சென்னை பல்கலைக்கழகத்தில், இருதினங்களுக்கு முன், குற்றவியல் துறையில் பயின்ற மாணவர்களுக்கு, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான, வேலை உறுதி சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய, பல்கலைகழக துணைவேந்தர் திருவாசகம், பல்கலைகழகத்தில் மொத்தம் உள்ள துறைகளில், எழுபத்து ஐந்து சதவீத துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு, தங்கள் படிப்பை முடித்த உடன், வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில்(கேம்பஸ் இன்டர்வியு), நூறு சதவீதம் வேலை கிடைப்பதாக கூறினார். மேலும், அயல்மொழி துறையில்(ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்யன்) படிக்கும் மாணவர்களுக்கும், நூறு சதவீத வேலைவாய்ப்பு கிடைப்பதாக கூறினார்.
குற்றவியல் துறையை பொறுத்தவரை, அதன் பாடத்திட்டங்கள் தயாரிக்கும் குழுவில், பன்னாட்டு நிறுவனங்களின், அதிகாரிகளும் இடம்பெறுவதாக கூறினார். மேலும், பன்னாட்டு நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர்கள், இத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு, கௌரவ பேராசிரியர்களாக வந்து பாடம் எடுப்பதாகவும் கூறினார். இதனால்தான், இந்தத்துறையில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் வளாகத்தில் நடைபெற்ற நேர்காணலில் வேலை கிடைத்துள்ளதாக கூறினார். இதேபோல், பல்கலைகழகத்தில் உள்ள மற்ற துறைகளிலும், குற்றவியல் துறையில் மேற்கொள்ளும் நடைமுறையை கொண்டுவரபோவதாக கூறினார்.
அதாவது, பல்கலைகழகத்தின் பாடத்திட்டங்களை வகுக்கும் குழுவில், பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளை இடம்பெரசெய்வதும், அந்த அதிகாரிகளை கொண்டு, மாணவர்களுக்கு பாடம் சொல்லிதரசெய்வதுமே இந்த திட்டம். இதனால் மாணவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கலாம்? பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால், இனி மாணவர்கள் தாங்கள் பயிலும் துறையை முழுமையாக கற்க தேவைஇல்லை, அதாவது, வளாகத்தில் நடைபெறுவுள்ள நேர்காணலுக்கு தகுந்தாற்போல் பாடத்திட்டம் உருவாக்க பட்டிருக்கும், அதை மட்டும் படித்தால் போதும். படிப்பு முடிந்ததும் உடனடியாக வேலை. உதாரனத்திற்க்கு, ஹச்.சி.எல் என்ற நிறுவனம், வங்கிகளுக்கு மென்பொருள் தயாரித்து கொடுப்பதாக வைத்துக்கொள்வோம், அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி, குற்றவியல் துறை பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றால், அவர் நிச்சயம் வங்கி சார்ந்த பாடதிட்டங்களுக்கே அதிகம் அழுத்தம் கொடுப்பார். இதேபோல் மற்ற நிறுவனங்களும் தாங்கள் ஈடுபட்டுள்ள தொழிலுக்கு ஏற்ப பாடத்திட்டம் அமையவேண்டும் என்றே விரும்புவர்.
இதனால், அந்த துறையில் இயல்பாக கற்கவேண்டிய விஷயங்களை மாணவர்கள் கற்க முடியாமல் போகும். காலபோக்கில், ஒரு துறையில், ஆதி அந்தங்களை அளந்து, அதில் ஆராய்ச்சி செய்து, புதிய கண்டுபிடிப்புகளை செய்யவேண்டும் என்ற எண்ணம் மாணவர்களிடமிருந்து விலகிவிடும். இதனால், அந்த துறையில் பயிலும் மாணவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் எண்ணம் கொஞ்சமும் இருக்காது. இப்படி பட்ட மாணவர்கள் எப்படி தாங்கள் சார்ந்த துறையில் வல்லுனதுவம் பெற்று, அந்நியர்களிடம் கையேந்தாமல் சுயமாக புதிய கண்டுபிடிப்புகளை நாட்டிற்க்கு வழங்கமுடியும்?
அன்றைய கூட்டத்தில், இதுகுறித்த சந்தேகம், துணைவேந்தர் திருவாசகத்திடம் செய்தியாளர்களால் கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் நேரடியாக பதில்சொல்லாமல், குற்றவியல் துறையின் தலைவரை அதற்க்கு பதில் அளிக்க சொன்னார். கேட்கப்பட்ட கேள்விக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் அவர் பதில் அளிக்க, ஒளிப்பதிவாளர் ஒருவர், உணர்ச்சிவசப்பட்டு "நம்ம கேட்டது ஒன்னு, அவர் சொல்லுறது ஒண்ணா இருக்கே" என்று சக ஒளிப்பதிவாளர்களிடம் கூறி சிரித்துகொண்டார். இதிலிருந்து புரிந்துகொள்ளுங்கள் அந்த துறையின் தலைவர் எப்படி நழுவலாக பதில் அளித்திருப்பார் என்று.
மாணவர்கள் கவனத்திற்க்கு
ஏற்க்கனவே உயர்கல்விக்கு வழங்கிவந்த மானியங்களை, அரசு கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டு வருகின்றது.
ஆராய்ச்சி படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆய்வு கூடங்கள் எந்த கல்லூரியிலும், பல்கலைகழகத்திலும் இல்லாத காரணத்தினால், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவேண்டிய சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
அப்படி வெளிநாடு செல்லும் மாணவர்கள், அந்த நாடுகளில் தாங்கள் கண்டுபிடிக்கும் புதியவிஷயங்கள் இந்தியர்களுக்கு வந்தடைவதற்க்கு சிலநேரங்களில், ஒரு நூற்றாண்டு கூட ஆகிவிடுகின்றது.
ஆகவே, உயர்கல்விக்கு உரிய மானியம் வழங்க அரசை நிர்பந்திக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
வேலையை மட்டும் குறிகோளாக வைத்து கற்று கொடுக்கப்படும், அடிமை கல்வியை எதிர்க்க வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது.
இந்நிலையில், ஐ.ஐ.டி இல் பயிலும் மாணவர்கள், பொறியியல் பயில்வதற்கு இனிமேல் வருடத்திற்க்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தவேண்டும் என, அரசு அறிவிக்க உள்ளதாக ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது, மேலும் நமது வருத்தத்தை அதிகரித்துள்ளது.
0 comments:
Post a Comment