விரைவில் கைது!

விரைவில் கைது!


கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியின் நிழலாக வளம் வந்தவர் முன்னாள் தமிழக உளவுத்துறை கூடுதல் இயக்குனர் திரு.ஜாபர் சேட். 

1996 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கலைஞர் ஒரு ஊரில் பிரச்சாரத்திற்கு போனபோது, அங்கு கலைஞரை கொலை செய்வதற்கு கத்தியைத் தூக்கிக்கொண்டு ஒருவன் ஓடி வந்தான். உடனே அவனை தடுத்து கலைஞரைக் காப்பாற்றினார் அப்போது அம்மாவட்ட கண்காணிப்பளராக இருந்த ஜாபர் சேட். பிறகு அத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த கருணாநிதியிடம் யாரை தங்கள் பாதுகாப்பு கண்காணிப்பளராக நியமிக்கலாமென அதிகாரிகள் கேட்டதற்கு, தன்னை காப்பாற்றிய சம்பவத்தைச் சொல்லி, அந்த நபரை கண்காணிப்பளராக நியமியுங்கள் என கருணாநிதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்தே ஜாபர் கருணாநிதியுடன் நெருக்கமானார்!

1996 - 2001 ஐந்தாண்டுகள் ஆட்டம்போட்டுவிட்டு, பிறகு 2001 - 2006 ஐந்தாண்டுகள் அ.தி.மு.க. ஆட்ச்சியில் அடக்கிவாசித்தார். பிறகு 2006 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சியமைத்ததும் அசுர வளர்ச்சி கண்டார். அப்பொழுதுதான், அதிகாரம் கண்ணை மறைக்க, தவறுகள் செய்யத்தொடங்கினார். தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், விருப்ப வீடு வழங்கும் திட்டத்தில் கோல்மால் செய்து ஒரே வீட்டு மனையை மூன்று முறை பெயர் மாற்றி வாங்கியுள்ளார். 

தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பெற்ற நிலத்தை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாதென்ற விதியையும் மீறி, லேன்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து பண்ணிரண்டு அடுக்குகளைக் கொண்ட குடியிருப்பைக் கட்டிவருகிறார். 

அதெல்லாம் தற்போது ஆட்சிமாரியபின் தோண்டியெடுக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் கடந்த வாரம் அவரின் இல்லங்களிலும், அவரின் தொடர்புடையவர்களின் இல்லங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஜாபரின் அண்ணா நகர் இல்லத்தில் கடந்த ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல்கள் அடங்கிய சி.டி.க்களைக் கைப்பற்றியுள்ளனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

தற்போது முதற்கட்டமாக தன்னுடைய ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாம் சிறப்புக் கூடுதல் இயக்குனர் பதவியிலிருந்து பணி இடை நீக்கம் (suspend) செய்யப்பட்டுள்ளார்!

அடுத்த கட்ட நடவடிக்கையாக, இன்னும் குறைந்தது ஒரு மாதத்திற்குள் ஜாபர் சேட் கைது செய்யப்படுவது நிச்சயம்!

இந்தக் கைது தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய முறைகேடுத் தொடர்புடையது. இதற்கு அடுத்தபடியாக, ஜாபர் அடிக்கடி வெளிநாடு சென்றுவந்துள்ளார், அது 
2 ஜி மூலம் கிடைத்த பணங்களை வெளிநாடுகளில் பதுக்கிவைக்க அதிகாரிஎன்ற போர்வையில் சென்றுவந்துள்ளாரா? அனுமதி பெற்று சென்றுவந்துள்ளாரா? என்பது குறித்தும் அவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்து வருகின்றனர்! இதன் மூலம் சி.பி.ஐ.யின் பார்வை இவர்மீது விழுந்துள்ளது. தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய வழக்கு முடிந்தவுடன் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. ஜாபரை கைது செய்ய நிறையவே வாய்ப்புள்ளது!

ஆக, இப்போதைக்கு அவர் நிம்மதியாக உறங்க வாய்ப்பேயில்லை!

- உமர் முக்தார் 
(reporteromar@gmail.com)

விதைகளை விற்றுவிட்ட பாவிகள்

Microsoft ன் வியாபார வியூகம் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது கணினியின் இயக்கு மென்பொருளான windows operating system, Microsoft ன் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதே நேரம் இந்த os ல் இயங்கும் அனைத்து மென்பொருள்களும் Microsoft ன் தயாரிப்பாகவோ அல்லது Microsoft னால் அங்கிகரிக்கப்பட்டதாவோதான் இருக்கும். i pod, i phone உள்ளிட்ட apple ன் தயாரிப்புகளும் இதே சாரம்சத்தை கொண்டதாகவே இருப்பதை காணலாம். இதே யுத்தியைதான் விவசாயத்துறையிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளது பல வெளிநாட்டு நிறுவனங்கள். 


விவசாயப் பின்னனியில் வளந்தவர்களுக்கு நன்றாக தெரியும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியத்தில் ஒருபகுதியை அடுத்த போகத்திற்கு விதைப்பதற்காக தனியாக எடுத்துவைப்பது வழக்கம். இந்த விதைகளின் மூலமே பாரம்பரிய தானியங்கள் விளைவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய வெளிநாட்டு நிறுவனங்களின் அமோக விளைச்சல் என்ற விளம்பரங்களினாலும் அந்நிறுவனங்களை ஊக்குவித்த மத்திய, மாநில அரசுகளினாலும் இன்று இந்திய விவசாயிகள் விதைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களிடம்  கையேந்தி நிற்க்கும் நிலை உருவாகியுள்ளது.


இந்நிறுவனங்கள் விற்க்கும் விதைகளுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் உரங்களையும் கட்டாயம் பயன்படுத்தவேன்டும். அதுமட்டும் அல்லாமல் காலம் காலமாக நாம் பின்பற்றி வந்த விவசாய முறையும் முற்றிலும் மாற்றப்டுகிறது. இந்த விதைகளின் மூலம் விளைவிக்கப்படும் தானியத்தை மீன்டும் விதையாக பயன்படத்துவது இயலாத காரியம். மேலும் இந்த விதைகளையும் உரங்களையும் பயன்படுத்துவதினால் சில ஆண்டுகளில் அந்த நிலம் விஷத்தன்மையுடையதாக மாற்றப்படுகிறது. 

விளைவுகள் அனைத்தும் தெரிந்திருந்தபோதிலும் அரசு இதை தொடர்ந்து ஆதரித்துவருகிறது.
                                                                                                                              ஆனந்த்குமார்

வங்கி ஊழியர் போராட்டம்!


நாளை இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். "வங்கிகளை தனியார் மயமாக்காதே!" என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும். 

இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். தேசியவங்கிகள் அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட, மத்திய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதாக கூறினார் அவர். இந்த திட்டத்தை நிறைவேற்றவே, வங்கி துறையில் காலியாக உள்ள நான்கரை லட்சம் காலி பணியிடங்களை, கடந்த பதிமூன்று வருடங்களாக நிரப்பாமல், மத்திய அரசு அடம்பிடித்து வருவதாகவும் கூறினார் அவர். நாட்டில் தினந்தோறும் லட்சக்கணக்கான பேர் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிந்துவிட்டு, வேலைக்கான செய்திவரும் என்று காத்திருக்கும்போது, வங்கித்துறையில் உள்ள, இவ்வளவு காலிபணி இடங்களை அரசு நிரப்பாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, உண்மையில் தேசிய வங்கிகள் லாபத்தில் செயல்படுகிறதா என்று அவரிடம் கேட்டோம். அதற்க்கு அவர், தேசிய வங்கிகளில், லாபம் என்பதையும் தாண்டி, நம் பணம், நம்மிடம்பத்திரமாகவும் உள்ளதாக கூறினார். 

அமெரிக்காவில் அடிக்கடி வங்கிகள் திவால் ஆகும் செய்தியுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அவர் சொன்ன "பத்திரம்" என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் புரிந்தது. 

வங்கி ஊழியர்களின் உண்மையான கோரிக்கை வெற்றியடைய வாழ்த்துவதுடன், தனியார்மயத்துக்கு எதிரான எங்கள் கருத்தையும் பதிவு செய்கிறோம்! 

புர்கா தடை - கலாசார ஒடுக்குமுறை!






ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்சைத் தொடர்ந்து இத்தாலியும் தற்போது முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய புர்காவைத் தடை செய்துள்ளது! 

பெண்ணியவாதிகள் மத்தியில் இது வரவேற்கதக்க விஷயம் என்றாலும், இந்த விஷயத்தை, முஸ்லிம் மக்கள் மீது கலாசாரரீதியாகவும், மேற்கத்திய நாட்டு அரசுகள், கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறையின் ஒரு அங்கமாகவே பார்க்கவேண்டும்.

ஏற்கனவே டென்மார்க்கில் ஒரு பத்திரிகை முஸ்லிம்களின் போற்றுதலுக்குரிய முகமது நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரமா போட்டது. அதைதொடர்ந்து வளைகுடா நாடுகள் மொத்தமும், உலகத்துலேயே பாலுக்கு பேர்போன டென்மார்க்கிலிருந்து ஏற்றுமதியாகிற பொருட்கள தடை செய்ததன் மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டினர். 
இருந்தபோதும், மேற்கத்திய நாட்டு அரசாங்கங்கள், முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்தவில்லை.

இந்த இடத்தில் ஒருவிஷயத்தை சொல்லவிரும்புகிறேன். எனக்குதெரிந்த ஒரு டாக்டர், முப்பது வருடங்களுக்குமுன் அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அவர் ஒரு முஸ்லிம். அமெரிக்க குடிஉரிமை பெற்றவர். வருடம் ஒருமுறை இந்தியா வந்து செல்வார். இவ்வாறு அவர், ஒவ்வொரு முறையும் இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பும்போதும், அமெரிக்க குடிஉரிமை அதிகாரிகளால் தேவையில்லாத கேள்விகள் கேட்கப்பட்டு, கிட்டத்தட்ட அவமான படுத்தபடுவாராம். எதிர்கேள்வி கேட்டால் தேவையில்லாத பிரச்சனை என்று அவர் அதை ஒவ்வொருமுறையும் சகித்துகொள்வாராம். அவரின் வீட்டு மற்றும் அலுவலக தொலைபேசிகள் ஒட்டு கேட்கபடுகிறதாம். அவரின் வங்கி கணக்கும் கண்காணிக்க படுதாம். இத்தனைக்கும் அவர், மதத்தின் மீது அவ்வளவு பற்றான நபரும் கூட கிடையாது. இவருக்கே இந்த நிலைஎன்றால், மதத்தின் மீது பற்றுள்ள அப்பாவி முஸ்லிம் மக்களின் கதி என்ன என்பதை யோசித்துபாருங்கள். 

எனவே இத்தடைக்கு எதிரா, முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தவரும், மதமே இல்லைன்னு சொல்றவங்களும் குரல் கொடுக்கணும்! ஏனென்றால் இது ஒரு மதத்தை தழுவிய மக்களுக்கு எதிரான அடக்குமுறை.  உலகில் அடக்குமுறை எந்தவடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்த்து குரல் எழுப்பபடவேண்டும்.

- உமர் முக்தார் 

போராட்டமே இறுதி வழி!



எங்களின், கிராமத்தையும், கானகத்தையும் 
அன்னை பூமியையும் விட்டுத்தரமாட்டோம்!
எங்களின் போராட்டத்தையும் கைவிடமாட்டோம்!

அவர்கள் அணை கட்டினார்கள்,
எங்கள் கிராமம் நீரில் மூழ்கியது!

அவர்கள் தொழிற்சாலைகள் கட்டினார்கள், 
மரங்களை வெட்டினார்கள்,
கனிமங்களை தோண்டி எடுத்தார்கள்,
சரணாலயங்களை நிறுவினார்கள்.
நீரும், நிலமும் கானகமும் இல்லாமல் 
நாங்கள் எங்கே போவது?

ஓ! வளர்ச்சியின் கடவுளே, தயவு கூர்ந்து சொல்!
எங்கள் வாழ்கையை நாங்கள் எப்படி பாதுகாப்பது?

யமுனா நதி வற்றிவிட்டது.
நர்மதாவும், சுவர்ணரேகாவும் வற்றிவிட்டது.

கங்கை, கலங்கிய குட்டையாகிவிட்டது.
கிருஷ்ணாவுக்கும் அதே கதிதான்.

நீங்கள் பெப்சி கோலாவும், பிஸ்லரி தண்ணீரும் குடிப்பீர்கள்.
நாங்கள் அசுத்தப்பட்ட நீரில், 
எங்கள் தாகத்தை போக்கிகொள்வது எப்படி?

இந்த கானகத்தை பாதுகாத்து,
நிலத்தை பசுமையாக்கி,
ஆறுகளை, தேனாக பாயும்படி பாதுகாத்த,
எங்கள் முன்னோர்கள் முட்டாள்களா?

உங்கள் சுயநலத்துக்காக  
நிலத்தை நிர்மூலமாக்கி 
அதன் பசுமையை திருடிக்கொண்டீர்கள்.

மீன்கள் செத்துவிட்டன.
பறவைகள், யாருக்கும் தெரியாத இடம் நோக்கி 
பறந்துவிட்டன!

மந்திரிகள், தொழில் தரகர்களாக மாறி 
எங்கள் நிலங்களை பிடுங்கிக்கொண்டார்கள்.
ஆயுதப்படை அவர்களை பாதுகாக்கிறது.

ராஜாக்களான அதிகாரிகளுக்கும்,
கோடீஸ்வர ஒப்பந்ததாரர்களுக்கும்,
எங்கள் கிராமம், விளையாட்டுமைதானம்.
ஓ! சகோதரா! அவர்களின் விளையாட்டு மைதானம்.

சகோதரர்களே! 
உங்கள் மௌனத்தை கலைத்து, ஒன்றுசேர 
பிஸ்ரா(ஆதிவாசிகளின் சரித்திர நாயகன்) அழைக்கிறார்!

மீனவர்களும், தலித்துகளும், ஆதிவாசிகளும் 
ஒன்றிணைவோம்!
நிலங்களிலிருந்தும், சுரங்கங்களிலிருந்தும்
பறையதிர உதித்தெலுவோம்!

நாட்டு மக்களே! கேளுங்கள்!
போராட்டமே இறுதி வழி!

(காஷிபூரில், பாக்சைட் சுரங்கம் அமைவதற்க்கு எதிர்ப்புதெரிவித்து, பழங்குடிமக்களை ஒருங்கிணைத்து போராடிவரும் "பகவான் மாஜி" (அந்தமாதிரி பகவான் இல்லை) எழுதிய பாடல்)

செப்டம்பர் 11 எது உண்மை?

செப்டம்பர் 11 எது உண்மை?

அடுத்த மாதம் 11 ஆம் தேதி உலக வர்த்தக மைய இரட்டை கோபுர கட்டிடம் இடிக்கப்பட்ட 10 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்தன்னக்கி அமெரிக்க அதிபர் ஒபாமாவும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் அஞ்சலி செலுத்தி, 'இதுல செத்தவங்களோட ஆத்மா சாந்தியடையும் வண்ணம், இதுக்கு காரணமான ஒசாமாவ சாகடிச்சிட்டோம்' அப்டி, இப்டின்னு வசனம் பேசி முஸ்லிம்கள் மேல மத்த மக்களுக்கு மேலும் கோபத்த ஏற்படுத்துவானுங்க! உலக மீடியாக்களும் அதோட உண்மைய தெரிஞ்சோ, தெரியாமலோ அந்த வீடியோவ போட்டுக்காட்டுவாங்க. அதுல என்ன உண்மை இருக்கு?

சொந்த மக்களையே கொன்று குவித்த ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளினா? அதேமாரி சொந்த மக்களை சாகடிச்ச ஜார்ஜ் புஷ்ஷும் போர்க்குற்றவாளிதான், கொடுங்கோலந்தான்! ஏன்னா, இரட்டை கோபுரத்த இடிச்சு, 2000 சொந்த மக்களை சாகடிச்சவன் இந்த ஜார்ஜ் புஷ்தான்.

நா சொல்றத நம்புறது கஷ்டம்தான், அந்தளவுக்கு மீடியா, அத அல்-கொய்தா செஞ்சதுனு பரப்பிவிட்டுருக்கு! ஆனால், அதான் உண்மை!

