காதில் கேட்டவை: 'THE WAR YOU DON'T SEE'
ஆஸ்திரேலியாவில் பிறந்து, லண்டனில் வசிக்கும் செய்தியாளர் "ஜான் பிள்கேர்".
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் நாடுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் நடத்தும் தாக்குதலில் கொல்லப்படும் அப்பாவி பொதுமக்கள் பற்றிய செய்திகளை, ஊடகங்கள் எவ்வாறு மறைக்கின்றன என்பது குறித்து ஜான் பிள்கேர் தயாரித்துள்ள ஆவணப்படம் 'THE WAR YOU DON'T SEE'. இந்தப்படம் சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் திரை இடப்படுவதாக இருந்தது. ஆனால், (அரசு கொடுத்த) நெருக்குதலின் காரணமாக இப்படத்தை, விழா அமைப்பாளர்கள் கடைசி நேரத்தில் திரையிட மறுத்துள்ளனர்.
ஓரளவிற்க்கு ஜனநாயகம் இருப்பதாக நம்பப்படும் அமெரிக்காவிலேயே, செய்தியாளர்களுக்கு இந்த நிலைமை என்றால், இந்தியாவில் செய்தியாளர்கள் நிலைமை குறித்து யோசித்து பாருங்கள்!
அப்படிஎன்றால் ஜனநாயகம் என்று ஒன்று இருப்பதாக சொல்கிறார்களே, அது யாருக்காக? அல்லது யாரிடம் உள்ளது?
இந்த ஆவணப்படம் குறித்த மேலும் தகவல்கள் கீழ்காணும் தளத்தில். 'http://www.johnpilger.com/articles/lannan-foundation-in-us-bans-pilger-film-and-cancels-visit'.
1 comments:
'ஓரளவிற்க்கு ஜனநாயகம் இருப்பதாக நம்பப்படும் அமெரிக்காவிலேயே, செய்தியாளர்களுக்கு இந்த நிலைமை என்றால், இந்தியாவில் செய்தியாளர்கள் நிலைமை குறித்து யோசித்து பாருங்கள்!'
- இக்கருத்தை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்! அமெரிக்காவில் ஓரளவு ஜனநாயகம் இருக்கிறது என்பதே பொய்!
Post a Comment