சொத்து விவரங்கள் வெளியீடு!
பிரதமர் அலுவலகம் |
மன்மோகன் சிங்
தகவல் அறியும் சட்டத்தின் கீழ், பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளது பிரதமர் அலுவலகம். அவருடைய மொத்த சொத்து மதிப்பு 4.8 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தெற்கு தில்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் ஒரு பிளாட்டும், சண்டிகரில் ஒரு வீடும் உள்ளன. அவருக்குச் சொந்தமாக மாருதி 800 (1996 மாடல்) கார் ஒன்று உள்ளது. அவருக்குச் சொந்தமாக நிலம் எதுவும் இல்லை என்றும் 150 கிராம் அளவுக்கு தங்க நகைகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மற்ற அமைச்சர்களின் சொத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அடேங்கப்பா கமல்நாத்!
கமல்நாத்
மத்திய அமைச்சர்களிலேயே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கமல்நாத்துதான் அதிக சொத்து உள்ள அமைச்சர், அரசியல்வாதி! அவருக்கு 263 கோடி ரூபாய் சொத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியில்லாத நிதி அமைச்சர்!
பிரணாப் முகர்ஜி
மத்திய நிதி அமைச்சரான திரு.பிரணாப் முகர்ஜிக்கு 1 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பரம்பரைப் பணக்காரர் ப.சிதம்பரம்!
ப.சிதம்பரம்
மத்திய உள்துறை அமைச்சரான திரு.ப.சிதம்பரத்துக்கு 11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும், அவரது மனைவி பெயரில் 12 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சரத் பவார்
மத்திய வேளாண் துறை அமைச்சரான திரு.சரத் பவாருக்கு 12 கோடி ரூபாய் சொத்துகளும்,
முரளி தியோரா
திரு.முரளி தியோராவுக்கு 15 கோடி ரூபாய் சொத்துகளும்,
தயாநிதி மாறன்
ஜவுளித்துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த திரு.தயாநிதி மாறனுக்கு வெறும் 3 கோடி ரூபாய் சொத்துகளும்,
எஸ்.எம்.கிருஷ்ணா
வெளியுறவுத்துறை அமைச்சரான திரு.எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு 2 கோடியே 34 லட்சம் அசையா சொத்துகளும், 4 கோடியே 81 லட்சம் அசையும் சொத்துகளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பாவமான பாதுகாப்புத்துறை அமைச்சர்!
ஏ.கே.அந்தோனி
மத்திய அமைச்சர்களிலேயே பாதுகாப்புத்துறை அமைச்சரான திரு.ஏ.கே.அந்தோனிக்குதான் குறைவான சொத்துகள் உள்ளன. அவருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளும், அவரது மனைவி பெயரில் 30 லட்சம் மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாராயணசாமி
சில அமைச்சர்களின் சொத்துகள் மட்டுமே இன்று (03.09.2011) வெளியிடப்பட்டுள்ளது. இதை வெளியிட்ட பிரதமர் அலுவலகத்தை கவனித்துவரும் பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சரான திரு.நாராயணசாமியின் சொத்து விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது!
- உமர் முக்தார்.