வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகிவிட்டது... இன்று(25.10.11) சென்னையில் பெய்த மழையில் சென்னையே ஸ்தம்பித்துவிட்டது. ஒரு மணி நேர மழைக்கே சென்னையின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் போல் தண்ணீர் சூழ்ந்தது. குறிப்பாக சிந்தாதிரிபேட்டை, எழும்பூர், நேப்பியர் பாலம் அருகில், கீழ்பாக்கம், புளியந்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் வெள்ளக்காடாக மாறியது. இதனால் சென்னை நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னையே ஸ்தம்பித்தது. சென்னையில் மழை நீர் கால்வாய்கள் சரிவர பராமரிக்காததே இதற்கு காரணம். மழைகாலம் தொடங்கும் முன்னே மழை நீர் வடிகால்வாய்களை சரிசெய்யவேண்டியது அரசின் கடமையாகும். இனியாவது இதில் கவனம் செலுத்துமா அரசு?
பா. மணிகண்டன்
செய்தியாளர்