அர்ஜென்டினா சட்டப்படி நான்கு வயதுக்குமேல் குழந்தைகள் சிறைக்குள் இருக்க கூடாது. இதை சுட்டிக்காட்டி, தோமஸ்சை தன்னிடம் தந்துவிடும்படி, ஜூலியாவின் தாய் கேட்கிறாள். ஜூலியா தரமறுக்கிறாள். சாமார்த்தியமாக, தோமஸ் ஜூலியாவிடமிருந்து பிரிக்கபடுகிறான். செய்யாத குற்றத்திற்க்காக தண்டனை அனுபவிக்கும் ஜூலியாவுக்கு இருந்த ஒரே ஆறுதல் தோமஸ் தான். பிள்ளையை பிரிந்த ஜூலியா மனம் உடைந்து போகிறாள். அதற்க்குள், எஞ்சியிருந்த ஒரே ஆறுதலான மார்த்தாவும் தண்டனை முடிந்து வெளியே செல்கிறாள். ஜூலியா, இனியும் குழந்தையை பிரிந்து சிறைக்குள் இருக்க முடியாது என்ற முடிவுடன் படத்தை அழகாக முடித்துள்ளார் இயக்குனர்.
அசீப்
0 comments:
Post a Comment