவுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் சிதம்பரத்திற்கும், மன்மோகன்சிங்கிற்கும் இழப்பதற்கு 
ஒரு அரசாங்கமே இருக்கிறது.
ராசா நினைப்பதை நடத்திவிட்டால் 

நாட்டின் தலைமை சட்ட அலுவலர் அருகில் பார்த்துக்கொண்டிருக்க
சாட்சிகளின் கூண்டில் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் 
நிற்க வைத்து கேள்வி கணைகளால் துளைக்க வேண்டிய நேரம் 
நாளை வரும்.

ராசாவின் நோக்கம் வெளிப்படையானது, 
மத்திய அரசை அவரால் எதுவும் செய்ய முடியாது
ஆனால் அரசின் மீதான நம்பக தன்மையை குலையும்படி 

நிச்சயம் அவரால் செய்ய முடியும். 

0 comments:

Post a Comment

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive