முத்துராமலிங்க தேவரின் சாதி வெறி

இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:

1957
முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"
என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?"
எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.

இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார்.)

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

**********************
கேப்பை, நெய், கேனைப்பயல்கள் மற்றும் தேவர்:

இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.

உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் "வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,

"
இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,
"
நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.

"
மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.

"
மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்" என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.

இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.

காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.

சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை "அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், "இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்" என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.

*****************
இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை:

தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.
"
அரசியலுக்கு வரும்போது 'அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்' என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்" என்றும் "இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்" என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.

"
சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜை போ" என்று சொல்ல முடிந்ததா?" என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.

கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்."

காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது."வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்".

****************
சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி "ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?" என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

அப்படி என்ன வதந்தி அது?தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி "..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க.." என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான '..க்காளி' என்பதனைப் பேசினாரே என்பதாம்.

கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.

இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.
****************
சமீப காலகட்டங்களில் தேர்தல் கமிஷன் பல கெடுபிடிகளைப் போட்டு, பிரச்சாரத்தை இரவு பத்து மணியுடன் நிறுத்திடச் சொல்லியதும், சில கட்சி வேட்பாளர்கள், பத்து மணிக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டு வெறுமனே கைகளைக் கூப்பி வணங்குவதுடன் சென்று விடுகின்றனர். இதெல்லாம் ஏதோ புதுமை என்று எண்ணி இருக்கையில், 1952 தேர்தலுக்கு முன்பிருந்தே தேவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார். ஆனால் தேவரைப் பேச விடாமல் தடுத்தது தேர்தல் கமிஷன் அல்ல. அரசாங்கம். இவர் வாய் திறந்து பேசினாலே சாதி மோதல்தான் உருவானது. எனவே அரசு இவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.
ஆனால் தேவர், 1957 முதுகுளத்தூர் கலவரத்தின்போதும், 'மவுனமாகக் கைகூப்பும் முறையை' கலவரத்தை தூண்டிவிட பயன்படுத்தினார். அறிக்கை ஏதின்றி வெறுமனே தேவரின் கைகூப்பிய முழுப்படம் ஒன்றை 'தினமணி' என்றெல்லாம் விளம்பரமாய்ப் பிரசுரித்ததோ, அன்றெல்லாம், கலவரம் உக்கிரம் பெற்றுள்ளது.

இங்கு எண்ணற்ற ஆதாரங்களை தேவரின் சாதி வெறிப்போக்கிற்கான சான்றாகக் காட்டினாலும் தேவர் அபிமானிகள், 'தேவர் தனக்கு சொந்தமாய் இருந்த எக்கச்சக்கமான ஏக்கர் நிலங்களை தலித்களுக்கு எழுதிக் கொடுத்தவர்' என்று சொல்வது வழக்கமே. அவ்வாறு தேவர் நிலம் தந்தமைக்கு இருந்த உள்நோக்கத்தை அன்றைய அமைச்சர்கள் பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியமும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளனர் 'தனக்கு விசுவாசமாய் வாலாட்டும் ஓர் அடியாள் படையை தேவர் இவ்வாறுதான் உருவாக்கினார்' என்று.

*************************
ஆதார நூல்கள்
1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
2)
பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் - தொகுப்பு கே.ஜீவபாரதி
3)
பசும்பொன் தேவரின் கட்டுரைகள் - தொகுப்பு கே.ஜீவபாரதி
4)
சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
5)
பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6)
சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு - தொகுப்பு கே.ஜீவபாரதி
*************************

நன்றி: கற்பகவிநாயகம் (அசுரன் - வலைதளம்)
vellaram@yahoo.com

ஆட்டக்கடிச்சு, மாட்டக்கடிச்சு கடைசியா மனுசனையே கடிக்க ஆரமிச்சுட்டாங்க! அதுலயும் பொம்பளதான்!


இளம்பெண்னை உயிருடன் அறுத்து 
சமைத்து சாப்பிடும் அதிர்ச்சி படங்கள் :

பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்!
ஆடு,மாடு, கோழி, மீன், பன்றி, பாம்பு, நாய், நண்டு, தவளை, உடும்பு, பூனை, நத்தை, முயல், பல்லி, கரப்பான் பூச்சி, எறும்பு, கொசு, தேனீ,கரையான், புறா, மடையான்,கொக்கு, மயில், குயில்,சிட்டுக்குறுவி  என்று மனிதன் சாப்பிடாத ஐட்டமே இல்லை.  அதுவும் சீனர்கள் சாப்பிடாத ஐட்டமே இல்லை.

மனிதன் மட்டும்தான் பாக்கி ( அகோரிகள் மனித மாமிசத்தை சாப்பிடுவது தவிர) என்று இருந்தது.  ஆனால், இப்போது மனிதனையும் விட்டுவைக்கவில்லை மனிதர்கள்.(?)

சீனாவில் ஒரு இளம்பெண்ணை ஆடு, கோழியைப்போல் உயிருடன் அறுத்து சமைத்து சாப்பிடும் அதிர்ச்சி படங்களை ஒரு சீன இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த அதிர்ச்சி படங்கள் :






















’’மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே- இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே’’

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழகத்தின் சுயநிர்ணயஉரிமை

சுயநிர்ணய உரிமையும் தனிநாடும்
ஒரு நாட்டில், இருவேறு தேசிய இனங்கள் இருக்கும்பட்சத்தில், அந்த தேசியஇனங்கள், தங்கள் சமுகவாழ்நிலையை நிர்ணயிக்கும் உரிமை, அந்தந்த தேசிய இனங்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதே நியாயம். அதாவது, தமிழ்மொழி பேசுபவர்கள், ஆண்டாண்டு காலமாக, தங்களுக்கென்ற ஒரு கலாச்சாரத்துடனும் அதற்கான உளவியலையும் பெற்றுவாழ்ந்து வந்துள்ளனர். அந்த மொழியையும், கலாச்சாரத்தையும், உளவியலையும் மற்றொரு தேசிய இனத்தால், உதாரணத்திற்கு சிங்கள தேசிய இனத்தால் புரிந்து கொள்ளமுடியாது. ஏனென்றால், சிங்கள மொழி பேசும் மக்கள், தனிவகையான கலாச்சாரம் மற்றம் உளவியலை பெற்று வாழ்ந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், தமிழர்களின் வாழ்நிலையை சிங்களர்களோ, சிங்களர்களின் வாழ்நிலையை தமிழர்களோ நிர்ணயிக்க முடியாது. அதாவது, சிங்களர்களை தமிழர்களோ, தமிழர்களை சிங்களர்களோ, ஆளமுடியாது. ஆனால், இரண்டு தேசிய இனங்களும் தங்களை தாங்களே ஆளும் அதிகாரத்தை தனித்தனியாக பெற்று, அந்த அதிகாரத்தை எந்த வகையிலும் பாதிக்காத படி சிங்களர், தமிழர் பொதுநன்மைக்கா, சிங்கள-தமிழர் கூட்டரசை உருவாக்கி அதன் முலம் இரண்டு தேசிய இனங்களும், நாடு என்ற வரையறுக்கப்பட்ட நிலபரப்பின் கீழ் ஒன்றாக வாழலாம் இதுவே சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இணைவாகும். இது, பெயரளவில் ஒரே நாடாக இருந்தாலும், அதனுள் சுதந்திரமான இரண்டு அரசுகள் நடைபெற்று வரும். சுதந்திர அரசுகளின் செயல்பாட்டை, நாடு என்ற அமைப்பு பாதிக்காத வரை, நாடு என்ற அமைப்பை சுதந்திர அரசுகள் பாதிப்படைய செய்யாது.
ஒரே நாடு என்ற பெயரில், ஒரு தேசிய இனம், மற்றொரு தேசிய இனைத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபடும்போது, அந்த தேசிய இனங்கள் தங்களுக்குள், இருந்து வந்த பொதுவான தன்மையை இழந்து விடுகின்றன. இதன்காரணமாக, ஒரேநாட்டில் ஒன்றாக இருந்த, இரண்டு சுதந்திர தேசிய அரசுகள், இரண்டாக பிளவுற்று, இரண்டு சுதந்திர நாடுகள் உருவாகின்றன. கூட்டரசு என்பது, அதாவது ஒரே நாடு என்பது, இரண்டு தேசிய இனத்தையும் சேர்ந்த மக்களின் நன்மைக்கா அமைக்கபட்டது என்பதை அனைவரும் எளிதாக புரிந்துகொள்வதைபோல, பிரிந்த செல்வது என்பதும் கூட, மக்களின் நன்மைக்கே என்பதை பெரும்பாலானோர் புரிந்துகொள்வதில்லை. மக்களிடம் போலியாக ஊட்டப்படும் தேசிய உணர்வு என்ற பொய் பிரச்சாரமே இதற்கு காரணமாகும்.  
ஏன் தனி நாடு?
ஆங்கிலேயர் ஆட்சி செய்தவரை, சட்டம் இயற்றப்பட்டதிலும், உரிமைகள் வழங்கபட்டதிலும் முழுக்க, முழுக்க அவர்களின் சுயநலத்திற்கே முன்னுரிமை கொடுக்கபட்டது என்றாலும், அதில், சிங்களர், தமிழர் என்ற பேதம் பார்க்கப்படவில்லை. அதாவது, இலங்கையின் வளத்தை சுரண்டிய ஆங்கில அரசின் நடவடிக்கையால், சிங்களர், தமிழர் ஆகிய இருவரும் சமமாக பாதிக்கப்பட்டனர். 1948 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதும், இலங்கையின் அரசு அதிகாரம் சிங்களர்கள் வசம் சென்றது. ஏனென்றால் இலங்கை தீவில், எண்ணிக்கையில் சிங்களர்களே அதிகம். ஆகவே, விகிதாச்சார அடிப்படையில், அரசு அதிகாரம் சிங்களர்களிடம் சென்றது. அரசு அதிகாரத்தை கையில் எடுத்த சிங்கள அரசியல்வாதிகள் (ஆளும்வர்க்கம்), ஆட்சிசெய்வதிலும், சட்டம் இயற்றுவதிலும் சிங்களர் தமிழர் என்ற பாகுபாடு பார்க்காமல், அனைவருக்கும் பொதுவான வகையில் செயல்படவில்லை. அதுவரை, சிங்களர்களுக்கு இணையாக தமிழர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவதற்காக தமிழர்கள் தொடங்கிய போராட்டம் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமாக கட்டியமைக்கப்பட்டது. அதாவது, இரண்டு தேசிய இனங்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே நாட்டிற்குள் வாழ்வதற்கு தேவையான சுயநிர்ணய உரிமையை கோரி தமிழர்கள் போராட்டத்தை தொடங்கினர். தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை தர மறுத்த சிங்கள தேசிய இனம் (சிங்கள அரசு) அவர்கள் அதுவரை அனுபவித்து வந்த உரிமைகளையும் ஒவ்வொன்றாக பறிக்கத்துவங்கியது. இதை எதிர்த்து, தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள், இலங்கை நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என பொய் பிரச்சாரத்தின் முலம் சிங்கள அரசால் கடுமையாக அடக்கப்பட்டன. நாடு என்ற அமைப்பு தேசிய இனத்தின் சுதந்திரத்திற்கு, அதாவது சுயநிர்ணய உரிமைக்கு பாதிப்பை உண்டாக்கியதை தொடர்ந்து, காலத்தின் கட்டாயத்தால், தமிழர்களுக்கான தனி நாடு என்ற நியாயமான கோரிக்கை உதித்தது.
தமிழகத்தின் சுயநிர்ணய உரிமை
தமிழ்நாடு என்று அழைக்கப்படும் நிலப்பரப்பில், வரலாறு எழுதப்பட்ட காலம் முதல், தமிழ்மொழி பேசி, பொதுவான கலாச்சாரத்தை கொண்ட மக்கள் வாழ்ந்து வருவதற்கான சான்றுகள் ஐயத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்தியாவின் ஒருமாநிலமாக உள்ள தமிழ்நாடு, சோழர்கள் காலத்தில், தெற்காசியாவின் பலநாடுகளை வென்று ஒரு பேரரசாக திகழ்ந்த வரலாற்றை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இதேபோன்று, இந்தியாவில் உள்ள பல்வேறு தேசியஇனங்களும், தங்களை தாங்களாகவே ஆண்டு வந்ததற்கான வரலாறு உள்ளது. பல்வேறு தேசியஇனங்களின் ஒருங்கிணைப்பின் முலமே, இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா என்ற கூட்டரசு(?) உருவாக்கப்பட்டுள்ளது. சுதந்திர அரசுகளின் செயல்பாட்டை, அதாவது, தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமையை, நாடு என்ற அமைப்பு பாதிக்காத வரை, நாடு என்ற அமைப்பை சுதந்திர அரசுகள் (தேசியஇனங்கள்) பாதிப்படைய செய்யாது என்பது நமக்கு தெரியும். ஆகவே, இந்தியா என்ற கூட்டரசின் அங்கமாக உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே, இந்தியா என்ற நாடு (கூட்டரசு) முழு அர்த்தத்தை பெறும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தேசியஇன போராட்டம்
இலங்கையில், ஈழபோராட்டத்திற்கான கரு கூட உருவாகாத நிலையில், தமிழ்நாட்டில், தேசியஇனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம், தனி தமிழ்நாடு என்ற உட்சபட்ச கோரிக்கையுடன் தொடங்கிவிட்டது. திராவிட கட்சிகள் தேர்தல்பாதைக்கு வந்தபிறகு, தனி தமிழ்நாடு கோரிக்கை கைவிடப்பட்டு, சுயாட்சி என்ற கோரிக்கை, முன்நிறுத்தப்பட்டது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தை வைத்தே, தற்போது வரை, திராவிட கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. ஆனால் நடைமுறை என்று வரும்போது, சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கை தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்தாகவே உள்ளது. அதாவது, திராவிட கட்சிகள், சுயநிர்ணய உரிமையின் உண்மையான அர்த்தத்தை மறைத்து, மக்களை ஏமாற்றி வருகின்றன. வருடா வருடம் தி.மு.க பொதுக்குழுவில், மாநிலசுயாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தவிர, அதை அடைவதற்கான எந்த வகையான வழிமுறையும் நடைமுறை படுத்தியதாக தெரியவில்லை. அ.தி.மு.க அதையும் கூட செய்வதில்லை. அதாவது, திராவிட கட்சி என்ற போர்வையை போர்த்திக்கொண்டு நடிக்க கூட தயாராக இல்லை.
கடந்த அறுபதாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, தமிழகத்தில், சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் பின்னோக்கியே பயணித்துள்ளது. அதேவேளையில், சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறையின் காரணமாக, ஈழத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வேகமாக முன்னேறி, தனி ஈழம் என்ற கோரிக்கையுடன், பெரும் மாற்றத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக, தேசியஇன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், ஈழமக்கள், தமிழக மக்களை பின்தொடரவேண்டிய சூழ்நிலை மாறி, தமிழகம் ஈழத்தை பின்தொடர வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பின்தொடரல் என்பது கடந்த முப்பது வருடங்களில், தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை திசைவிலகச்செய்துள்ளது. ஏனெனில், பின்தொடரல் என்ற பதம், நேரடியாக அர்த்தப்படும்படியாக, அந்த பின்தொடர்வு அமைந்துள்ளது. சுருங்கக்கூறினால், தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது, தனிஈழத்திற்கான போராட்டமே என்று தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது.
ஈழப்பிரச்சனையை பொறுத்தவரை தமிழகத்தில் காலம் காலமாக நடைமுறையில் உள்ள போராட்ட வடிவத்தையும் அப்போராட்ட முறையின் பின்னனியில் உள்ள அரசியலையும், 2009 இன அழிப்பு இறுதிப்போருக்கு பின்னரும் கூட மறுபரிசீலினை செய்ய நாம் தயாராக இல்லை. இது நாள் வரை ஈழப்பிரச்சனை என்பது, தமிழகத்தில் உணர்வுவயப்பட்ட அரசியலால் மட்டுமே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமை என்ற பலமான பாரம்பரியம் கொண்ட தமிழக அரசியல் போராட்டத்துடன், ஈழப்போராட்டம் உறுதியா இணைக்கப்படவே இல்லை. எப்பொழுதெல்லாம், தமிழர்களுக்கெதிராக சிங்கள பேரினவாத அரசு தன் அடக்குமுறையை அவிழ்த்து விடுகிறதோ, அப்போது மட்டுமே போராட்டகளம் உருவாக்கப்டுகிறது. இக்களத்தில், போராட்டத்தின் தீர்மானகரணமான சக்தியான, சாமான்ய மக்கள் பங்கேற்பதில்லை. காரணம், சாமான்ய மக்களையும் இணைத்து நடத்தும் அளவிற்கு, அப்போராட்டத்தை தலைமை தாங்குபவர்களின் அரசியல் முற்போக்கானதாக இருப்பதில்லை. அதாவது, தமிழகமக்களின் பிரச்சனைகளையொட்டி, ஈழப்பிரச்சனையை புரிந்துகொள்ளும் அளவிற்கு அரசியல் ரீதியாக மக்கள் பக்குவபடுத்தபடவில்லை. சுருங்ககூறினால், தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துடன், ஈழப்போராட்டம் அரசியல்ரீதியாக இணைக்கப்படவில்லை. இந்த வழக்கம், கடந்த பல பத்து ஆண்டுகளா நடைமுறையில் உள்ளது. தவறான அரசியலும், அதன் தொடர்ச்சியான தவறான நடைமுறையும், ஆயிரம் ஆயிரம் உயிர்களை பலிகொடுத்த பின்னரும், மாறாமல் உயிருடன் உள்ளது. உண்மையில் இதன் காரணம், ஈழத்தின் சுயநிர்ணய உரிமைதான் தமிழகத்தின் சுயநிர்ணய உரிமை என்று கருதப்படுவதேயாகும். இந்தபார்வை, ஈழவிடுதலைக்கோ, தமிழக சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கோ எந்த வகையிலும் பயன் தருவதில்லை. மாறாக இந்த இரண்டு போராட்டங்களையும் குறித்த தவறான புரிதலை மக்களிடன் ஏற்படுத்துவதுடன், போராட்டங்களை திசைதிருப்பும் வகையிலும் அமைந்து விடுகின்றது. 
சுயநிர்ணய உரிமையும், ஏகாதிபத்திய எதிர்ப்பும்
இலங்கையை பொறுத்தவரை, ஒடுக்கும் தேசியஇனம் சிங்கள தேசியஇனம், ஒடுக்கப்படும் தேசியஇனம் தமிழ் தேசியஇனம் என்பது பட்டவெளிச்சம். சிங்கள பேரினவாத அரசு, தமிழ்தேசிய இனத்தின் மீது கட்டவிழ்த்து விடும் அடக்குமுறையின் காரணமாக, தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமையை இழந்ததோடு மட்டுமல்லாமல், அடிப்படை வாழ்வுரிமையையே இழந்துநிற்கின்றனர். ஆகவேதான், வாழ்வுரிமைக்கான, தனி ஈழம் என்ற கோரிக்கை அங்கு வழுப்பெற்றுள்ளது. இன அழிப்புபோர், அக்கோரிக்கையை மேலும் வழுப்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது, வெறும் அடையாள வகைப்பட்ட போராட்டமாவே உள்ளது. திராவிட வாக்கு அரசியல் கட்சிகளும் சரி, தமிழ்தேசியம் பேசும் சமுக இயக்கங்களும் சரி, காவிரிக்காக கர்நாடகாவுடனும், முல்லைபெரியாருக்காக கேரளாவுடனும், கிருஷ்ணாவுக்காக ஆந்திராவுடனும் சண்டையிடுவதை அல்லது பேரம்பேசுவதை மட்டுமே சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என நம்மை நம்பவைக்கின்றன. இதைதாண்டி, ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக ஏதேனும் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டால், அதை கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களையும் கூட, தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என கணக்கு காண்பிக்கின்றன. அதாவது, ஈழத்திற்காகவும், அண்டைமாநில அரசுகள் செய்யும் அநீதிகளுக்காகவும் மட்டுமே மத்திய அரசை எதிர்த்து அடையாள வகை போராட்டம் நடத்தும் இவர்கள், மத்திய அரசின் ஏகாதிபத்திய ஆதரவு கொள்கையின் காரணமாக, தமிழகத்தின் சுயநிர்ணய உரிமை, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடகுவைக்கப்படும் மிக முக்கியமான நிகழ்வுபோக்கை எதிர்த்து ஒருபோதும் குரல் கொடுப்பதில்லை.
தமிழக விவசாயிகளின் விளைநிலம் (நம் மண்), தூரதேசத்திலிருந்து நாட்டை சுரண்ட வந்த விதேசிகளால் களவாடப்படுவதைபற்றி இவர்களுக்கு கவலைஇல்லை. தமிழகத்தின் பாரம்பரிய விவசாயமுறை நவீனம் என்ற புனைப்பெயரில், ஏகாதிபத்திய கொள்ளை லாபத்திற்காக கொலைசெய்யப்படுவதை பற்றி இவர்களுக்கு கவலைஇல்லை. விதை நெல்லை களவாடி, இரசாயன உரத்தால் நம் மண்ணை உயிரிழக்கசெய்யும் ஏகாதிபத்தியத்தின் விளைபொருளான லாபவெறி, காலம் கலமாக நாம் பயன்படுத்தி வந்த பொருட்களை கூட, இனி அயலான் அனுமதி இல்லாமல் உபயோகிக்க முடியாது என்ற கேவலமான நிலைமைக்கு நம்மை தள்ளியுள்ளது குறித்த அறிவும் கூட அவர்களுக்கு இல்லை.
ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்வற்காகவே, மாநிலங்களிடம் மிச்சமிருக்கும்   உரிமைகளையும் மத்திய அரசு முழுவதுமாக பிடுங்க நினைக்கின்றது. தமிழக மாணவர்களுக்கு கல்வி வழங்கும் முழுபொறுப்பும் மாநில அரசுக்கே உள்ளது. ஆனால், கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், தமிழக மாணவர்களின் கல்வி குறித்து, தமிழக அரசால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. இதனால், உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய ஆதரவு கொள்கையின் காரணமாக, தனியார்மயத்தை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடும் மத்திய அரசு, உயர்கல்விக்கு மானியம் வழங்கும் கொள்கையிலிருந்த பின்வாங்கியுள்ளது. இக்கொள்கையை, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுகின்றது. இதனால், தமிழகத்தில் அரசு கல்விநிலையங்களில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உரிய வசதிகள் எதுவும் செய்துதரப்படாத நிலையில், தமிழக மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக, இலட்சக்கணக்கில் பணம் செலவிட்டு, தனியார் கல்வி நிறுவனங்களை நாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தனியார்மயத்தின் விளைவாக, புற்றீசல்போல் உருவாகிவரும் தனியார் கல்வி நிலையங்கள், கல்வியை வியாபாரமாக்கி, தொடக்கல்விக்கே இலட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன. மத்தியஅரசு தாராளமய கொள்கையை நடைமுறைபடுத்துவதன் விளைவாக, பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கும் தொகை தொடர்ச்சியாக குறைத்துவருகின்றது. இதையே மாநில அரசுகளும் பின்பற்றுகின்றன. பணம் கொடுத்தால் மட்டுமே சிறந்த கல்வி என்ற நிலையில், கல்விகடன் என்ற பெயரில், தமிழக மாணவர்கள் படிக்கும் போதே கடன்காரர்களாக மாற்றப்படுகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், தனியார் கல்வி கூடங்களை அரசுடமையாக்க வேண்டும் என்று மாநில அரசிடம் வெறுமனே, கோரிக்கை மட்டும் வைப்பவர்கள், அந்த உரிமை மாநில அரசுக்கு உள்ளதா? அதை எப்படி சாத்தியப்படுத்த போகிறோம் என்பதை கூட யோசிப்பது கிடையாது.
தமிழகத்தில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள், தமிழக தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான, சங்கம் வைக்கும் உரிமையை மறுப்பதுடன், பல ஆண்டுகள் போராடிப்பெற்ற 8 மணிநேர வேலை என்ற உரிமையையும் மறுத்து வருகின்றது. பன்னாட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையடிப்பதற்காக, சிறப்பு பொருளாதாரமண்டலங்கள் என்ற பெயரில், தமிழகத்திற்குள் முளைத்து வரும் சுதந்திர தீவுகளில், தமிழக அரசின் தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது. சுருங்கசொன்னால், தமிழக அரசுக்கு அம்மண்டலங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.
உலகநாடுகள் அனைத்தும் மக்களின் கடும் எதிர்ப்பை கண்டு அஞ்சி பேராபத்தை விளைவிக்ககூடிய அணு உலைகளை முடிவரும் நிலையில், அந்நாடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட நிறுவனங்கள், விற்றுபோகாத தங்கள் அணு உலைகளை இந்தியாவின் தலையில் கட்டுவதற்கான ஏற்பாட்டை, அணு ஒப்பந்தம் என்ற பெயரில் மத்திய அரசு நிறைவேற்றிதந்துள்ளது. தமிழ்நாட்டில், ஏற்கனவே 5 அணு உலைகள் இயங்கிவரும் நிலையில், ஒப்பந்தத்தின் விளைவாக மேலும் பல அணு உலைகள் நிறுவப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. மத்தியஅரசு நடைமுறை படுத்திவரும் தாராளமய மற்றும் தனியார்மய கொள்கையின் விளைவால், பன்னாட்டு முதலாளிகள் இலாபம் அடைவதற்காக, தமிழக மக்களின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது.
இறையாண்மையுடைய ஒரு அரசின் குடிமகன், அந்த அரசுக்கு உட்பட்ட நிலபரப்பில் உருவாக்கப்படுள்ள சாலையில், எந்தவித வரியும் செலுத்தாமல்  சுதந்திரமாக சுற்றி திரியலாம். இதற்குமாறாக, தமிழகத்தில் நம் சாலையை, நாம் உபயோகிப்பதற்காக தனியாருக்கு பணம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாயுள்ளது. தனியார்மய கொள்கை, நலத்திட்டங்களுக்கு அரசு பணம் செலவிடுவதை குறைக்கசெய்கிறது அல்லது முற்றிலும் நிறுத்தசெய்கிறது. இதன் காரணமாக, ஆண்டாண்டு காலமாக, அரசு செய்துவரும் நலத்திட்ட பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அதுவரை, சேவைகளை இலவசமாக பெற்றுவந்த மக்கள், தற்போது தனியாருக்கு பணம் கொடுத்து அச்சேவைகளை பெறவேண்டியுள்ளது. சாலைகள் அமைக்கும் பணி, மருத்துவ வசதி செய்துதரும் பணி மற்றும் பல்வேறு நலப்பணிகளை அரசு தனியாரிடம் வழங்கியுள்ளது. இதன்காரணமாக, நம் மண்ணில், நம் சாலையை, நாம் உபயோகபடுத்த கூட, பன்னாட்டு நிறுவங்களுக்கு பணம் கொடுக்கவேண்டிய அவலத்திற்கு ஆற்பட்டுள்ளோம்.
தமிழகத்தின் உயிர் ஆதாரமான மண்ணும், நீரும் கூட தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு, அதன் மீதான நம் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்களின் இலாப வெறியின் காரணமாக, தமிழகத்தின் இயற்கைவளம் சுரண்டப்பட்டும் மாசுபடுத்தப்பட்டும் வருகின்றன. ஏகாதிபத்திய ஆதரவின் விளைபொருட்களான தனியார்மயம் மற்றும் தாராளமயக்கொள்கையினால், தமிழக மக்கள் அனுபவித்துவரும் துன்பத்தை போக்கவும், தமிழக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும் போராட்டத்தின் மிக முக்கிய பங்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை நாம் இன்னும் தொடங்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.
தவறான கண்ணோட்டம்
வெவ்வேறு நிலபரப்பில் வாழும் மக்கள், அந்தந்த நிலபரப்பின் வரலாற்றின் தொடர்ச்சியாக வெவ்வேறுவகை சமுக சூழலில் வாழ்கின்றனர். அந்த சமுகத்திலிருந்து பெறப்படும் உணர்வால், வெவ்வேறு கலாச்சாரத்துடனும், உளவியலுடனும் வாழ்கின்றனர். இவ்விரு நிலபரப்புகளுக்கும் வரலாற்று காலம்தொட்டு, கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தாலும் அது சமுக சூழ்நிலையின் அடிப்படையை நிர்ணயிக்கும் காரணியாக கருதமுடியாது. ஆகவே, ஒரே மொழிபேசுபவர்கள் எல்லாம், ஒரே தேசியஇனம் என்று கூறிவிட முடியாது. ஈழமக்களை நாம், தொப்புள்கொடி உறவுகள் என்று கூறுவதன் முலம், ஈழப்போராட்டத்துற்கு வழுசேர்க்க முயல்கின்றோம். ஆனால், இந்த சொல்லாடலே தமிழகத்தில் ஈழபோராட்டாத்திற்கு ஆதரவாக கட்டியமைக்கவேண்டிய போராட்டத்தை திசைவிலகச்செய்து வருகின்றது. தமிழகத்தில் இருந்து கொண்டு, தமிழக அரசியல் சூழலையும், மக்கள் வாழ்நிலையையும் கவனத்தில் கொள்ளாமல், முழுக்க, முழுக்க ஈழ ஆதரவு கோசங்களை மட்டுமே முன்னெடுத்து செல்லும் செயல், ஈழதேசிய இனத்தையும், தமிழக தேசியஇனத்தையும் ஓன்றாக பார்ப்பதன் விளைவேயாகும். இந்தபார்வை, ஈழத்தையும், தமிழகத்தையும் ஒரேநாடாக பார்க்க தூண்டுகிறது. அதனாலேயே, ஈழஆதரவாளர்கள், ஈழவிடுதலை என்பதை, தமிழகமக்களின் விடுதலையாக பார்க்கின்றனர். தமிழகத்தின் சுயர்ணய உரிமை, ஏகாதிபத்தியத்தினால் நசுக்கப்பட்டு வரும் நிலையில், ஈழத்திற்கு ஆதரவாக ஏகாதிபத்திய நாடுகள் செயல்படுகின்றன என்ற காரணத்திற்காக, தமிழகத்தை மறந்து ஏகாதிபத்திய ஆதரவுகோசங்கள் ஈழஆதரவாளர்களால் தமிழகத்திலிருந்தே எழுப்பப்படும் ஒரு கேவலமான நிலை உருவாகியுள்ளது. இதனால், ஏகாதிபத்தியத்தால் (தனியார்மயம்,தாராளமயம்) பாதிக்கப்பட்ட சாமான்ய மக்களை, ஈழஆதரவுபோராட்டத்துடன் இணைக்க முடிவதில்லை. ஈழதேசிய இனத்தையும், தமிழக தேசிய இனத்தையும் ஒரே தேசியஇனமாக கருதுவது, ஈழபோராட்டத்திற்கு தமிழகமக்கள் செய்யவேண்டிய கடமையிலிருந்து தவறச்செய்வதோடு, தமிகத்தில் கட்டியமைக்க படவேண்டிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறுக்கச்செய்கின்றது. ஈழத்தமிழனையும், தமிழகதமிழனையும் ஒரே தேசியஇனமாக கருதுவது எந்தவகையிலும், இருவருக்கும் நன்மையை தருவதில்லை என்றாலும், அவ்வாறு ஈழமக்களை பிரித்து பார்ப்பது “ஈழமக்கள் நம் தொப்புள்கொடி உறவுகள்” என்று காலம் காலமாக கூறிவரும் சொல்லின் புனிதத்தை கெடுத்துவிடும் என்று ஈழஆதரளவாளர்கள் கருதுகின்றனர்.

என்னசெய்ய வேண்டும்?
தமிழகத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கட்டியமைப்பதன் முலமே ஈழபோராட்டத்திற்கு நாம் தோள்கொடுக்க முடியும். அதற்கான வேலையை செய்யாமல், இங்கிருந்துகொண்டு ஈழவிடுதலைக்கு குரல்கொடுப்பது மட்டும் எந்தவகையிலும் ஈழமக்களுக்கோ, தமிழக மக்களுக்கோ நன்மையை தரப்போவதில்லை. தமிழகத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது அளவுரீதியில் ஏகாதிபத்திய எதிர்ப்புபோராட்டமே. இதை உணர்ந்து தமிழகத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வலுவாக கட்டியமைக்கப்படுவதே, ஈழமக்களுக்கும், தமிழகமக்களுக்கும் அனைத்து வகையான அடிமை நுகத்தடிகளிலிருந்தும் விடுதலையை பெற்றுதரும்.

-அசீப்

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை!!!!!!!!

வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகிவிட்டது... இன்று(25.10.11) சென்னையில் பெய்த மழையில் சென்னையே ஸ்தம்பித்துவிட்டது. ஒரு மணி நேர மழைக்கே சென்னையின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் போல் தண்ணீர் சூழ்ந்தது. குறிப்பாக சிந்தாதிரிபேட்டை, எழும்பூர், நேப்பியர் பாலம் அருகில், கீழ்பாக்கம், புளியந்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் வெள்ளக்காடாக மாறியது. இதனால் சென்னை நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னையே ஸ்தம்பித்தது. சென்னையில் மழை நீர் கால்வாய்கள் சரிவர பராமரிக்காததே இதற்கு காரணம். மழைகாலம் தொடங்கும் முன்னே மழை நீர் வடிகால்வாய்களை சரிசெய்யவேண்டியது அரசின் கடமையாகும். இனியாவது இதில் கவனம் செலுத்துமா அரசு?

பா. மணிகண்டன் 
செய்தியாளர்




ஊடகவியலாளர்கள் பட்டினிப் போராட்டம்!

ஊடகவியலாளர்கள் பட்டினிப் போராட்டம்!

மரண தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க கோரியும், 3 தமிழர்களின் உயிர்களை பாதுகாக்கக் கோரியும், மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டாவது சிக்னல் பக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் பட்டினி போராட்டம் நடத்தி வருகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பினர் அந்த பட்டினி போராட்டத்தில் பங்கு கொள்கிறார்கள். நாளை அக்டோபர் 19-ம் நாள் ஊடகவியலாளர்கள் சார்பாக அந்த பட்டினிப் போராட்டம் நடைபெறுகிறது.

ஊடகவியலாளர்களுடன் கல்லூரி மாணவர்களும், கலைஞர்களும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

அன்னையர் முன்னணியின் தலைவியும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் அமைப்பாளருமான பேராசிரியர் சரஸ்வதி நாளை காலை 9.30 மணிக்கு இந்தப் பட்டினி  போராட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.

தமிழ்நாடு அரசு தனது சட்டமன்ற தீர்மானத்தின் மூலம், மரண தண்டனை அறிவிக்கப்பட்ட 3 தமிழர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தண்டனையை குறைத்து அறிவிக்கும்படி இந்திய குடியரசு தலைவரை  கேட்டுக் கொண்டுள்ளது.

இதைப் போலவே ஒரு தீர்மானத்தை காஷ்மீர் பேரவையில் நிறைவேற்றி, அப்சல் குருவின் மரண தண்டனையை குறைப்பதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

பஞ்சாபை சேர்ந்த தேவநாத்பால் சிங் புல்லார் என்ற காலிஸ்தான் தளபதிக்கு அறிவிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கிலும் கூட தமிழகத்தின் சட்டமன்ற தீர்மானம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறாக மரண தண்டனையை அரசியல் சட்டத்திலிருந்து நீக்குவதற்கான 2007, 2008-ம் ஆண்டுகளில் டிசம்பர் 18-ம் நாள் ஐ.நா. வின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்தியா எங்கிலும் புத்துயிர்பெற்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

அந்த அள்வுக்கு தமிழகத்தின் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை குறைப்பு தீர்மானம் இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அத்தகைய தீர்மானத்தை வலுவேற்ற விரும்பும் தமிழ ஊடக வியலாளர்களும் மனித உரிமை குரலை உயர்த்துவதற்காக தங்களது சிறிய பங்களிப்பாக நாளை நடக்கும் பட்டினி போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு பங்கிளிப்பு செலுத்த வேண்டும். 

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive