உருவாகிறதா ஒரு தலைப்புச்செய்தி ? ..
பற்றி எரிகிறது திநகர்ஆயிரக்கணக்கானோர் பலி
தீயணைப்பு வாகனம் கூட செல்ல
முடியாமல் ஆயிரக்கணக்கானோர்பலியான பரிதாபம்.முறைப்படுத்தப்படாத
கட்டிடங்களால் விபத்து நேர்ந்ததாக
முதல்கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன
பலியானோர் குடும்பத்திற்கு தலா
ஒரு லட்சம் நிவாரண நிதி
அளிக்கப்படும் என தமிழகஅரசு
அறிவித்துள்ளது.
இப்படி ஒரு நாள் நீங்கள் செய்தி வாசிக்க நேரிடலாம் ....அப்போது உங்கள் அதிர்ச்சியை
குறைப்பதற்காகவே இப்போது இந்த கட்டுரை என்று நீங்கள் எடுத்து கொள்ளலாம் ..
அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கும் ,முதலாளிகளின் பேராசையும் ஒரு நகரை
எப்படி கெடுத்து குட்டி சுவராக்கி இருக்கின்றன
என்பதற்கு தியாகராய நகர் மிக சிறந்த உதாரணம்...
விஷயத்துக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ளாஷ் பேக் ...
இப்போ சரவணா ஸ்டோர்ஸ் இருக்குற எல்லா ஏரியாவும் ஒரு காலத்துல
மாம்பலம் ஏரியா இருந்ததது ...
மாம்பலம் ஏரியா இருந்ததது ...
அதுக்கு அப்புறம்
திராவிட இயக்கத்தவரில் மிக முக்கியமானவரும் நீதிக்கட்சியைத் ஆரம்பித்தவர்களில் ஒருவருமான சர் பி.தியாகராயாவின் நினைவா அந்த ஏரியாவுக்கு அவர் பெயர வெச்சாங்க .. அப்போ எல்லாம் பொருட்கள் வாங்க கொத்தவால் சாவடிக்கு போகணும் ..
சைதாபேட்டையும், பாரிஸ் கார்னரும் தான் அப்போ வணிக பகுதி .. அதுக்கு அப்புறம் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் ல வெளிஊர் ரயில் வண்டிகள் நிக்க ஆரம்பிச்சதால, வந்து எறங்குற மக்கள்கிட்ட வியாபாரம் பண்ண சின்ன சின்ன நடை பாதை கடைகள் முளைச்சது ...
அப்புறம் கடை வீதி உருவாச்சு .. அந்த கடை வீதி சத்தம் தாங்க முடியாம அங்க பக்கதுல இருந்த ஆட்கள் வீடுகளை வித்துட்டு வேற ஏரியாகு போய்டாங்க ...வாங்குனவங்களும் அதை வியாபாரிகளுக்கு வித்துட்டாங்க ...
1985 டு 1990 ல தான் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி கடைகள் அங்க முளைக்க ஆரம்பிச்சது .....அவ்ளோதான் ஸ்டோரி .. கம் டு தி பாயிண்ட் .....
சென்னையிலேய சுற்றுச்சூழல் சீர்கெட்ட பகுதி என மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அடையாளம் காட்டப்பட்டுள பெருமைக்குரிய பகுதி தி நகர் தான் ...
சீப்பிலிருந்து செருப்பு வரை சென்னை மக்களின் அத்தனை தேவைகளுக்கும் புகலிடம் இந்த அங்காடித்தெரு. பாண்டி பஜாரும், உஸ்மான் சாலையும், ரங்கநாதன் தெருவும் தான் தி.நகரின் மிக முக்கியமான வணிகமையங்கள். அதிலும் மிக முக்கியமானது ரங்கநாதன் தெரு.
ஆடிக் காற்றில் கூட மூச்சுவிட தவிக்கும் அளவுக்கு நெரிசல் மிகுந்ததுதான் இந்த தெரு. பண்டிகை காலம், விழாக்காலங்கள் என இல்லாமல் வார விடுமுறை நாட்களில் கூட மக்கள் இந்த தெருவுக்குள் ஊர்ந்துதான் செல்ல வேண்டும்.
ஒரு சில ஞாயிற்றுக்கிழமைகளில் ரங்கநாதன் தெருவுக்கு வந்துசெல்லும் மக்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்திற்கும் மேல். ரெங்கநாதன் தெரு இந்த அளவிற்கு மோசமானதிற்கு யார் காரணம் ?
