"நாடகமே சிறந்த ஊடகம் "
நாடகம் என்றால் மேற்கத்திய நாடுகளை நினைத்துகொண்டு மிரள வேண்டாம். நமது மரபில் எவ்வளவோ நாடகத்தன்மை கொண்ட,நமது அடையாளங்களுடன் கூடிய அம்சங்களை கொண்ட கலைகள் உள்ளன. அவற்றை கண்டெடுத்து சரியாக நாடகத்தில் புகுத்தினாலே நாடகம் பெரும் சக்தியாக உருவாக முடியும்.
சமுதாயத்தில் இருக்கின்ற ,வரபோகின்ற எண்ணற்ற அவலங்களை நன்றாக காட்சிபடுத்தினால் நிறைய நாடகங்கள் உருவாகும். அது மட்டுமல்லாமல் பிரச்சனைகள் குறித்து, மக்களிடம் எளிதில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
மக்களுக்கு பணி செய்வதாக கூறி ஒரு சில அல்ல, ஒட்டுமொத்த ஊடகங்களும் தனது முதலாளிகளின் சொந்த லாப நஷ்டத்துக்காக மட்டும் தான் இயங்கிகொண்டும் ,இயக்கபட்டும் வருகின்றன.
நாடகத்தால் பல்வேறு மாற்றங்கள் நம்நாட்டில் நிகழ்த்தப்பட்டு உள்ளன. குறிப்பாக சுதந்திர போராட்டத்தில் நாடகம் பெரும் பங்கை வகித்தது. ஆனால் "சுதந்திரமே" நாடகம் என்பதை உணர்த்துவதற்கு இன்று கட்டாயம் நாடகங்கள் தேவைபடுகின்றன.
"ஊடகத்தால் உணர்த்துவதை விட நாடகத்தால் நிச்சயம் நடத்தி காட்ட முடியும்"
நாம் சினிமாவில் ஆழமாய் ஊரிவிட்டதால், நாடகத்திலும் அதன் தன்மையை எதிர்பார்க்கிறோம். நாடகத்தின் தனித்தன்மை வேறு ,சினிமாவின் தன்மை வேறு. ஆனால் நாடகத்தினால் ஏற்படும் அனுபவம் அளப்பரியது.
நாடகம் ஒரு கட்டுபாடற்ற கலை. எந்த கலையை விடவும் கூடுதல் பாதிப்பை நாடகம் மூலம் ஏற்படுத்த முடியும். சொல்லவரும் கருதிட்கேட்ப, பிரட்சனைகளுக்கேட்ப, சூழலை ஏற்படுத்தி நடித்தால், நிச்சியம் மக்களுக்கு கருத்தை எளிதில் விளங்க வைக்க முடியும்.
ஊடகத்தின் வாயிலாக உண்மைகளை மறைத்தும் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டு வரும் இந்த காலத்தில், நல்ல கருத்துடைய நாடகங்களை கலைஞ்ர்கள் இயக்க முன் வரவேண்டும்.
"மக்களுக்கான கலைஞ்னே! உண்மையான கலைஞன்!!"
நல்ல கருத்துகளை நாடகங்களின் வாயிலாக அறிகின்ற போதுதான், போலிகளை மக்கள் அடையாளம் காணமுடியும். நல்ல நாடகங்களின் வழியாக சமூகத்தில் இல்லாமல் போன ஜனநாயகத்தை எளிதில் புரிந்து மற்றும் புரியவைக்க முடியும்.
எல்லையற்று, கட்டுபாடற்று விரிந்து கொண்டிருக்கும் ஊடகங்களின் பொய் பிரச்சாரங்களை, நாடகத்தின் மூலம் கட்டாயம் கட்டுபடுத்த வேண்டும்...
-தமிழரசன்