தாமதமாக கிடைக்கும் நீதி, அநீதிக்கு சமம்!



இன்று உச்சநீதி மன்றம், சமச்சீர்கல்வியை தமிழக அரசு இந்த வருடமே நடைமுறைபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இன்னும் பத்து நாட்களுக்குள் சமச்சீர் புத்தகங்களை பள்ளிகளுக்கு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து, சமச்சீர் கல்விக்காக போராடிய, மாணவர்கள், பெற்றோர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும், நீதிகிடைத்து விட்டதாகவும், நியாயம் ஜெயித்துவிட்டதாகவும் மார்தட்டிகொள்கின்றனர்.

உண்மையில் நடந்தது என்ன?

தற்போது காலாண்டு தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கவேண்டும் நம் பிள்ளைகள். நியாயமாக, பள்ளிகள் ஜூன் மாத முதல்வாரத்தில் திறந்திருந்தால் தற்போது மூன்றில் ஒருபங்கு பாடங்கள் நடத்தி முடிக்கபட்டிருக்கும். பொதுத்தேர்வை சந்திக்கும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரைவாசி பாடம் நடத்தி முடிக்கபட்டிருக்கும். ஆனால் நடந்தது என்ன? தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக, இரண்டரை மாதங்களாக, பாடப்புத்தகம் எதுவும் இல்லாமல் பள்ளிகள் நடைபெற்றன. இந்த பெருமை அனைத்தும் நம் முதல்வர் ஜெயலலிதா அவர்களையே சேரும். (இதற்க்கு நாம் அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது நன்றி சொல்லிக்கொள்ளலாம்). இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம் உள்ளது.

மே 22 ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூடத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்தி வைக்கபோவதாக முடிவெடுக்க பட்டது. (அப்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டிருந்தது) இந்த செய்தி வெளியான உடனேயே சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது (உயர்நீதி மன்றமும் கோடை விடுமுறையில் இருந்தது). நீதிமன்றத்தின் விடுமுறைகால அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விடுமுறைகால அமர்வு என்பதால், விசாரனைக்குமுன், வழக்கின் முக்கியத்துவத்தை அறிந்தபின்பே, அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா, இல்லையா என்பதை நீதிபதிகள் முடிவு செய்வார்கள். அதேபோல், சமச்சீர் வழக்கின் முக்கியத்துவமும் நீதிபதிகளால் ஆராயப்பட்டு(?!), சம்பிரதாயப்படி, தமிழகஅரசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை கிட்ட தட்ட பத்துநாட்களுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டது. 

இதற்க்கிடையில், தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்ததுடன், பள்ளிகள் சிறிது தாமதமாக ஜூன் 15 ஆம் தேதி திறக்கும் என்றும் அறிவித்தது. இதைதொடர்ந்து, சட்ட திருத்தத்தை எதிர்த்து ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. அதுவரை கவனிக்கபடாமல் இருந்த சமச்சீர் வழக்கு அனைவராலும் கவனிக்கப்பட ஆரம்பித்தது. ஜூன் 11 ஆம் தேதி, சென்னை உயர்நீதி மன்றம் சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இதனால், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறை படுத்தவேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தபடி, தமிழக அரசு, உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 

உச்சநீதிமன்றம், அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திருடனை காவலுக்கு வைத்த கதையைப்போல், சமச்சீர் புத்தகத்தை ஆராய்வதற்காக, தமிழக அரசே ஒரு குழுவை அமைக்கவேண்டும் என்றும், அந்த குழுவின் அறிக்கை சென்னை உயர்நீதி மன்றத்தில் சமர்பிக்கபட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, யாரெல்லாம் சமச்சீர் கல்விக்கு  எதிராக உள்ளார்களோ அவர்களை கொண்டு தமிழ அரசு  நிபுணர்கள் குழுவை(?) அமைத்தது. அக்குழு, 10000 பக்கங்களுக்கு மேலுள்ள, சமச்சீர் புத்தகங்களை, நான்கே அமர்வுகளில்(அதாவது 8 மணி நேரத்தில்) ஆராய்ந்து முடித்து, தனது அறிக்கையை ஜூலை 6 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது(அதுவும், உச்சநீதி மன்றம் விதித்த கடைசி நாளில்). அந்த அறிக்கையில் சமச்சீர் புத்தகங்கள் பயன்பட தகுதியற்றவை என (கொடுத்த காசுக்கு மேல் கூவி) நிபுணர்குழு கூறியது. 