எதுக்கு சொந்த நாட்டு மக்களையே புஷ் சாகடிக்கனும்? ரஜினியோட அருணாச்சலம் படத்துல 30 நாள்ல 30 கோடிய செலவழிச்சா 3000 கோடி கிடைக்கும்னு சொல்லுவாங்களே, அதே கதைதான் இங்கயும். கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இரட்டை கட்டிடத்தை இடிச்சு, 2000 பொதுமக்கள சாகடிச்சா, அமெரிக்காவுக்கு பல லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணை வளம் கிடைக்கும்! அந்த காரணுத்துக்காகத்தான் செப்டம்பர் 11 நாடகத்த நடத்தி, ஆப்கான், இராக், இரான் மேல போர் நடத்தி, பல லட்சம் முஸ்லிம்களை கொன்னு, இன்னும் சாகடிச்சுகிட்டே அந்த நாட்டைவிட்டு போகமாட்டேங்கிரானுங்க! இதுக்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருக்கு. அமெரிக்கவைச்சேர்ந்த ஒரு இளைஞன் செப்டம்பர் 11 பத்தி ஆராய்ச்சிசெஞ்சு 'லூஸ் சேஞ்' அப்டின்னு ஒரு ஆவணப்படத்த 2004 இல் வெளியிட்டிருக்கான். ஆனா, அது ஏன் மக்கள் பார்வைக்கு ஊடகங்களால் வைக்கப்படலேன்னு கேப்பீங்க?

அதுக்கு பதில், சந்தன கடத்தல் வீரப்பன சுட்டுக்கொல்லல, வெசம் கொடுத்துதான் சாகடிச்சாங்கனு சத்தியமங்கலம் காட்டுப்பகுதியைச் சேர்ந்த ஒருத்தர் மக்கள் டிவிக்கு, முன்னால பேட்டி கொடுத்திருந்தார், அது நம்ம யாருக்காவது தெரியுமா? இதுவே நமக்கு தெரியாதபோது அமெரிக்காவுடைய உள் விவகாரம் எப்டி தெரியும்? அதுவும் உலக மீடியாக்கள் மொத்தமும் அமெரிக்காவோட கண்ட்ரோல்ல இருக்கும்போது எப்டி இந்த உண்மை வெளில வரும்? ஆக இரட்டை கோபுர இடிப்பு சம்பவம், முன் திட்டமிடப்பட்ட, அமெரிக்காவே செஞ்ச கொடூரம். விரைவில் அனைத்து ஆதாரங்களையும் உங்கள் முன் வைக்க இருக்கிறேன்! காத்திருங்கள்!

குறிப்பு: அந்த ஆவணப்படத்த இந்த லின்க்ல போய் பாருங்க..

- உமர் முக்தார்

பலி பீடத்தில் இருந்து பலியாடு தப்புவது எப்படி?


பலி பீடத்தில் இருந்து பலியாடு தப்புவது எப்படி? 


அதிர்ஷ்டத்தின் வாயிலாக அதிகார பீடத்தை அடைந்தவர்களை துரதிருஷ்டத்தின் அம்புகள் நிச்சயம் ஒரு காலத்தில் பதம் பார்க்கும். அவ்வாறு பதம் பார்க்கப்பட்டு, இன்று திகார் சிறையில் இருப்பவர்கள்தான், ராசாவும், கனிமொழியும். 
கஷ்டங்கள் வரும்போதெல்லாம், இயற்கையான இந்தியன், இயல்பாக கூறும் வாத்தை “எல்லாம் விதி” என்கிற இந்த வார்த்தைகளை கூறி ஆறுதல் அடைந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில்தான், இந்தியாவில் ஜோஷியமும், கடவுள் நம்பிக்கையும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. 
2009 ஆம் ஆண்டில் அதிகார பீடத்தில் வீற்றிருந்த, 2011ல் அடிப்பட்ட பாம்பாக விழுந்து கிடக்கிற, தி.மு.க. தலைவர்களான ஆ. ராசாவும், கனிமொழியும் திகார் சிறையில் இருக்கும்போது, தங்கள் முதுகுகளை குத்திய கணைகள் யாரால், எப்படி, எந்த வழியில், எய்யப்பட்டன என்பதை பற்றி, ஆர அமர யோசிக்க நிரைய நேரம் கிடைத்திருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ, சிக்கலான பதில்களை கொண்ட ஒரு சுலபமான கேள்வியை, தங்கள் தரப்பு வாதத்தில் வைக்கிறார்கள். 

                                 பலி பீடத்தில் இருந்து பலியாடு தப்புவது எப்படி?

தப்பிப்பதற்கான வழக்கமான வழிகள் எதுவும் இல்லாமல் 
தொடர்ந்து தி.மு.க.வினர், வலியால் துடிக்கிறார்கள். 
ஆனால் அந்த வழியை அரசியல் வலுவாக மாற்றுவதற்கான சக்தி 
இப்போது அவர்கள் இடத்தில் இல்லை.

கூட்டணி அரசுக்கு உலை வைக்க அவர்களால் முடியாது.
இந்த நிலையை தனக்கு சாதகமாக, 
முழுமையாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது காங்கிரஸ்
“அரசியலில் வெட்டு மிரட்டலைவிட, 
மோசமான சுய அழிவுப்பாதை வேறில்லை”
இன்றைய நிலையில் ராசாவிடம் இருப்பது ஒரே ஒரு ஆயுதம்தான்
அந்த ஆயுதம் என்னவென்றால், அவருடன் சம்மந்தப்பட்ட தலைவர்களை
எளிதில், மோசமான சிக்கலில் மாட்டிவிட முடியும். 
சொல்லபோனல், அதைத்தான் அவர் செவ்வன செய்யத் தொடங்கி இருக்கிறார்.

தற்காப்பே, தாக்குதலின் மிகச்சிறந்த வடிவம் என்றால், 
தாக்குதலின் அதி சிறந்த வடிவம் எதிர் தாக்குதல்.

வெட்டு பீடத்தில் வைக்கப்பட வேண்டிய தலை, 
தன்னுடையது மட்டுமல்ல என்பதை
பலி கடாவால் காட்ட முயன்றால், 
வெட்டப்படாமல் தப்பிப்பதற்கான வழிகள் பலவும் பிறக்கவே செய்யும். 
கப்பல் கவிழ போகிறது என்று தெரிந்தால், 
யாரும், தான் மட்டும் மூழ்க நினைக்க மாட்டார்கள்.

தன்னோடு பலரையும் சேர்த்துக்கொள்ளவே முயல்வார்கள். 
இதோடு ஒப்பிட்டு பார்க்கையில், 
ராசா, கனிமொழியின் உடல்மொழியை பார்க்கும்போது, 
அவர்கள் நம்பிக்கை மிளிர எப்போதும் காட்சியளிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் அவ்வாறு தோற்றமளிப்பது
வழக்கத்திற்கும் மாறாக உள்ளது.

அது ஏன் என்று, இப்போது நமக்கு தெரிந்துவிட்டது. அரசின் தலைமை அதிகார மையங்களில் நடந்த விவாதங்களின் சான்றுகளை ராசா தன் வசம் வைத்துள்ளார்.

இப்போது அரசியல் யுத்த களத்தில் மிகவும் வலுவான ஆயுதம் -
 "ஜெராக்ஸ் மிஸின்தான். "
ரகசிய கோப்புகளின் படிகள், 
இப்போது எல்லோர் கைகளிலும் இருக்கின்றன.

ராசாவின் குரல் வளையை நெருக்கியது அரசு, 
அரசின் கழுத்து நரம்புகளை குறி வைத்திருக்கிறார் இப்போது ராசா. 
ராசாவுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் சிதம்பரத்திற்கும், மன்மோகன்சிங்கிற்கும் இழப்பதற்கு 
ஒரு அரசாங்கமே இருக்கிறது.
ராசா நினைப்பதை நடத்திவிட்டால் 

நாட்டின் தலைமை சட்ட அலுவலர் அருகில் பார்த்துக்கொண்டிருக்க
சாட்சிகளின் கூண்டில் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் 
நிற்க வைத்து கேள்வி கணைகளால் துளைக்க வேண்டிய நேரம் 
நாளை வரும்.

ராசாவின் நோக்கம் வெளிப்படையானது, 
மத்திய அரசை அவரால் எதுவும் செய்ய முடியாது
ஆனால் அரசின் மீதான நம்பக தன்மையை குலையும்படி 

நிச்சயம் அவரால் செய்ய முடியும். 

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive