முஸ்லிம்கள்தான் காரணம்!
முஸ்லிம்கள்தான் காரணம்!
" இந்தியாவில் நடந்த, நடந்துவரும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் முஸ்லிம்கள்தான் காரணம்.
எங்கு, எந்த குண்டு வெடிப்பு நடந்தாலும் முஸ்லிம்கள்தான் கைதாகிறார்கள்.
முஸ்லிம்கள் வெள்ளிகிழமை ஜூம்மா தொழுகையின்போது, அங்கு தீவிரவாதத்தைதான் போதிக்கிறார்கள். எனவே, அனைத்து பள்ளிவாசல்களையும் தடை செய்ய வேண்டும்.
காசியிலுள்ள பள்ளிவாசலை முதலில் மூட வேண்டும்.
அனைத்து முஸ்லிம்களையும் ஹிந்துக்களாக மதம் மாற்றவேண்டும். அப்பொழுதுதான் தீவிரவாதம் அழிந்துபோகும்.
முஸ்லிம் பெண்களை, ஹிந்து இளைஞர்கள் திருமணம் செய்துகொண்டு, அவர்களை ஹிந்துக்களாக மாற்றவேண்டும்".
இதையெல்லாம் யார் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அரசியல் காமெடியன் என்று அழைக்கப்படும் பார்ப்பன "ஜனதா கட்சித்" தலைவர் சுப்ரமணியன் சுவாமிதான். மும்பையிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் அனாலிசிஸ் (DNA) என்ற பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் அந்த அறிவுஜீவி(அப்போது மும்பையில் வெயிலின் அளவு 37 டிகிரி செல்சிஸ்).
ஆட்சியாளர்களின் சூழ்ச்சியால் நடைபெற்ற, பல்வேறு கலவரங்களையும் கடந்து சகோதர, சகோதரிகளாகவும், நண்பர்களாகவும் முஸ்லிம்களும், ஹிந்துக்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் சு.சுவாமி இவ்வாறு பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது!
எந்த குண்டு வெடிப்பு இந்தியாவில் நடந்தாலும் முதலில் போலீஸாரும், உளவுத்துறையும் கைது செய்வது முஸ்லிம்களைத்தான். பிறகு தீர(!?) விசாரித்தப் பிறகே உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றனர்(!?).
ராஷ்ட்ரிய சுயசேவா சங் (RSS) இந்தியாவில் எத்தனை குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பது சுப்ரமணியசுவாமிக்கு தெரியாதா என்ன? இந்தியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளையும் அதன் பின்னணியில் செயல்பட்டவர்களை பற்றியும், முழு விவரங்களை திரட்டி, விரைவில் உங்கள் பார்வைக்கு வைத்து சுப்ரமணியசுவாமி போன்ற, பார்பன ஆதிக்க கும்பலின் முகத்திரையை கிழிக்க ஆவலாகவுள்ளேன்!
- உமர் முக்தார்
377!
377!
தலைப்ப பாத்தாலே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், இது எத பத்தின கட்டுரைனு! 'ஆணும், பெண்ணும் இல்லாம, இயற்கைக்கு மாறா ஆணுடன் ஆணும், பெண்ணுடன் பெண்ணும் புணர்ச்சி மேற்கொண்டால், இந்த சட்டத்தின் மூலம் அவர்களைக் கைது செய்து தண்டிக்கலாம்' அப்டீங்குரதுதான் இந்த சட்டத்தோட சாராம்சம்.
ஆம்பளையையும், பொம்பளையும் இறைவன் படைச்சதே ரெண்டு பெரும் சேந்து சந்ததியை உருவாக்கத்தான். ஆனா சில (இப்ப பலரா பெருகிட்டாங்க) அரவேக்காடுங்க சொல்லவே நாக்கூசுற அளவுக்கு ஓரினச்சேர்கைல ஈடுபட்டுட்டு இருக்காங்க.
ஆம்பளையும் - ஆம்பளையும், பொம்பளையும் - பொம்பளையும், அரவாணியும் - அரவாணியும், அரவாணியும் - ஆம்பளையும் - பொம்பளையும் இப்டி பலவிதமானவங்க இருக்காங்க. அவங்கல்லாம் சேந்து லெஸ்பியன் - கே - பை செக்ஸுவல் - ட்ரான்ஸ்ஜென்டர் (LGBT) அப்டீங்கற அமைப்பையே தொடங்கி நடத்திகிட்டு வர்றாங்க.
அவங்களுக்கு ஆதரவா சில வருஷத்துக்கு முன்னால டெல்லி உயர் நீதிமன்றமே தீர்ப்புக் கூறியிருக்கு. நம்ம நாட்டுல நீதி சீரழிஞ்சு போய்கிட்டு இருக்குங்கிரதுக்கு இதுவும் ஒரு உதாரணம்! 377 சட்டத்த நீக்கணும்னு இந்த ஓரினச்சேர்கையாளர்கள் வருஷாவருஷம் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை வைக்கிறாங்க. ஆனா அரசாங்கம் பிடி கொடுக்காம இருக்கு. அந்த சட்டம் நீடிக்கிரதுதான் நல்லது. அப்பத்தான் இந்தமாரி ஜந்துக்கல்லாம் திருந்துங்க.
இப்டி அவங்க பண்றது நோயா? என்னனு தெரில. நண்பர்கல்கிட்டையும் சொல்லமுடியாது, பெற்றோரும் வீட்டவிட்டு தொரத்திவுடுறாங்க, இவ்ளோவையும் தாங்கிகிட்டு ஓரினச்சேர்கைல ஈடுபடனுமா?
இந்த ஓரினச்சேர்கை கலாச்சாரம் நேத்து இன்னக்கி தோன்றினது கிடையாது, கிட்டத்தட்ட 2000 வருஷத்துக்கு முன்னாடியே மத்ய கிழக்கு நாட்களான கல்ப் நாடுகள்ல தோன்றியது! அது வாழையடி வாழையா தொடர்ந்து வந்துட்டே இருக்கு!
என்ன பொருத்தவரைக்கும் இந்தமாரி ஓரினச்சேர்க்கையாளர்கள கண்டதும் சுட உத்தரவு போடணும்! அப்பத்தான் திருந்துங்க!
இன்னக்கி ஏன் நா இதபத்தி திடீர்னு எழுதுறேன்னு நீங்க நினைக்கலாம்? அதுக்கு எந்த காரணமுமில்ல, இன்னக்கி சண்டே வேற எந்த முக்கியமான செய்தியும் எனக்கு தெரிஞ்சு இல்ல, அதான் இத பத்திலாம் எழுதவேண்டியதா இருக்கு!
- உமர் முக்தார்
உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருவரும் மற்றவரிடம் பல பரிமாணங்களில் அன்பு செலுத்துகிறோம். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள், உறவுகள், காதலர்கள் என்று ஒவ்வொருவரிடமும் காட்டும் அன்பு, இயற்கையாக மனிதனிடம் அமைந்துள்ளது.இவர்களில் யாரிடம் அதிக அன்பு செலுத்தப்படுகிறது? என்பதெல்லாம் அளவிடக் கூடியதல்ல. அன்பு செலுத்தும்போது அதன் பரிமாணம், ஆளுக்கு ஆள் மாறுபடுவதை உணர முடியும்.
ஆனால் நட்புக்கு பரிமாணமும் இல்லை, அளவும் இல்லை. அது நண்பர்களிடம், தோழிகளிடம் மட்டுமே காட்டப்படக் கூடியது. உறவுகளிடம், நண்பனைப் போல்' பழகினேன் என்றுதான் கூறுவார்களே தவிர, நண்பனாக' பழகினேன் என்று யாரும் கூறமாட்டார்கள். இதயம் ஏற்றுக் கொண்ட நண்பர்களுக்கே/தோழிகளுக்கே உரித்தாக காட்டப்படும் எதிர்பார்ப்பற்ற விஷேச அன்புதான் நட்பு.
நட்பை அல்லது நண்பர்களை, தோழிகளை போற்றும் விதத்தில்தான் அதற்கென்று ஒரு நாளை அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டு, அது நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட சம்பவம் எதுவும் இல்லை என்றே வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
ஆனால் முதலாம் உலக யுத்தத்தின் மோசமான பாதிப்புகளே இந்த தினத்தை ஏற்படுத்தும் காரணமாக அமைந்தன என்று நம்பப்படுகிறது.
மனிதர்களுக்கு இடையேயுள்ள மனக்கசப்புகள் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையே இருக்கும் கசப்புணர்ச்சிகள் மாறி, நட்பு உணர்வை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிதான் நண்பர்கள் தினம். இதற்கான முடிவு 1935 ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்டது.
நண்பர்களை, தோழிகளை கவுரவப்படுத்தவும், மேலும் பலருடன் நட்புணர்வு கொள்ளவும் ஒரு நாளை அதற்கென்று அர்ப்பணிக்க வேண்டும் என்று அதில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினம் அல்லது நட்பு தினமாகக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தனர். தேசிய அளவில் கொண்டாடப்பட்ட இந்த தினம், இன்று சர்வதேச அளவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
பெற்றோர் சகோதரர் போன்ற உறவுகள், அவரவர் விருப்பத்தில் உருவானதல்ல. ஆனால் நட்பு என்பது அவரவரே முடிவு செய்யும் ஒன்று. .
எல்லாருமே நண்பர்கள், தோழிகள் அல்ல, எல்லாரும் காட்டுவதும் நட்பு அல்ல' என்ற கருத்தை உலகத்தில் நடக்கும் பல சம்பவங்கள் உறுதி செய்து வருகின்றன...
விரைவில் கைது!
விரைவில் கைது!
கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியின் நிழலாக வளம் வந்தவர் முன்னாள் தமிழக உளவுத்துறை கூடுதல் இயக்குனர் திரு.ஜாபர் சேட்.
1996 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கலைஞர் ஒரு ஊரில் பிரச்சாரத்திற்கு போனபோது, அங்கு கலைஞரை கொலை செய்வதற்கு கத்தியைத் தூக்கிக்கொண்டு ஒருவன் ஓடி வந்தான். உடனே அவனை தடுத்து கலைஞரைக் காப்பாற்றினார் அப்போது அம்மாவட்ட கண்காணிப்பளராக இருந்த ஜாபர் சேட். பிறகு அத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த கருணாநிதியிடம் யாரை தங்கள் பாதுகாப்பு கண்காணிப்பளராக நியமிக்கலாமென அதிகாரிகள் கேட்டதற்கு, தன்னை காப்பாற்றிய சம்பவத்தைச் சொல்லி, அந்த நபரை கண்காணிப்பளராக நியமியுங்கள் என கருணாநிதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்தே ஜாபர் கருணாநிதியுடன் நெருக்கமானார்!
1996 - 2001 ஐந்தாண்டுகள் ஆட்டம்போட்டுவிட்டு, பிறகு 2001 - 2006 ஐந்தாண்டுகள் அ.தி.மு.க. ஆட்ச்சியில் அடக்கிவாசித்தார். பிறகு 2006 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சியமைத்ததும் அசுர வளர்ச்சி கண்டார். அப்பொழுதுதான், அதிகாரம் கண்ணை மறைக்க, தவறுகள் செய்யத்தொடங்கினார். தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், விருப்ப வீடு வழங்கும் திட்டத்தில் கோல்மால் செய்து ஒரே வீட்டு மனையை மூன்று முறை பெயர் மாற்றி வாங்கியுள்ளார்.
தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பெற்ற நிலத்தை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாதென்ற விதியையும் மீறி, லேன்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து பண்ணிரண்டு அடுக்குகளைக் கொண்ட குடியிருப்பைக் கட்டிவருகிறார்.
அதெல்லாம் தற்போது ஆட்சிமாரியபின் தோண்டியெடுக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் கடந்த வாரம் அவரின் இல்லங்களிலும், அவரின் தொடர்புடையவர்களின் இல்லங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஜாபரின் அண்ணா நகர் இல்லத்தில் கடந்த ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல்கள் அடங்கிய சி.டி.க்களைக் கைப்பற்றியுள்ளனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.
தற்போது முதற்கட்டமாக தன்னுடைய ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாம் சிறப்புக் கூடுதல் இயக்குனர் பதவியிலிருந்து பணி இடை நீக்கம் (suspend) செய்யப்பட்டுள்ளார்!
அடுத்த கட்ட நடவடிக்கையாக, இன்னும் குறைந்தது ஒரு மாதத்திற்குள் ஜாபர் சேட் கைது செய்யப்படுவது நிச்சயம்!
இந்தக் கைது தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய முறைகேடுத் தொடர்புடையது. இதற்கு அடுத்தபடியாக, ஜாபர் அடிக்கடி வெளிநாடு சென்றுவந்துள்ளார், அது
2 ஜி மூலம் கிடைத்த பணங்களை வெளிநாடுகளில் பதுக்கிவைக்க அதிகாரிஎன்ற போர்வையில் சென்றுவந்துள்ளாரா? அனுமதி பெற்று சென்றுவந்துள்ளாரா? என்பது குறித்தும் அவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்து வருகின்றனர்! இதன் மூலம் சி.பி.ஐ.யின் பார்வை இவர்மீது விழுந்துள்ளது. தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய வழக்கு முடிந்தவுடன் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. ஜாபரை கைது செய்ய நிறையவே வாய்ப்புள்ளது!
ஆக, இப்போதைக்கு அவர் நிம்மதியாக உறங்க வாய்ப்பேயில்லை!
- உமர் முக்தார்
(reporteromar@gmail.com)
விதைகளை விற்றுவிட்ட பாவிகள்
Microsoft ன் வியாபார வியூகம் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது கணினியின் இயக்கு மென்பொருளான windows operating system, Microsoft ன் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதே நேரம் இந்த os ல் இயங்கும் அனைத்து மென்பொருள்களும் Microsoft ன் தயாரிப்பாகவோ அல்லது Microsoft னால் அங்கிகரிக்கப்பட்டதாவோதான் இருக்கும். i pod, i phone உள்ளிட்ட apple ன் தயாரிப்புகளும் இதே சாரம்சத்தை கொண்டதாகவே இருப்பதை காணலாம். இதே யுத்தியைதான் விவசாயத்துறையிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளது பல வெளிநாட்டு நிறுவனங்கள்.



விவசாயப் பின்னனியில் வளந்தவர்களுக்கு நன்றாக தெரியும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியத்தில் ஒருபகுதியை அடுத்த போகத்திற்கு விதைப்பதற்காக தனியாக எடுத்துவைப்பது வழக்கம். இந்த விதைகளின் மூலமே பாரம்பரிய தானியங்கள் விளைவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய வெளிநாட்டு நிறுவனங்களின் அமோக விளைச்சல் என்ற விளம்பரங்களினாலும் அந்நிறுவனங்களை ஊக்குவித்த மத்திய, மாநில அரசுகளினாலும் இன்று இந்திய விவசாயிகள் விதைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிறுவனங்கள் விற்க்கும் விதைகளுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் உரங்களையும் கட்டாயம் பயன்படுத்தவேன்டும். அதுமட்டும் அல்லாமல் காலம் காலமாக நாம் பின்பற்றி வந்த விவசாய முறையும் முற்றிலும் மாற்றப்டுகிறது. இந்த விதைகளின் மூலம் விளைவிக்கப்படும் தானியத்தை மீன்டும் விதையாக பயன்படத்துவது இயலாத காரியம். மேலும் இந்த விதைகளையும் உரங்களையும் பயன்படுத்துவதினால் சில ஆண்டுகளில் அந்த நிலம் விஷத்தன்மையுடையதாக மாற்றப்படுகிறது.
விளைவுகள் அனைத்தும் தெரிந்திருந்தபோதிலும் அரசு இதை தொடர்ந்து ஆதரித்துவருகிறது.
ஆனந்த்குமார்
வங்கி ஊழியர் போராட்டம்!
நாளை இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். "வங்கிகளை தனியார் மயமாக்காதே!" என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.
இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். தேசியவங்கிகள் அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட, மத்திய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதாக கூறினார் அவர். இந்த திட்டத்தை நிறைவேற்றவே, வங்கி துறையில் காலியாக உள்ள நான்கரை லட்சம் காலி பணியிடங்களை, கடந்த பதிமூன்று வருடங்களாக நிரப்பாமல், மத்திய அரசு அடம்பிடித்து வருவதாகவும் கூறினார் அவர். நாட்டில் தினந்தோறும் லட்சக்கணக்கான பேர் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிந்துவிட்டு, வேலைக்கான செய்திவரும் என்று காத்திருக்கும்போது, வங்கித்துறையில் உள்ள, இவ்வளவு காலிபணி இடங்களை அரசு நிரப்பாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, உண்மையில் தேசிய வங்கிகள் லாபத்தில் செயல்படுகிறதா என்று அவரிடம் கேட்டோம். அதற்க்கு அவர், தேசிய வங்கிகளில், லாபம் என்பதையும் தாண்டி, நம் பணம், நம்மிடம்பத்திரமாகவும் உள்ளதாக கூறினார்.
அமெரிக்காவில் அடிக்கடி வங்கிகள் திவால் ஆகும் செய்தியுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அவர் சொன்ன "பத்திரம்" என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் புரிந்தது.
வங்கி ஊழியர்களின் உண்மையான கோரிக்கை வெற்றியடைய வாழ்த்துவதுடன், தனியார்மயத்துக்கு எதிரான எங்கள் கருத்தையும் பதிவு செய்கிறோம்!