எல்லா பெரிய நிறுவனங்களும் சொல்லும் ஒரே பதில் நடைபாதையை அடைத்துக்கொண்டிருக்கும் சிறுவியாபாரிகளும், நடைபாதை வியாபாரிகளுமே இதற்கு காரணம் என கைகாட்டுகின்றனர்
...ஆனால் உண்மையில் நடந்துகொண்டிருப்பது என்ன.....
...ஆனால் உண்மையில் நடந்துகொண்டிருப்பது என்ன.....
ஒரு நாள் காலைல 6 மணிக்கே ரங்கநாதன் தெருவுக்கு போய் பார்த்தா
40 அடி அகலத்திற்கு அகன்று விரிந்திருகிறது ரங்கநாதன் தெரு....காலை 6 மணிக்குதான் இந்த நிலை... நேரம் செல்லச் செல்ல இந்த 40 அடி சாலை 20 அடி தெருவாக சுருங்கிவிடுகிறது... இதற்கு நடைபாதை வியாபாரிகள்தான் காரணமா? இல்லவே இல்லை என்கின்றனர் அவர்கள்...
எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத பெரிய நிறுவனங்களால்தான் தங்களது வாழ்வாதாரமும், தி.நகரின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது என்பது நடைபாதை மற்றும் சிறு வியாபாரிகள் புகார்...
ஏற்கனவே இப்படி நடைபாதை வியாபாரிகள் தொடர்பான பிரச்சனையை தீர்கவே அண்ணா நகர் பஜார் ,பர்மா பஜார் ,பாண்டி பஜார் போன்றவை உருவாக்கப்பட்டது .. ஆனாலும் பிரச்சனை தீரவில்லை .. இப்போதும் பாண்டி பஜாரில் கூட நடைபாதை வியாபாரிகளுக்காக வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது ..
( கட்டி முடிக்கப்பட்டு அது வழக்காக மாறி தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது ).
( கட்டி முடிக்கப்பட்டு அது வழக்காக மாறி தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது ).
என்ன தீர்ப்பு வந்தாலும் எல்லோரும் அங்கு போனாலும் இந்த பிரச்சனை தீராது ..ஏனெனில் சந்தை வணிகத்தில் , நடைபாதை கடைகள் என்பது பல நூறாண்டுகள் வரலாறு கொண்ட ஒரு கலாசாரம் .. அதை தனிமைபடுத்தி ஒதுக்கி வைப்பது சாத்தியமல்ல .. மேலும் சென்னையில் மட்டும் சுமார் ஒரு லட்சம்நடைபாதை வியாபாரிகள் உள்ளனர் .. அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்காமல் சமூக பிரச்சனையாக பார்க்க வேண்டியது நமது கடமை .....
ரெங்கநாதன் தெருவின் நில ஆக்கிரமிப்பு , விதிமுறை மீறல்கள் தொடர்பாக உயர்நீதி மன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு தியாகராய நகரில் மட்டும், 64 வர்த்தக நிறுவனங்கள்,
(அதுக்கு அர்த்தம் அவ்ளோ தான்னு இல்ல .. ரொம்ப மோசமா
எந்த விதிகளையும் மதிக்காதவர்கள் னு )
(அதுக்கு அர்த்தம் அவ்ளோ தான்னு இல்ல .. ரொம்ப மோசமா
எந்த விதிகளையும் மதிக்காதவர்கள் னு )
எந்த வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரம்மாண்டமாக தள்ளுபடி அளிப்பதாய் பகட்டாக விளம்பரம் செய்யும் ஒரு குறிப்பிட்ட துணிக்கடையை ( சரவணா ஸ்டோர்ஸ் தான் ..கிசு கிசுப்பு மாதிரி சொன்னா தான் நல்லா இருக்கு ) எடுத்துக் கொள்வோம்.
- இந்த துணிக்கடையின்,இந்த தெரு அளவின் அடிபடையில் மொத்த மனை பரபரப்பளவில் 50 சதவீதம் மட்டுமே கட்டடம் கட்ட மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் அந்த நிறுவனமோ அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, 85 சதவீத இடத்தில் கட்டடம் கட்டியுள்ளது.