உச்சநீதி மன்ற உத்தரவுபடி நிபுணர்குழு அறிக்கை சமர்பிக்கப்பட்ட உடனேயே விசாரணையை தொடங்கி, தினந்தோறும் விசாரணை நடத்தி, ஒருவாரத்திற்குள் உயர்நீதி மன்றம் விசாரணையை முடிக்கவேண்டும். ஆனால், அறிக்கை சமர்பிக்கபட்டபின், உயர்நீதி மன்றம், விசாரணையை மூன்று நாட்களுக்கு ஒத்திவைத்து, அதன்பின் சிலநாட்கள் விசாரணை நடத்தப்பட்டு, நான்குநாட்கள் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக ஜூலை 18 ஆம் தேதி  தீர்ப்புவழங்கியது. அந்த தீர்ப்பில், தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தில் கொண்டுவந்த திருத்தத்தை ரத்துசெய்து, இந்தவருடமே சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்தவேண்டும் என்றும், 22 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் புத்தகங்களை வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், கொஞ்சம்கூட கூச்சப்படாமல், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஜெயலலிதா அரசு.


உச்சநீதிமன்றம் இம்முறை, தொடக்கநிலையிலேயே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சமச்சீர் புத்தகம் வழங்க உயர்நீதி மன்றம் விதித்த கெடுவை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து, வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதன் பின் நடைபெற்ற விசாரணைக்கிடையே, புத்தகம் வழங்கும் காலத்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிப்பு செய்தது.  கிட்டத்தட்ட 18 நாட்கள் கழிந்த நிலையில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பில், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமுல்படுத்தவேண்டும் என்று, உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவு சரிதான் என்று கூறியுள்ள உச்சநீதி மன்றம், அதற்க்கான 25 காரணங்களையும் கூறியுள்ளது. 

நின்று, நிறுத்தி, ஆராயப்பட்டு முடிவெடுக்கபடவேண்டிய பல்வேறு வழக்குகளை, நீதிமன்றங்கள், ஒரேநாளில் தள்ளுபடி செய்வதை நாம் தினந்தோறும் பார்க்கலாம். அப்படிப்பட்ட நீதிமன்றங்களில் சமச்சீர் வழக்கு விசாரணையின்போது, பிள்ளைகள் புத்தகம் இல்லாமல் மாதக்கணக்கில் பள்ளிசென்று வருகின்றனர் என்ற செய்தி, பல்வேறு தருணங்களில், வழக்கரிஞர்களால் எடுத்துசொல்லபட்டும், நீதிபதிகள் அதுகுறித்து பெரிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. நீதிமன்றங்களில் மாணவர் நலன் கருதி இவ்வழக்கிற்காக, கூடுதல் கவனம் செலுத்தி, கூடுதல் நேரம் ஒதுக்கபடாவிட்டாலும், தேவையில்லாத கால தாமதம் கூட தவிர்க்கப்படவில்லை என்பதே உண்மை. 

"தாமதமாக கிடைக்கும் நீதி, அநீதிக்கு சமம்!"
சமச்சீர் பாடபுத்தகத்தில் இது போதிக்கப்படும் என்று நம்புவோம்.

- அசீப் 

அம்மாவுக்கு இரண்டாவது ஆப்பு!


அம்மாவுக்கு இரண்டாவது ஆப்பு!




'எவ்வாறு உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் 2 ஜி ஊழல் வழக்கில் ஜாமீன் வேண்டி உச்ச நீதிமன்றத்திலேயே மனு செய்து, அதை உச்ச நீதிமன்றமும் நிராகரித்து எப்படி தி.மு.க.வினர் அவமானப்பட்டார்களோ? அதே மாதிரியான அவமானத்தைதான் அ.தி.மு.க. அரசும் படப்போகிறது என்பது நிஜம்!'

கடந்த ஜூலை 18 ஆம் தேதி சமச்சீர் கல்வி குறித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கிடைத்தப் பிறகு மேலே உள்ளவாறு நாங்கள் கூறியிருந்தோம். அது இன்று நிஜமாகியிருக்கிறது!

கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் சமச்சீர் கல்வித் திட்டம், அதை நாம் ஏன் அமல் படுத்தவேண்டும்? என்கிற ஈகோவோ அல்லது சிறந்த முழுமையான சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்கிற நல்லெண்ணமோ தமிழக அரசுக்கு இல்லை. மாறாக, தனியார் பள்ளிகளின் தூண்டுதலுக்கு அரசு படிந்தது என்பதே நிதர்சன உண்மை!

ஏனெனில், அரசு மற்றும் தனியாரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்கவேண்டுமென ஆசைப்பட்டுத்தான் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கின்றனர். சமச்சீர் கல்வி அமலானால் அனைத்து அரசு மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒரே மாதிரியான சமமான, சீரான கல்வி வந்துவிடும், அவ்வாறு வந்தால் கல்வியை வியாபாரமாக்கிய தனியார் பள்ளிகளுக்கு பெருத்த பொருளாதார இழப்பு ஏற்படும். ஏனென்றால், மேற்கூறிய அரசு மற்றும் தனியாரில் வேலை பார்பவர்கள் குறைந்த செலவில் அரசு பள்ளியிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விடுவார்கள். அவ்வாறு சேர்த்தால் தங்களது கஜானா காலியாகிவிடும் என்பதை அறிந்த தனியார் முதலாளிகள் 'செட்டில்' செய்து அரசை பணியவைத்தனர். அரசும் அதனாலேயே எதையும் கண்டுகொள்ளாமல் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. தற்போது அதே உச்ச நீதிமன்றம் தனியாருக்கும், தமிழகத்தை ஆளும் அம்மாவுக்கும் ஆப்பு வைத்ததுபோல் தீர்ப்பைக் கூறியிருக்கிறது! 

இனியாவது தமிழக அரசு எதிலும் தனியாருக்கு சாதகமாக செயல்படாமல் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு செயல்படவேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்!

குறிப்பு: சமச்சீர் கல்வியில் அரசு மேற்கொண்ட இந்த வகையான நடவடிக்கை நிச்சயம் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும்!

- உமர் முக்தார் 

விரைவில்...


முஸ்லிம்கள்தான் காரணம்!

முஸ்லிம்கள்தான் காரணம்!



" இந்தியாவில் நடந்த, நடந்துவரும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் முஸ்லிம்கள்தான் காரணம். 

எங்கு, எந்த குண்டு வெடிப்பு நடந்தாலும் முஸ்லிம்கள்தான் கைதாகிறார்கள். 

முஸ்லிம்கள் வெள்ளிகிழமை ஜூம்மா தொழுகையின்போது, அங்கு தீவிரவாதத்தைதான் போதிக்கிறார்கள். எனவே, அனைத்து பள்ளிவாசல்களையும் தடை செய்ய வேண்டும்.

காசியிலுள்ள பள்ளிவாசலை முதலில் மூட வேண்டும்.

அனைத்து முஸ்லிம்களையும் ஹிந்துக்களாக மதம் மாற்றவேண்டும். அப்பொழுதுதான் தீவிரவாதம் அழிந்துபோகும்.

முஸ்லிம் பெண்களை, ஹிந்து இளைஞர்கள் திருமணம் செய்துகொண்டு, அவர்களை ஹிந்துக்களாக மாற்றவேண்டும்".

இதையெல்லாம் யார் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அரசியல் காமெடியன் என்று அழைக்கப்படும் பார்ப்பன "ஜனதா கட்சித்" தலைவர் சுப்ரமணியன் சுவாமிதான். மும்பையிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் அனாலிசிஸ் (DNA) என்ற பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் அந்த அறிவுஜீவி(அப்போது மும்பையில் வெயிலின் அளவு 37 டிகிரி செல்சிஸ்).

ஆட்சியாளர்களின் சூழ்ச்சியால் நடைபெற்ற, பல்வேறு கலவரங்களையும் கடந்து சகோதர, சகோதரிகளாகவும், நண்பர்களாகவும் முஸ்லிம்களும், ஹிந்துக்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் சு.சுவாமி இவ்வாறு பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது!

எந்த குண்டு வெடிப்பு இந்தியாவில் நடந்தாலும் முதலில் போலீஸாரும், உளவுத்துறையும் கைது செய்வது முஸ்லிம்களைத்தான். பிறகு தீர(!?) விசாரித்தப் பிறகே உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றனர்(!?). 

ராஷ்ட்ரிய சுயசேவா சங் (RSS) இந்தியாவில் எத்தனை குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பது சுப்ரமணியசுவாமிக்கு தெரியாதா என்ன?  இந்தியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளையும் அதன் பின்னணியில் செயல்பட்டவர்களை பற்றியும், முழு விவரங்களை திரட்டி, விரைவில் உங்கள் பார்வைக்கு வைத்து சுப்ரமணியசுவாமி போன்ற, பார்பன ஆதிக்க கும்பலின் முகத்திரையை கிழிக்க ஆவலாகவுள்ளேன்!

- உமர் முக்தார் 

377!

377!

தலைப்ப பாத்தாலே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், இது எத பத்தின கட்டுரைனு! 'ஆணும், பெண்ணும் இல்லாம, இயற்கைக்கு மாறா ஆணுடன் ஆணும், பெண்ணுடன் பெண்ணும் புணர்ச்சி மேற்கொண்டால், இந்த சட்டத்தின் மூலம் அவர்களைக் கைது செய்து தண்டிக்கலாம்' அப்டீங்குரதுதான் இந்த சட்டத்தோட சாராம்சம்.

ஆம்பளையையும், பொம்பளையும் இறைவன் படைச்சதே ரெண்டு பெரும் சேந்து சந்ததியை உருவாக்கத்தான். ஆனா சில (இப்ப பலரா பெருகிட்டாங்க) அரவேக்காடுங்க சொல்லவே நாக்கூசுற அளவுக்கு ஓரினச்சேர்கைல ஈடுபட்டுட்டு இருக்காங்க.

ஆம்பளையும் - ஆம்பளையும், பொம்பளையும் - பொம்பளையும்,  அரவாணியும் - அரவாணியும், அரவாணியும் - ஆம்பளையும் - பொம்பளையும் இப்டி பலவிதமானவங்க இருக்காங்க. அவங்கல்லாம் சேந்து லெஸ்பியன் - கே - பை செக்ஸுவல் - ட்ரான்ஸ்ஜென்டர் (LGBT) அப்டீங்கற அமைப்பையே தொடங்கி நடத்திகிட்டு வர்றாங்க.

அவங்களுக்கு ஆதரவா சில வருஷத்துக்கு முன்னால டெல்லி உயர் நீதிமன்றமே தீர்ப்புக் கூறியிருக்கு. நம்ம நாட்டுல நீதி சீரழிஞ்சு போய்கிட்டு இருக்குங்கிரதுக்கு இதுவும் ஒரு உதாரணம்! 377 சட்டத்த நீக்கணும்னு இந்த ஓரினச்சேர்கையாளர்கள் வருஷாவருஷம் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை வைக்கிறாங்க. ஆனா அரசாங்கம் பிடி கொடுக்காம இருக்கு. அந்த சட்டம் நீடிக்கிரதுதான் நல்லது. அப்பத்தான் இந்தமாரி ஜந்துக்கல்லாம் திருந்துங்க. 

இப்டி அவங்க பண்றது நோயா? என்னனு தெரில. நண்பர்கல்கிட்டையும் சொல்லமுடியாது, பெற்றோரும் வீட்டவிட்டு தொரத்திவுடுறாங்க, இவ்ளோவையும் தாங்கிகிட்டு ஓரினச்சேர்கைல ஈடுபடனுமா? 

