ரையிடு நடத்தும் அலுவலகத்திலேயே ரையிடு!

ரையிடு நடத்தும் அலுவலகத்திலேயே ரையிடு!

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகமான ஆயகர் பவனில் சி.பி.ஐ. இன்று காலை 8 மணிமுதல் அதிரடி சோதனை நடத்தினர். சி.பி.ஐ.க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நடைபற்ற இச்சோதனையின்போது 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறை கூடுதல் இயக்குனரான திரு.அண்டசு ரவீந்தர் கைது செய்யப்பட்டார். மேலும் ரவீந்தர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஒரு கோடி ருபாய் ரொக்கப்பணமும், வெளிநாட்டு மதுபானங்களும் சிக்கியதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும்பொழுது, கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்களைக் குறைத்துக்காட்ட லஞ்சம் பெற்றதாக ரவீந்தர் மீது குற்றசாட்டு கூறப்பட்டுள்ளது!

மார்கண்டேய கட்ஜு!

மார்கண்டேய கட்ஜு!


சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியுமான திரு.மார்கண்டேய கட்ஜு, "போலி என்கவுன்ட்டர், நிரபராதிகளை குற்றவாளிகளாக சித்தரிப்பது, கருனைக்கொலையில் ஈடுபடுவது, வரதட்சனைக் கொடுமை செய்வது, உயர் பொறுப்புகளில் உள்ளவர்களைக் கொலை செய்வது உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே 21 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, இந்திய ஜனாதிபதியால் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, தூக்கு தண்டனைக்கான தேதியும் செப்டெம்பர் 9, 2011 என குறிக்கப்பட்டு, தூக்கில் போடுவதற்கான உத்தரவு கடிதத்தையும் உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அனுப்பிவைத்து, அதை தமிழக அரசு சிறைத் துறைக்கு அனுப்பிவைத்து, வேலூர் சிறையில் தூக்கில் போடுவதற்கான வேலைகளும் துவங்கி, அதை தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் எதிர்க்கும் இச்சமயத்தில் நீதிபதி மார்கண்டேய கட்ஜு இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கக்கூடும்!

- உமர் முக்தார் 

பாலுக்கு பூனையே காவலன்

பாலுக்கு பூனையே காவலன்!


தேர்தலுக்காக மட்டுமே இப்தாரில் கடந்தாண்டு தான் கலந்துகொண்டதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவது தவறு என்றும், தான் 1999 ஆம் ஆண்டு முதல் இப்தார் நோன்புத் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருவதாகவும், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு என்றென்றும் இருக்கும் என்றும் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா நேற்றைய இப்தார் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

எனக்கொரு சந்தேகம்? பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தன் உற்ற நண்பனாக வைத்திருக்கும் ஜெயலலிதா எவ்வாறு முஸ்லிம்களுக்குப் பாதுகாவலனாக இருப்பார்? இச்செயல் பாலுக்கு பூனையே காவலன் என்பதுபோல் அல்லவா உள்ளது!

- உமர் முக்தார் 

லிபியா:விடுதலை???


செய்தி: லிபியா வீழ்ந்தது. கடாபி காணாமல் போனார். புரட்சியாளர்கள் (எனப்படுவோர்) த்ரிபோலியை கைப்பற்றினர். 

கருத்து: அமெரிக்கா தயாரித்துவரும் உலக வரைபடத்தில், இன்னுமொரு பொம்மை அரசாங்கம் (நாடு) சேர்க்கப்பட்டுள்ளது. 

இனி லிபியா உலக முதலாளிகளின் வேட்டைக் காடு. லாபவெறி பிடித்த ஓநாய்களின் எலும்பு துண்டுக்காக, மக்களை கொத்தி தின்னும் கழுகுகள் இனி லிபியாவை ஆட்சி செய்யும். உள்நாட்டு நரியின் பிடியிலிருந்து விடுபட்ட லிபிய மக்கள், வெளிநாட்டு ஓநாய்கள் வசம் சிக்கிக்கொண்டுள்ளனர். 


லிபிய மக்களுக்கு ஒரு செய்தி:
போராட்டமே  வாழ்க்கையின் தத்துவம்!!!


ஒரு வேண்டுகோள்

"ஹசரேவின் போராட்டம் வெறும் பரபப்பே" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையின் கடைசி பாகம் சரியாக தரவிறக்கம் செய்யபடாததால், அந்த கட்டுரையை எழுதியவர்கள், அந்த கட்டுரையை socialjournalists@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.  

- மாற்றத்திற்கான செய்தியாளர்கள்.

ஒரு அன்னையின் வேண்டுகோள்



ஒரு அன்னையின் வேண்டுகோள்....

என்ன செய்ய போகிறோம்???


- மாற்றத்திற்கான செய்தியாளர்கள்.

பி.பி.சி:பித்தலாட்டம்



லண்டன் மாநகரில் கடந்தவாரம் முழுவதும் நடந்த சம்பவங்களை, உலக மீடியாக்கல் மிகவும் கேவலமாக, திருடர்களும் போக்கிரிகளும் நடத்திய கலவரமாகவே சித்தரித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளின், மக்கள்விரோத பொருளாதார கொள்கையினால் நாளுக்குநாள் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவருவதும், உழைக்கும் மக்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படுவதும் அதிகரித்துவருகின்றது. லண்டன் கலவரத்தை, இந்த பின்னனியிலிருந்தும் பார்க்கவேண்டி உள்ளது. இந்த பிரச்சனையில், உலக மக்களால் நடுநிலையான செய்திநிறுவனம் என்று (தவறாக) நம்பப்படும் பி.பி.சி, அரசின் ஆதரவு குரலாக செயல்பட்டு, போராட்டத்தின் மற்றொரு பக்கத்தை மறைத்து, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகின்றது. 

லண்டன் சம்பவகளின் மற்றொரு பக்கத்தை "ரஷ்யா டுடே" என்ற செய்தி சேனல் ஒளிபரப்பியது. அந்த செய்தியில் பி.பி.சி யில் காட்டப்பட்ட, மக்கள் வணிக நிறுவனங்களை சூறையாடும் சம்பவங்களும் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அவர்களின் போராட்டத்திற்கான காரணம் கேட்கப்பட்டு அவை ஒலிபரப்பு செய்யப்பட்டன.  போராட்டத்தில் ஈடுபட்ட (சூறை சம்பவங்களில்) ஒரு பெண்ணிடம் RT (ரஷ்யா டுடே) செய்தியாளர் பேட்டி எடுத்தபோது " என் குழந்தைக்கு பால்வாங்க கூட என்னிடம் பணம் இல்லை, அதனால்தான் பாலை திருடுகிறேன்" என்று கூறுகிறார். மற்றொரு பெண், குழந்தைக்கு "நாப்கின்" திருடியதாக கூறுகிறார். ஆனால் பி.பி.சி யோ, சமூகவிரோதி ஒருவனை போலீசார் சுட்டுகொன்றதால், அந்த சமூகவிரோதியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றது. அந்த செய்தியையே நமது தொலைக்காட்சிகளும் வாந்தி எடுத்து வருகின்றன. 

மக்களை திருடர்களாக அரசு சித்தரித்துவரும் நிலையில், மக்கள் வெளியிட்டுள்ள விளம்பரம் இது.(படம் பார்க்க).


கிரீஸ், இத்தாலியை தொடர்ந்து, ஆள்பவர்களின் மக்கள்விரோத கொள்கையினால், மக்கள் போராட்டம் இங்கிலாந்தில் வெடித்துள்ளது. ஆட்சியாளர்களுக்கு எதிராக ஐரோப்பா பற்றி எரிகிறது. ஐரோப்பிய மக்களை விட, பெரும் துன்பத்தை அனுபவித்து வரும் இந்தியமக்களின் போராட்டமோ, ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற கவர்ச்சிகர அரசியலால், ஆளும்வர்கத்தால் திட்டமிட்டு குறுக்கப்பட்டு, திசை திருப்பப்பட்டு வருகின்றது.  


விழித்துக்கொள்வோம்!

புரட்சி என்பது
மென்மையானதாக,கருணையானதாக,
கண்ணியமானதாக,கட்டுப்பட்டதாக,
பெருந்தன்மையானதாக
இருக்கமுடியாது....

புரட்சி ஒரு மக்கள் பேரெழுச்சி!
ஒரு வர்க்கம், மற்றொரு வர்க்கத்தை
தூக்கியெறியும் 
வன்முறை செயல்.....
                     - மாவோ

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive