திருப்பூர் பகுதியில் 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றில் 502 தொழிற்சாலைகள், 20 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்கின்றன. எஞ்சிய 252 தொழிற்சாலைகள் தனித்தனியே சுத்திகரிப்பு நிலையங்களை வைத்துள்ளன. இவைகளிலிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 87,250 கிலோ லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு, நொய்யல் ஆற்றில் விடப்பட்டு வந்தது.
சாயப்பட்டறைகளால் விளை நிலங்களும், நீர் ஆதாரங்களும் மாசு அடைவதாக விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடுத்தனர். சென்னை உயர் நீதிமன்றம் 1998 ஆம் ஆண்டு அனைத்து சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகளும் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால் அந்த தீர்ப்பு நடைமுறை படுத்தப்பட்டதா என கண்கானிக்க அப்போதைய அரசும் அதிகாரிகளும் அலட்சியம் காட்டியதால், தொடர்ந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீரால் பாதிப்பு ஏற்பட்டது. 2003 ஆம் ஆண்டு, நொய்யல் ஆறு பாசன விவசாயிகள் மீன்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது தீர்ப்பில், 31.7.2007-க்குள் சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் கழிவு நீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை (Zero discharge) அடையப்படவில்லை எனில், சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் மூடப்படடும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில், தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்ற ஆணைக்கு தடையுத்தரவு பெற்றது. 2009ல் உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்து, 3 மாத காலத்திற்குள் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலை எட்டப்படாததால், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் பகுதியில் உள்ள 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் 1.2.2011 முதல் மூடப்பட்டன. விவசாயிகள் மகிழ்ந்தனர்.
சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில், தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்ற ஆணைக்கு தடையுத்தரவு பெற்றது. 2009ல் உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்து, 3 மாத காலத்திற்குள் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலை எட்டப்படாததால், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் பகுதியில் உள்ள 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் 1.2.2011 முதல் மூடப்பட்டன. விவசாயிகள் மகிழ்ந்தனர்.
இதனால் திருப்பூர் பகுதி ஜவுளித் தொழில் முடங்கிப் போனது. திருப்பூர் ஜவுளித் தொழிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்தனர். தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியும் பாதிப்படைந்தது. இப்பிரச்சனையைத் தீர்க கருனாநிதி அரசு முன்வரவில்லை அவர்களுக்கு செம்மொழி மாநாடு நடத்தவே நேரம் போதவில்லை.
இந்நிலையில் தற்போதைய அ தி மு க அரசு இப்பிரச்சனையை தீர்க சில ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதன்படி, கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை எட்டுவதற்கான புதிய தொழில்நுட்பத்தை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை முறையில் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தை எல்லா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் கடைபிடிக்க இயலுமா என்பது சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு தான் தெரிய வரும். அடுத்ததாக குஜராத் மாநிலம் பாரூச் என்னுமிடத்தில்¢ நானோ தொழில்நுட்பத்தின் மூலம் 20 சதவீதம் கழிவுநீரை 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, நீர் ஆவியாக்கப்பட்டு, குளிர்விக்கப்பட்ட நீரும், பெறப்படும் உப்பும் மீண்டும் தொழிற்சாலையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை திருப்பூரில் கடைபிடிக்க இயலுமா என்பதை ஆராய ஒரு குழு குஜராத் மாநிலத்திற்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளது.
இந்த இரண்டில் எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானாலும் ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்திற்கும் சுமார் 10 கோடி ரூபாய் தேவைப்படும். அதாவது, மொத்தத்தில் சுமார் 200 கோடி ரூபாய் தேவைப்படும். அந்தத் தொகையை வட்டியில்லா கடனாக வழங்கப்போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. எந்தத் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பது என்பது குறித்து இரண்டு மாத காலத்திற்குள் முடிவெடுக்கப்பட்டும் எனவும் அதன் பின் சோதனை முறையில் மூன்று மாதங்கள் இயக்கிய பின்னர், உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு பிறகே அத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்குமாம். நிதியுதவி செய்வதோடு கடமை முடிந்ததென்று விலகிவிடாமல் அத்திட்டங்களை அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் திருப்பூர் சாயப்பட்டறை மற்றும் விவசாயிகள் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இந்த திட்டங்கள் அமையுமா என்ற கேள்வியோடு காத்திருக்கிறார்கள் விவசாயிகளும், வேலையிலந்து தவிக்கும் தொழிலாளர்களும்.
ஆனந்த்குமார்