இந்த ஓரினச்சேர்கை கலாச்சாரம் நேத்து இன்னக்கி தோன்றினது கிடையாது, கிட்டத்தட்ட 2000 வருஷத்துக்கு முன்னாடியே மத்ய கிழக்கு நாட்களான கல்ப் நாடுகள்ல தோன்றியது! அது வாழையடி வாழையா தொடர்ந்து வந்துட்டே இருக்கு! 

என்ன பொருத்தவரைக்கும் இந்தமாரி ஓரினச்சேர்க்கையாளர்கள கண்டதும் சுட உத்தரவு போடணும்! அப்பத்தான் திருந்துங்க!

இன்னக்கி ஏன் நா இதபத்தி திடீர்னு எழுதுறேன்னு நீங்க நினைக்கலாம்? அதுக்கு எந்த காரணமுமில்ல, இன்னக்கி சண்டே வேற எந்த முக்கியமான செய்தியும் எனக்கு தெரிஞ்சு இல்ல, அதான் இத பத்திலாம் எழுதவேண்டியதா இருக்கு!

- உமர் முக்தார் 


உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொருவரும் மற்றவரிடம் பல பரிமாணங்களில் அன்பு செலுத்துகிறோம். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள், உறவுகள், காதலர்கள் என்று ஒவ்வொருவரிடமும் காட்டும் அன்பு, இயற்கையாக மனிதனிடம் அமைந்துள்ளது.

இவர்களில் யாரிடம் அதிக அன்பு செலுத்தப்படுகிறது? என்பதெல்லாம் அளவிடக் கூடியதல்ல. அன்பு செலுத்தும்போது அதன் பரிமாணம், ஆளுக்கு ஆள் மாறுபடுவதை உணர முடியும்.

ஆனால் நட்புக்கு பரிமாணமும் இல்லை, அளவும் இல்லை. அது நண்பர்களிடம், தோழிகளிடம் மட்டுமே காட்டப்படக் கூடியது. உறவுகளிடம்,  நண்பனைப் போல்' பழகினேன் என்றுதான் கூறுவார்களே தவிர,  நண்பனாக' பழகினேன் என்று யாரும் கூறமாட்டார்கள். இதயம் ஏற்றுக் கொண்ட நண்பர்களுக்கே/தோழிகளுக்கே உரித்தாக காட்டப்படும் எதிர்பார்ப்பற்ற விஷேச அன்புதான் நட்பு.

நட்பை அல்லது நண்பர்களை, தோழிகளை போற்றும் விதத்தில்தான் அதற்கென்று ஒரு நாளை அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டு, அது நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட சம்பவம் எதுவும் இல்லை என்றே வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

ஆனால் முதலாம் உலக யுத்தத்தின் மோசமான பாதிப்புகளே இந்த தினத்தை ஏற்படுத்தும் காரணமாக அமைந்தன என்று நம்பப்படுகிறது.

மனிதர்களுக்கு இடையேயுள்ள மனக்கசப்புகள் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையே இருக்கும் கசப்புணர்ச்சிகள் மாறி, நட்பு உணர்வை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிதான் நண்பர்கள் தினம். இதற்கான முடிவு 1935 ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டது.

நண்பர்களை, தோழிகளை கவுரவப்படுத்தவும், மேலும் பலருடன் நட்புணர்வு கொள்ளவும் ஒரு நாளை அதற்கென்று அர்ப்பணிக்க வேண்டும் என்று அதில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினம் அல்லது நட்பு தினமாகக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தனர். தேசிய அளவில் கொண்டாடப்பட்ட இந்த தினம், இன்று சர்வதேச அளவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.

பெற்றோர் சகோதரர் போன்ற உறவுகள், அவரவர் விருப்பத்தில் உருவானதல்ல. ஆனால் நட்பு என்பது அவரவரே முடிவு செய்யும் ஒன்று. .

 எல்லாருமே நண்பர்கள், தோழிகள் அல்ல, எல்லாரும் காட்டுவதும் நட்பு அல்ல' என்ற கருத்தை உலகத்தில் நடக்கும் பல சம்பவங்கள் உறுதி செய்து வருகின்றன...
                           

விரைவில் கைது!

விரைவில் கைது!


கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியின் நிழலாக வளம் வந்தவர் முன்னாள் தமிழக உளவுத்துறை கூடுதல் இயக்குனர் திரு.ஜாபர் சேட். 

1996 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கலைஞர் ஒரு ஊரில் பிரச்சாரத்திற்கு போனபோது, அங்கு கலைஞரை கொலை செய்வதற்கு கத்தியைத் தூக்கிக்கொண்டு ஒருவன் ஓடி வந்தான். உடனே அவனை தடுத்து கலைஞரைக் காப்பாற்றினார் அப்போது அம்மாவட்ட கண்காணிப்பளராக இருந்த ஜாபர் சேட். பிறகு அத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த கருணாநிதியிடம் யாரை தங்கள் பாதுகாப்பு கண்காணிப்பளராக நியமிக்கலாமென அதிகாரிகள் கேட்டதற்கு, தன்னை காப்பாற்றிய சம்பவத்தைச் சொல்லி, அந்த நபரை கண்காணிப்பளராக நியமியுங்கள் என கருணாநிதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்தே ஜாபர் கருணாநிதியுடன் நெருக்கமானார்!

1996 - 2001 ஐந்தாண்டுகள் ஆட்டம்போட்டுவிட்டு, பிறகு 2001 - 2006 ஐந்தாண்டுகள் அ.தி.மு.க. ஆட்ச்சியில் அடக்கிவாசித்தார். பிறகு 2006 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சியமைத்ததும் அசுர வளர்ச்சி கண்டார். அப்பொழுதுதான், அதிகாரம் கண்ணை மறைக்க, தவறுகள் செய்யத்தொடங்கினார். தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், விருப்ப வீடு வழங்கும் திட்டத்தில் கோல்மால் செய்து ஒரே வீட்டு மனையை மூன்று முறை பெயர் மாற்றி வாங்கியுள்ளார். 

தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பெற்ற நிலத்தை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாதென்ற விதியையும் மீறி, லேன்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து பண்ணிரண்டு அடுக்குகளைக் கொண்ட குடியிருப்பைக் கட்டிவருகிறார். 

அதெல்லாம் தற்போது ஆட்சிமாரியபின் தோண்டியெடுக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் கடந்த வாரம் அவரின் இல்லங்களிலும், அவரின் தொடர்புடையவர்களின் இல்லங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஜாபரின் அண்ணா நகர் இல்லத்தில் கடந்த ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல்கள் அடங்கிய சி.டி.க்களைக் கைப்பற்றியுள்ளனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

தற்போது முதற்கட்டமாக தன்னுடைய ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாம் சிறப்புக் கூடுதல் இயக்குனர் பதவியிலிருந்து பணி இடை நீக்கம் (suspend) செய்யப்பட்டுள்ளார்!

அடுத்த கட்ட நடவடிக்கையாக, இன்னும் குறைந்தது ஒரு மாதத்திற்குள் ஜாபர் சேட் கைது செய்யப்படுவது நிச்சயம்!

இந்தக் கைது தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய முறைகேடுத் தொடர்புடையது. இதற்கு அடுத்தபடியாக, ஜாபர் அடிக்கடி வெளிநாடு சென்றுவந்துள்ளார், அது 
2 ஜி மூலம் கிடைத்த பணங்களை வெளிநாடுகளில் பதுக்கிவைக்க அதிகாரிஎன்ற போர்வையில் சென்றுவந்துள்ளாரா? அனுமதி பெற்று சென்றுவந்துள்ளாரா? என்பது குறித்தும் அவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்து வருகின்றனர்! இதன் மூலம் சி.பி.ஐ.யின் பார்வை இவர்மீது விழுந்துள்ளது. தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய வழக்கு முடிந்தவுடன் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. ஜாபரை கைது செய்ய நிறையவே வாய்ப்புள்ளது!

ஆக, இப்போதைக்கு அவர் நிம்மதியாக உறங்க வாய்ப்பேயில்லை!

- உமர் முக்தார் 
(reporteromar@gmail.com)

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive