உள்ளாட்சித் தேர்தல், தயாராகும் கட்சிகள்!
தமிழகத்திலுள்ள பத்து மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும், மீதமுள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும் வர்ற அக்டோபர் மாசத்தோட பதவிக்காலம் முடியிது. திட்டமிட்டபடியே அக்டோபர் மாசம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்னு முதல்வர் ஜெயலலிதாவும் சட்டமன்றத்துலேயே அறிவிச்சிட்டாங்க. அதுக்கான வேலைகள் தொடங்கிருச்சுனு நெனைக்கிறேன். டாஸ்மாக் அய்யர் என கூறப்படும் தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அதுக்கான வேலைகள தொடங்கிட்டாரு!
கடந்த 2006 ஆம் ஆண்டுல நடந்த உள்ளாட்சித் தேர்தல்ல அப்ப ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. பல திருட்டு வேலைகள செஞ்சாங்க. கள்ளவோட்டு போடுரபோது வின் டிவி கேமராமன் (நா வேலைபாக்குற டிவி) விஷுவல் எடுத்தாரு, அந்த விஷுவல வச்சுத்தான் ஜெயலலிதாவே கேஸ் போட்டு 99 எடத்துக்கு மீண்டும் தேர்தல் நடந்துச்சு. அதேமாரி இப்ப ஆளுங்கட்சியா இருக்குற அ.தி.மு.க.வும் தகிடுதத்தம் செய்ய ரெடியா இருக்கு (ஆனா இப்ப அ.தி.மு.க. எவ்ளோ கள்ளவோட்டுப் போட்டாலும் வின் டிவில எடுக்கவும் மாட்டோம், நியூஸ் போடவும் மாட்டோம், ஏன்னா எங்க டிவி எப்பவும் அ.தி.மு.க. சப்போர்ட்).
சட்டமன்ற பொதுத் தேர்தல்ல விட்டடத உள்ளாட்சித் தேர்தல்ல பிடிச்சிரனும்னு தி.மு.க.வும் தயாராயிட்டிருக்கு (இருக்குற குடும்பச் சண்டைல எங்க தயாராகுறது?).
பா.ம.க., தி.மு.க. கூட்டனிய விட்டு ஓடிருச்சு. விடுதலைச் சிறுத்தைகளும் பா.ம.க.கூட சேந்துருச்சு, (தி.மு.க.வ விட்டு விரைவில் இதுவும் ஓடப்போகுது).
இரண்டு பேரும் சேந்து உள்ளாட்சித் தேர்தல சந்திக்கப் போறாங்களாம்!
காங்கிரஸ்ல கோஷ்டி மோதல மொதல்ல முடிச்சிகிட்டு அப்பறம்தான் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுவாங்க! அவங்களும் அநேகமா தி.மு.க.வ விட்டுப் போயிருவாங்கனு (எனக்கு)த் தோணுது! கடைசில தனிக்காட்டு ராஜாமாரி தி.மு.க. மட்டும்தான் போட்டியிடும்போலருக்கு!
அ.தி.மு.க.வுக்கு, 75 சதவீதம் வெற்றினு தனியார் சர்வே நிறுவனமும்,
80 சதவீத வெற்றினு தமிழக உளவுத்துறையும் (சமச்சீர் கல்வி விவகாரத்துக்கு முன்னால) அரசுட்ட ரிப்போர்ட் கொடுத்துருக்காம். அந்த தைரியத்துல அ.தி.மு.க.வும் ரெடி ஆயிருச்சு.
அ.தி.மு.க. கூட்டணியில சி.பி.ஐ., சி.பி.எம்., ச.ம.க., ம.ம.க., புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை இப்டி எல்லாமே கூட்டணியில்தான் இருக்கு.
தே.மு.தி.க. பொருத்தவர விஜயகாந்த் அநியாயத்துக்கு பொறுமையா இருக்குறத பாத்தா அ.தி.மு.க. கூட்டணியில நீடிப்பாருனுதான் தோணுது!
இதுக்கு இடையில காமெடி பீஸ் மாரி விஜயோட மக்கள் இயக்கம் வேற போட்டியிடப் போகுதாம்!?
எப்டியோ பொதுத் தேர்தல் மாதிரி உள்ளாட்சித் தேர்தலும் ரொம்ப இண்டரெஸ்ட்டிங்கா இருக்க போகுது!
- உமர் முக்தார்