- மிகவும் மக்கள் நெருக்கடியான தெருக்களில் குறிப்பிட்ட அடுக்கு கொண்ட கட்டடங்களே கட்டப்பட வேண்டும் என்பது விதி. அந்த விதிமுறையையும் புறந்தள்ளிய அந்த நிறுவனம், 3 அடுக்கு கட்டடப்பட வேண்டும் என்ற உத்தரவை மீறி, 7 அடுக்குகள் கட்டி, அதற்கு மேல் ஊழியர்களுக்கான தங்கும் அறையும் கட்டியுள்ளது. அதுக்கு மேல ஒரு storer ரூம் வேற ..
- அந்த நிறுவனத்தின் மொத்த பரப்பளவையும் கணக்கில் கொண்டு 266 கார்கள் நிறுத்துவதற்கு நிலம் ஒதுக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் ஒரே ஒரு கார் மட்டுமே நிறுத்துவதற்கு இடத்தை ஒதுக்கி அரசு விதிமுறைகளை கேலிக் கூத்தாக்கியுள்ளது அந்த குறிப்பிட்ட துணிக்கடை நிறுவனம்.நோட் திஸ் பாயிண்ட் .. அந்த ஒரு கார் பார்கிங் எடத்துல தான் இப்போ ஐஸ் கிரீம் கடை இருக்கு ....
- மேலும், கட்டடத்தின் 4 பக்கவாட்டிலும் 22 மீட்டர் இடைவெளி விட வேண்டும் என்ற நிலையில், அந்த நிறுவனம் வெறும் 4 மீட்டர் மட்டுமே பெயரளவில் ஒதுக்கியுள்ளது.
- இத்தனை ஆக்கிரமிப்புக்களையும், தாண்டி துணிகள் விற்பனையில் வரும் வருமானம் போதாதென்று, அந்த நிறுவனம் திண்பண்டங்கள் கடையை வெகு தைரியமாக (! )சாலையில் அமைத்து மக்கள் நெரிசலுக்கு மேலும் வழிவகுத்துள்ளது.
இது வெறும் சாம்பிள் தான் ..
பண்ணிருக்காங்க ..
(குறிப்பு : சமூக பிரச்சனைகளை தவிர எனக்கும் சரவணா ஸ்டோர்ஸ்க்கும் வேறு வாய்க்கால் தகராறு எதுவுமில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ..)
.. ஏற குறைய எல்லா நிறுவனங்களுமே இதே தப்ப தைரியமா பண்ணிருக்காங்க ..
- நல்லி சில்க்ஸ் கு ஒதுக்கிய கார் பார்கிங் எண்ணிக்கை 64 .. அவங்க எடம் ஒதுக்கி உள்ளது வெறும் நாலு கார் க்கு மட்டும் .. அங்கயும் நல்லி குப்புசாமி தன வண்டிய விட்டுடுவார்.
என்ன பிரச்சனை நா , இவங்க ஆக்கிரமித்துள இடத்தை மீட்டாலே , நாம கை வீசி நடந்து , நடை பாதை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி குடுத்து , தைரியமா போயிட்டு வரலாம் ..
இவ்வளவு மக்கள் நெருக்கடி அதிகம் மிகுந்த ரெங்கநாதன் தெருவில் தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழக்ககூடாது என்பதே அனைவரின் கருத்து.
ஆனால் அதனையும் மீறி கடந்த 2008 ஆம் ஆண்டு ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரம்மாண்ட துணிக்கடையில் நிகழ்ந்த தீ விபத்தில், உயிரிழப்பு ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் (உண்மையில் அங்கு வேலை பார்த்த மூன்று பேர் இறந்ததாக உறுதி படுத்தப்பட்ட தவல்கள் நமக்கு தெரிவிகின்றன ..)
ஆனால் அதனையும் மீறி கடந்த 2008 ஆம் ஆண்டு ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரம்மாண்ட துணிக்கடையில் நிகழ்ந்த தீ விபத்தில், உயிரிழப்பு ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் (உண்மையில் அங்கு வேலை பார்த்த மூன்று பேர் இறந்ததாக உறுதி படுத்தப்பட்ட தவல்கள் நமக்கு தெரிவிகின்றன ..)
இதனால் அப்போது ஏற்பட்ட பீதி கொஞ்சம் நஞ்சமல்ல... தீயணைக்கும் வாகனம் கூட சம்பவ இடத்தை நெருங்க முடியாமல் ஆக்கிரமிப்புகளில் மூழ்கியிருந்தது ரெங்கநாதன் தெரு....
மேலும், தீ விபத்து நிகழும் போது, உள்ளே சிக்கியவர்கள் படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த படிக்கட்டுகளிலும் பொருட்களை அடுக்கி வழியை மறித்து, தப்ப நினைப்பவர்களின் உயிருக்கும் உலை வைக்கிறது இது போன்ற பிரம்மாண்ட வர்த்தக நிறுவனங்கள்....
.நம்பிக்கை இல்லனா ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் போய் பாருங்க .. ஆறாவது மாடில நிக்க முடியாம மூச்சு முட்டுது .....எல்லா படிகட்டுலையும் பொருட்கள் இருக்கும் ...
இவ்வளவு பெரிய தீ விபத்து நிகழ்ந்த பிறகு, ரெங்கநாதன் தெருவில் எத்தனை கடைகளில் முறைப்படி தீயணைப்பு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்டது.
அப்போது மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட ரெங்கநாதன் தெருவில் உள்ள 38 கடைகளில் ( ஏழு மாடி சரவணா , ஜெயச்சந்திரன் , ஹரிஹந்த் எல்லாமே தான் )
எந்தவித தீயணைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது.(நமக்கு இது முன்னாடியே தெரியும் ..)
அந்த நிறுவனங்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அந்த நிறுவனங்கள் காற்றில் விடப்பட்ட சிறகாக நோட்டீசை பறக்கவிட்டு விட்டன. இது வரை எந்த ஒரு நிறுவனமும் நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை. அதை பத்தி யாரும் கவலையும் படல ....
மக்கள் சேவையில் உள்ள நிறுவனங்களில் தீ விபத்தைத் தடுக்கும் வசதிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று முறையான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும், அந்த விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் உயிரோடு விளையாடிப் பார்க்கும் வர்த்தக நிறுவனங்கள் தான் இங்கு அதிகம்.
(முதலாளின்னு ஆயிட்டா இப்படி எல்ல்லாம் பண்ணனும் போல )
(முதலாளின்னு ஆயிட்டா இப்படி எல்ல்லாம் பண்ணனும் போல )
எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ, அல்லது அரசு அதிகாரிகளோ அது குறித்து கவலைப்படுவதில்லை என்பதை அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் நமக்கு நினைவுபடுத்தி வருகின்றன.
ஒரு சவால் .. தி நகர் ல ஏதாவது ஒரு தெருவுல தீயணைப்பு வண்டி உள்ள போய்ட முடயும்னா நான் எழுதுறதையே விட்டுவிடுகிறேன் ...(அப்பாடான்னு பெருமூச்சு விட வேண்டாம் )
பாலம் கட்டும் போது, அந்த பாலத்திற்கும் கடைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை கூட கணக்கில் கொள்ளாமல் அவசரகதியில் பாலம் கட்டப்பட்டுள்ளதும், நெருக்கடிக்கு ஒரு முக்கிய காரணம்.
இதனால் அந்த குறுகிய பாதையில் தீயணைப்பு வாகனங்களோ, ஆம்புலன்ஸ் வாகனங்களோ அவசர தருணத்தில் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பாலம் கட்டப்படாமல், பொதுமக்களுக்கு தேவையற்ற பகுதியில் பாலம் கட்டப்பட்டுள்ளது என்பது பொது மக்கள் கருத்து ( நானும் பொது மக்கள் ல ஒருத்தன் தானே ) ..
இதனால் அந்த குறுகிய பாதையில் தீயணைப்பு வாகனங்களோ, ஆம்புலன்ஸ் வாகனங்களோ அவசர தருணத்தில் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பாலம் கட்டப்படாமல், பொதுமக்களுக்கு தேவையற்ற பகுதியில் பாலம் கட்டப்பட்டுள்ளது என்பது பொது மக்கள் கருத்து ( நானும் பொது மக்கள் ல ஒருத்தன் தானே ) ..
என்ன தாங்க பண்றது ?
1. பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் விதிமுறைகள் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக மீறிய பிரம்மாண்ட வர்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை எந்தவித பாரபட்சமும் பாராமல் மீட்டால் தான், தியாகராய நகர் சிறிதளவேனும் சுதந்திரமாக சுவாசிக்க முடியும். இதனையே சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
2 . சென்னை தியாராய நகரில் 30 சதவீதம் மட்டுமே வர்த்தகப் பகுதியாக உள்ளது. மீதமுள்ள 70 சதவீத குடியிருப்பு வாசிகள் சந்திக்கும் பிரச்சினைகளும், பேராபத்துகளும் சொல்லில் அடங்காது.
கோயம்பேடு சந்தைக்கு மாதம் ஒருநாள் விடுமுறை விடுவது போன்று தியாகராய நகர் வர்த்தக நிறுவனங்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை விட்டால் மட்டுமே தங்களுக்கு அமைதி கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி குடியிருப்புவாசிகள்.
கோயம்பேடு சந்தைக்கு மாதம் ஒருநாள் விடுமுறை விடுவது போன்று தியாகராய நகர் வர்த்தக நிறுவனங்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை விட்டால் மட்டுமே தங்களுக்கு அமைதி கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி குடியிருப்புவாசிகள்.
3. தியாகராய நகரின் மற்றுமொரு பிரச்சினையாக பொதுமக்களால் பார்க்கப்படுவது நாள் முழுவதும் நிலவும் போக்குவரத்து பிரச்சினை.
இதற்கு திட்டமிடாமல், மக்களின் ஆலோசனைகளைப் பெறாமல் வெறும் சாதனைக்காக மட்டுமே கட்டப்பட்ட தியாகராய நகர் மேம்பாலத்தை அகற்றுவதும், அந்த ஒட்டு மொத்த பகுதியையும் வணிக மண்டலமாக அறிவித்து, அரசு பேருந்து போக்குவரத்தை மட்டும் அனுமதிப்பதே தீர்வாகும் .
..பல புகழ் மிக்க உலக சந்தைகள் ல பொது போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி ..
இதற்கு திட்டமிடாமல், மக்களின் ஆலோசனைகளைப் பெறாமல் வெறும் சாதனைக்காக மட்டுமே கட்டப்பட்ட தியாகராய நகர் மேம்பாலத்தை அகற்றுவதும், அந்த ஒட்டு மொத்த பகுதியையும் வணிக மண்டலமாக அறிவித்து, அரசு பேருந்து போக்குவரத்தை மட்டும் அனுமதிப்பதே தீர்வாகும் .
..பல புகழ் மிக்க உலக சந்தைகள் ல பொது போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி ..
4. மேலும் பொதுமக்கள் வந்து செல்லும் வர்த்தக நிறுவனங்களில் முறையான தீயணைப்பு வசதிகள் இல்லாவிடில் அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற குரலும் சமூக ஆர்வலர்களிடையே வலுக்கிறது.
எல்லா விதிமுறைகளையும் முறையாக பின்பற்றிய துணை நகரங்களை உருவாக்குவதும் தியாகராய நகர் பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வாக அமையும். முடிஞ்சா எல்லா கட்டிடத்தையும் தூக்கி செங்கல் பட்டுபக்கம் வெச்சிடலாம் னு கூட சில பேர் கருத்து சொன்னங்க .
எல்லா விதிமுறைகளையும் முறையாக பின்பற்றிய துணை நகரங்களை உருவாக்குவதும் தியாகராய நகர் பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வாக அமையும். முடிஞ்சா எல்லா கட்டிடத்தையும் தூக்கி செங்கல் பட்டுபக்கம் வெச்சிடலாம் னு கூட சில பேர் கருத்து சொன்னங்க .
so....
சாயப்பட்டறை- கிடைக்குமா தீர்வு?
திருப்பூர் பகுதியில் 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அவற்றில் 502 தொழிற்சாலைகள், 20 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்கின்றன. எஞ்சிய 252 தொழிற்சாலைகள் தனித்தனியே சுத்திகரிப்பு நிலையங்களை வைத்துள்ளன. இவைகளிலிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 87,250 கிலோ லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு, நொய்யல் ஆற்றில் விடப்பட்டு வந்தது.
சாயப்பட்டறைகளால் விளை நிலங்களும், நீர் ஆதாரங்களும் மாசு அடைவதாக விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடுத்தனர். சென்னை உயர் நீதிமன்றம் 1998 ஆம் ஆண்டு அனைத்து சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகளும் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால் அந்த தீர்ப்பு நடைமுறை படுத்தப்பட்டதா என கண்கானிக்க அப்போதைய அரசும் அதிகாரிகளும் அலட்சியம் காட்டியதால், தொடர்ந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீரால் பாதிப்பு ஏற்பட்டது. 2003 ஆம் ஆண்டு, நொய்யல் ஆறு பாசன விவசாயிகள் மீன்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது தீர்ப்பில், 31.7.2007-க்குள் சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் கழிவு நீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை (Zero discharge) அடையப்படவில்லை எனில், சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் மூடப்படடும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 
சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில், தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்ற ஆணைக்கு தடையுத்தரவு பெற்றது. 2009ல் உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்து, 3 மாத காலத்திற்குள் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை அடைய வேண்டும் என்று தீர்ப்பளித்தது. கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலை எட்டப்படாததால், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பூர் பகுதியில் உள்ள 754 சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் 1.2.2011 முதல் மூடப்பட்டன. விவசாயிகள் மகிழ்ந்தனர்.
இதனால் திருப்பூர் பகுதி ஜவுளித் தொழில் முடங்கிப் போனது. திருப்பூர் ஜவுளித் தொழிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்தனர். தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியும் பாதிப்படைந்தது. இப்பிரச்சனையைத் தீர்க கருனாநிதி அரசு முன்வரவில்லை அவர்களுக்கு செம்மொழி மாநாடு நடத்தவே நேரம் போதவில்லை.
இந்நிலையில் தற்போதைய அ தி மு க அரசு இப்பிரச்சனையை தீர்க சில ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அதன்படி, கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ஜிய நிலையை எட்டுவதற்கான புதிய தொழில்நுட்பத்தை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை முறையில் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தை எல்லா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் கடைபிடிக்க இயலுமா என்பது சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு தான் தெரிய வரும். அடுத்ததாக குஜராத் மாநிலம் பாரூச் என்னுமிடத்தில்¢ நானோ தொழில்நுட்பத்தின் மூலம் 20 சதவீதம் கழிவுநீரை 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, நீர் ஆவியாக்கப்பட்டு, குளிர்விக்கப்பட்ட நீரும், பெறப்படும் உப்பும் மீண்டும் தொழிற்சாலையிலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை திருப்பூரில் கடைபிடிக்க இயலுமா என்பதை ஆராய ஒரு குழு குஜராத் மாநிலத்திற்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளது.
இந்த இரண்டில் எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானாலும் ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்திற்கும் சுமார் 10 கோடி ரூபாய் தேவைப்படும். அதாவது, மொத்தத்தில் சுமார் 200 கோடி ரூபாய் தேவைப்படும். அந்தத் தொகையை வட்டியில்லா கடனாக வழங்கப்போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. எந்தத் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பது என்பது குறித்து இரண்டு மாத காலத்திற்குள் முடிவெடுக்கப்பட்டும் எனவும் அதன் பின் சோதனை முறையில் மூன்று மாதங்கள் இயக்கிய பின்னர், உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு பிறகே அத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்குமாம். நிதியுதவி செய்வதோடு கடமை முடிந்ததென்று விலகிவிடாமல் அத்திட்டங்களை அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் திருப்பூர் சாயப்பட்டறை மற்றும் விவசாயிகள் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இந்த திட்டங்கள் அமையுமா என்ற கேள்வியோடு காத்திருக்கிறார்கள் விவசாயிகளும், வேலையிலந்து தவிக்கும் தொழிலாளர்களும். ஆனந்த்குமார்
விரைவில்!
விரைவில்!
தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களும் ஒரு சார்பு தன்மையுடனேயே செயல்படுகின்றன!
கட்சிக்கு ஒரு தொலைகாட்சி என்று பெரும்பாலான தமிழ் கட்சிகளுக்கும் தொலைக்காட்சிகள் இருக்கின்றன.
மேலும் பல தொலைக்காதிகள் புதியதாய் வரயிருக்கின்றன.
தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழ் தொலைக்காட்சிகளில் எந்தெந்த தொலைக்காட்சிகள் எந்தெந்த கட்சிக்குச் சொந்தமானது?
அவை யாருக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுகின்றன?
என்பது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!
அதைப்பற்றிய ஒரு தொகுப்பு தயாராகிக்கொண்டு இருக்கிறது. விரைவில் அதை வாசகர்களுக்கு வெளியிட இருக்கிறோம்!
- மாற்றத்திற்கான செய்தியாளர்கள் குழு.
மீண்டும் மீண்டும்!
மீண்டும் மீண்டும்!
இராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) மறுபடியும் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது. உலக அரசியல் வரலாற்றில் அதிக தடவை கூட்டணி மாறிய கட்சி பா.ம.க.வாகத்தான் இருக்குமென நினைக்கிறேன்!. அந்தளவிற்கு ஒவ்வொரு தேர்தலின் போதும், தேர்தல் முடிந்த பின்னரும் கூட்டணி மாறுவது இராமதாசுக்கு வாடிக்கை (போதை போல்) ஆகிவிட்டது.
நடைபெற்று முடிந்த தேர்தலுக்கு முன்பாக கூட்டணி பற்றிய பேச்சு அடிபடுகையில், கலைஞரை பா.ம.க.வைச் சேர்ந்த சிலர் அடிக்கடி சந்தித்துவிட்டு வந்தனர். சந்திப்பின்போது இராமதாசால் ஒரேயொரு கோரிக்கை மட்டுமே வைக்கப்பட்டது. அது, இராமதாசின் மகனான முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி இராமதாசுக்கு மாநிலங்களைவை உறுப்பினர் பதவி கொடுக்க வேண்டுமென்பதே!
இது பற்றி கட்சியினர் கூடி முடிவு அறிவிக்கப்படுமென கூறிய கலைஞர், 'பா.ம.க.வை வேண்டுமானால் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறோம், மாநிலங்களவைப் பதவி 2013 ஆம் ஆண்டுதான் தரமுடியும்' என நக்கலாக கூறினார். பிறகு சிறிது காலம் அடங்கியிருந்த கூட்டணி பேச்சுவார்த்தை தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் துவங்கியது. திடீரென்று கூப்பிட்டு 31 தொகிதிகளை கொடுத்தார் கலைஞர் (பிறகு ஒரு தொகுதியை பரித்த்துக்கொண்டார் என்பது வேறு விஷயம்).
தி.மு.க.மீது மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பு அலைப்பற்றி தெரியாமல் இராமதாசும் அதற்கு ஒத்துக்கொண்டார். 2013 ஆம் ஆண்டுதான் கனிமொழிக்கு மாநிலங்களவைப் பதவி முடிகிறது, அப்போது காலியாகும் அப்பதவிக்கு அன்புமணியை நிறுத்துகிறேன் என்று கூறியிருந்தார் கலைஞர். ஆனால் எதிர்பாராத விதமாக தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி படுதோல்வி அடைந்தது. பா.ம.க. வெறும் மூன்று தொகுதிகளில்தான் வெற்றிபெற்றது.
ஒரு கட்சிக்கு குறைந்தது 31(?) எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும். ஆனால் தி.மு.க.வோ வெறும் 23 இடங்களில்தான் வெற்றிபெற்றது. எனவே இந்த 5 வருடத்திற்கு தி.மு.க.விற்கு ராஜ்ய சபா பதவி கிடைக்க வாய்ப்பில்லை. எனவேதான் இராமதாஸ் திடீரென்று பொதுக்குழுவைக் கூட்டி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
குறிப்பு: ஒத்த கருத்துடைய கட்சிகள் பா.ம.க. தலைமையில் ஒன்றிணைய வேண்டுமெனவும் காமெடி செய்கிறார் மருத்துவர் அய்யா!
- உமர் முக்தார்.
நீக்கியதற்கான விளக்கம்!
நீக்கியதற்கான விளக்கம்!
நாம் துவங்கி இருக்கும் இவ்வலைபூ (blog) மற்றும் நாம் துவங்க இருக்கும் வலைத்தளம் (website) ஆகியவை பொதுவான செய்திகளைப் பற்றியும், அச்செய்தியின் பின்னாலுள்ள அரசியலைப்பற்றியும் வாசகர்களுக்கு உணர்த்துவதற்கேயாகும். மற்றபடி இது தனி மனித துதிபாடுவதற்காக துவங்கப்படவில்லை (அதற்கென பல வளைதளமுண்டு). மாற்று சிந்தனை உடையவர்களாக நாம் இருப்பதினாலேயே 'மாற்றத்திற்கான செய்தியாளர்கள்' என்ற பெயருடன் துவங்கி இருக்கிறோம். எனவே இதில் தனி மனிதரைப் பற்றி எழுதுவது சரியானதாக இருக்காது. அதுவும், "அவரை அய்யா (இராமதாஸ்), என்று அழைக்கும்போது, எங்கள் உள்ளத்தில் தனி சுகம் கிடைக்கும்" இவ்வாறெல்லாம் எழுதினால் இது பொதுவுடைமை சிந்தனை என்பதா அல்லது தனி மனித துதி பாடுதல் என்பதா? அதனால்தான் அக்கட்டுரையை நீக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம் (அக்கட்டுரை drafts போல்டரில் உள்ளது). நண்பரான உங்கள்மீது கொண்ட உரிமை காரணமாகவே உங்களுக்கு அதை முன் அறிவிப்புக்கூட செய்யாமல் அகற்றிவிட்டோம். எனினும் சொல்லாமல் நீக்கியதற்கு மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறோம், இனிமேல் தனி மனிதரைப் பற்றி துதிபாடும் கட்டுரைகளை இதில் எழுத வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்!
- 'மாற்றத்திற்கான செய்தியாளர்கள்'.
ஜனநாயக வலைபூவில் முளைத்த சர்வாதிகார முட்கள் !
மாற்றத்திற்காண செய்தியாளர்கள் என்ற தலைப்புடன், ‘நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள், அதன் பின்னணியிலிருக்கும் அரசியல், அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை, நாங்களே பகிர்ந்து கொள்ளவும், நாங்கள் பகிர்ந்து கொண்டதை, உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.’ என்ற விளக்கத்துடன் தொடங்கும் இந்த தளத்தில் இரண்டு நாட்களுக்கு முன் என்னால் பதிவேற்றம் செயயப்பட்ட கட்டுரை என் அனுமதியின்றி, எனக்கு அறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டுள்ளது என்பதை வேதனையுடன் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
நில அபகரிப்பு புகார்களுக்கு பயந்தும், பிற அரசியல் ஆதாயங்களுக்காகவும் அதிரடியாக தி.மு.க வில் இருந்து விலகியுள்ள பா.ம.க வின் நிறுவனர் தமிழ்குடிதாங்கி அய்யா இராமதாஸ் பற்றி என் சக ஊரியர் எழுதிய ஒரு கட்டுரையை நம் வலைப்பூவில் பதிவேற்றம் செய்திருந்தேன், அதன் நோக்கம் அந்தக் கட்டுரையை படிக்கும் நன்பர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் அக்கட்டுரையின் அல்லது அக்கட்டுரை நாயகனின் உண்மைத்ன்மையை எளிதில் தெரிந்து கொள்ளலாம் என்பதேயன்றி வேறொன்றும் அல்ல. அக்கட்டுரையை ஒரு விவாதப்பொருளாக கையாளவே நான் நினைத்திருந்தேன்.
ஆனால் சில (அல்லது) பல பிற்போக்கு சிந்தனையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு அந்த கட்டுரையை உடனடியாக முன்னறிவிப்பின்றி வலைப்பூவிலிருந்து அகற்றி விட்டனர். இதற்க்கு ஏனோ சில சிவப்பு சிந்தனவாதிகளும் உடந்தையாகிவிட்டனர்.
இராமதாஸ் நல்லவர் என்றோ அனைவரும் பா ம க வில் இனையுங்கள் என்றோ நான் வாதிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஊர் பகுதிகளில் உள்ளவர்களுக்கு பா ம க என்றொரு கட்சி இருப்பதே தெரியாது.
அப்படி இருக்க அக்கட்டுரையின் மூலம் உண்மை என்ன என்பதை அறியவே முற்பட்டேன்.
இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள (முக்கியமாகப் பெரியார் உட்பட) அனைத்தும் விமர்சனத்திற்க்கு உட்பட்டவை என்பதாக கூறிக்கொள்பவர்களால் ஏன் அந்த கட்டுரை தொடர்பாக ஒரு வார்த்தை கூட விமர்ச்சனம் எழுத இயழவில்லை? விமர்ச்சனம் கூட வேண்டாம் அக்கட்டுரையை நீக்குவதற்கான காரணமாவது எழுதப்பட்டதா?
சரி ஆனது ஆகட்டும் கட்டுரையை நீக்கியவர்களுக்கும் அந்த அதி நாகரீக செயலுக்கு உடந்தையாகிப்போன முக்கியஸ்தர்களுக்கும் நான் 1 கேள்விகளை முன்வைக்கிறேன்.
எந்தக் கட்டுரையில் யாருக்கு விருப்பம் இல்லை என்றாலும் உடனடியாக நீக்கிக்கொள்ளலாமா?
ஆனந்த்குமார்





