மறைக்கப்பட்ட 161



 முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ் அமைப்புகளால் "வீரதமிழச்சி" என்று ஏற்கனவே தனக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார் ஜெயலலிதா. 


இரண்டு வாரங்களுக்கு முன், மூவரின் தூக்குதண்டனையை உறுதிசெய்து, உள்துறை அமைச்சகம் (நம்ம ப.சிதம்பரம் தான்) ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்தது. இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணைமனுக்களை நிராகரிப்பதாக தமிழக அரசுக்கு தகவல் அனுப்பினார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. வழக்கம்போல் சட்டக்கல்லூரி மாணவர்களும் வழக்கரிஞர்களும் போராட்டத்தின் வழியை தீர்மானிக்கும் சக்திகளாக செயல்பட்டனர். இவர்களை பின்பற்றி சமூகத்தின் மற்ற அங்கத்தினரும் போராட்டகளத்தில் குதித்தனர். ஒருகட்டத்தில் போராட்டகாரர்கள், அரசியல்சாசன சட்டத்தின் 161 வது விதியை பயன்படுத்தி மூவருக்கும்  விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை மாநிலஅரசு ரத்துசெய்யவேண்டும் என்று  ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைக்க தொடங்கினர். சட்டமன்ற கூட்டதொடர் நடைபெற்றுவரும் நிலையில், போராட்டக்காரர்களின் கோரிக்கை  குறித்து பதிலளிக்கவேண்டிய அவசியம் ஜெயலலிதாவுக்கு உருவானது. இருந்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வழக்கம்போல் சட்டமன்றத்தை  திறமையாக(!) நடத்திவந்தார் ஜெயலலிதா. 

தோழர் செங்கொடி
ஆகஸ்ட் இருபத்தெட்டாம்தேதி, அனைவரின் நெஞ்சையும் நெகிழவைக்கும் வகையில் 
காஞ்சி மக்கள்  மன்றத்தில் சமூகபணியாற்றி வந்த இளம்பெண் செங்கொடி, மூவரின் தூக்குதண்டனையை ரத்துசெய்ய கோரி தீக்குளித்துக்கொண்டார். யாருக்காக இல்லையென்றாலும், இந்த பெண்ணின் மரணத்திற்க்கு பதில் சொல்லவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார் ஜெயலலிதா. வேருவழின்றி மறுநாள் காலை சட்டமன்றத்தில் நூற்றுபத்தாம் விதியின்கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார் முதல்வர். அந்த அறிக்கையில், ஜனாதிபதியால் ஒருவரின் கருணைமனு நிராகரிக்கபட்டபின் மாநில அரசால் எதுவும் செய்யமுடியாது என்று கூறினார். அரசியல்சாசனத்தின் 161 ஆம் விதியை  மாநிலஅரசு பயன்படுத்தமுடியாத வகையில் 1991 ஆம் ஆண்டும் மத்தியஅரசு ஒரு  சுற்றறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பயுள்ளதாகவும், ஆகவே இந்தவிஷயத்தில் தன்னால்    எதுவும் செய்யமுடியாது என்று கையை விரித்தார் ஜெயலலிதா.

எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் அரசியல்சாசனமே உயர்ந்ததாக கருதப்படும். அதாவது அரசியல்சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை வேறுஎந்தவிதமான சட்டங்கள்போட்டோ, உத்தரவுகள் வழங்கியோ, சுற்றறிக்கைகள் அனுப்பியோ செல்லாததாக்கமுடியாது. அதாவது அரசியல்சாசனத்தின் 161  ஆம் பிரிவின்கீழ் மாநிலஅரசுக்கு உள்ள உரிமையை, மத்தியஅரசின் சுற்றறிக்கை எந்தவகையிலும் பரித்துவிடாது. இந்தவிஷயத்தை, மறைத்துவிட்டு தன்னால் எதுவும் முடியாது என்று சட்டமன்றத்தில் தெரிவித்த ஜெயலலிதா, மீண்டும் ஜனாதிபதியிடம் கருணை மனு வழங்க சட்டத்தில் இடம் உள்ளதாக தமிழகமக்களுக்கு சட்டஆலோசனை(!!!) வழங்கினார். 

தமிழகஅரசு கையை  விரித்துவிட்டது என்ற செய்திபரவியதும், தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. உயிர் நீத்த செங்கொடியின் உடலை, சென்னைவரை ஊர்வலமாக எடுத்துவரவேண்டும் என்ற  கோரிக்கைவலுத்தது. சென்னையில் உண்ணாவிரதம் இருந்துவந்த மூன்று பெண் வழக்கறிஞர்களின் போராட்டம் நான்காம் நாளை தாண்டி தொடர்ந்தது. ஜெயலலிதாவுக்கு, பெண்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதைவிட, தான் கூறிய 161  ஆம் பிரிவு பற்றிய கதையை மக்கள்  புரிந்துகொள்ளும் முன்னரே அவர்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் உருவானது. 


மறுநாள்காலை சட்டமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ள தூக்குதண்டனையை ஜனாதிபதி குறைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவந்தார் ஜெயலலிதா. தமிழகமக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்க்கு மதிப்பளிக்கும்வகையில் இந்த தீர்மானத்தை கொண்டுவந்ததாக அவர் விளக்கமளித்தார்.

விஜயதாரணி
தீர்மானம்  உண்மையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்றேகூறலாம். ஏனென்றால் அன்று காங்கிரஸ் சார்பாக சட்டமன்றம் வந்திருந்த ஒரே உறுப்பினரான விஜயதாரணி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அவையில் என்னநடக்கிறது என்பதைகூட அறிந்துகொள்ள முடியாமல் மிகவும் விழிப்புடன் அவைநிகழ்வுகளை கவனித்துகொண்டிருந்தார். தீர்மானம்  நிறைவேற்றப்பட்ட செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டபின்னர்தான், யாரோ விஜயதாரணியை தொடர்புகொண்டு இதுபோல் ஒரு தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது, இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்  என்பதை கூறினார்கள் என்று தெரிகிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆனபின், யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவையை விட்டு வெளியே வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, தீர்மானத்தை எதிர்த்து பேச அவைதலைவரிடம் தான் அனுமதி கேட்டதாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவையைவிட்டு வெளிநடப்பு செய்ததாகவும் செய்தியாளர்கள் காதில் முழம் முழமாக பூ சுற்றினார். அந்த பூ, அடுத்த சில நிமிடங்களில் மக்களின் காதுகளுக்கு மாற்றப்பட்டது. (இப்படிதான் நம் ஊடகங்களால் தினம்தோறும் மக்களின்  காதுகளில் பூ சுற்றப்பட்டு வருகின்றது).

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், உயர்நீதிமன்றம் தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை வழங்கியதையும் மக்கள் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் மத்தியில், தமிழகத்தின் உரிமையான  161  ஆம் பிரிவு பற்றிய உண்மை மறைக்கப்பட்டுவிட்டது. நாளை உயர்நீதிமன்றம் கைவிரித்து விட்டாலும் இனி தான் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துவிட்டார் ஜெயலலிதா.  நீதிமன்றம் கைவிட்டபிறகுதான் இந்த உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்படுமா? அதன்பின் காலம் கடந்து போராட்டம் நடத்தப்படுமா?

- அசீப்

ரையிடு நடத்தும் அலுவலகத்திலேயே ரையிடு!

ரையிடு நடத்தும் அலுவலகத்திலேயே ரையிடு!

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகமான ஆயகர் பவனில் சி.பி.ஐ. இன்று காலை 8 மணிமுதல் அதிரடி சோதனை நடத்தினர். சி.பி.ஐ.க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நடைபற்ற இச்சோதனையின்போது 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறை கூடுதல் இயக்குனரான திரு.அண்டசு ரவீந்தர் கைது செய்யப்பட்டார். மேலும் ரவீந்தர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஒரு கோடி ருபாய் ரொக்கப்பணமும், வெளிநாட்டு மதுபானங்களும் சிக்கியதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும்பொழுது, கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்களைக் குறைத்துக்காட்ட லஞ்சம் பெற்றதாக ரவீந்தர் மீது குற்றசாட்டு கூறப்பட்டுள்ளது!

மார்கண்டேய கட்ஜு!

மார்கண்டேய கட்ஜு!


சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியுமான திரு.மார்கண்டேய கட்ஜு, "போலி என்கவுன்ட்டர், நிரபராதிகளை குற்றவாளிகளாக சித்தரிப்பது, கருனைக்கொலையில் ஈடுபடுவது, வரதட்சனைக் கொடுமை செய்வது, உயர் பொறுப்புகளில் உள்ளவர்களைக் கொலை செய்வது உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, இந்திய ஜனாதிபதியால் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, தூக்கு தண்டனைக்கான தேதியும் செப்டெம்பர் 9, 2011 என குறிக்கப்பட்டு, தூக்கில் போடுவதற்கான உத்தரவு கடிதத்தையும் உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அனுப்பிவைத்து, அதை தமிழக அரசு சிறைத் துறைக்கு அனுப்பிவைத்து, வேலூர் சிறையில் தூக்கில் போடுவதற்கான வேலைகளும் துவங்கி, அதை தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் எதிர்க்கும் இச்சமயத்தில் நீதிபதி மார்கண்டேய கட்ஜு இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கக்கூடும்!

- உமர் முக்தார் 

பாலுக்கு பூனையே காவலன்

பாலுக்கு பூனையே காவலன்!


தேர்தலுக்காக மட்டுமே இப்தாரில் கடந்தாண்டு தான் கலந்துகொண்டதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவது தவறு என்றும், தான் 1999 ஆம் ஆண்டு முதல் இப்தார் நோன்புத் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருவதாகவும், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு என்றென்றும் இருக்கும் என்றும் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா நேற்றைய இப்தார் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

எனக்கொரு சந்தேகம்? பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தன் உற்ற நண்பனாக வைத்திருக்கும் ஜெயலலிதா எவ்வாறு முஸ்லிம்களுக்குப் பாதுகாவலனாக இருப்பார்? இச்செயல் பாலுக்கு பூனையே காவலன் என்பதுபோல் அல்லவா உள்ளது!

- உமர் முக்தார் 

லிபியா:விடுதலை???


செய்தி: லிபியா வீழ்ந்தது. கடாபி காணாமல் போனார். புரட்சியாளர்கள் (எனப்படுவோர்) த்ரிபோலியை கைப்பற்றினர். 

கருத்து: அமெரிக்கா தயாரித்துவரும் உலக வரைபடத்தில், இன்னுமொரு பொம்மை அரசாங்கம் (நாடு) சேர்க்கப்பட்டுள்ளது. 

இனி லிபியா உலக முதலாளிகளின் வேட்டைக் காடு. லாபவெறி பிடித்த ஓநாய்களின் எலும்பு துண்டுக்காக, மக்களை கொத்தி தின்னும் கழுகுகள் இனி லிபியாவை ஆட்சி செய்யும். உள்நாட்டு நரியின் பிடியிலிருந்து விடுபட்ட லிபிய மக்கள், வெளிநாட்டு ஓநாய்கள் வசம் சிக்கிக்கொண்டுள்ளனர். 


லிபிய மக்களுக்கு ஒரு செய்தி:
போராட்டமே  வாழ்க்கையின் தத்துவம்!!!


ஒரு வேண்டுகோள்

"ஹசரேவின் போராட்டம் வெறும் பரபப்பே" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையின் கடைசி பாகம் சரியாக தரவிறக்கம் செய்யபடாததால், அந்த கட்டுரையை எழுதியவர்கள், அந்த கட்டுரையை socialjournalists@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.  

- மாற்றத்திற்கான செய்தியாளர்கள்.

ஒரு அன்னையின் வேண்டுகோள்



ஒரு அன்னையின் வேண்டுகோள்....

என்ன செய்ய போகிறோம்???


- மாற்றத்திற்கான செய்தியாளர்கள்.

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive