4 மாதம், 3 வாரம், 2 நாட்கள்



ரொமானியா நாட்டை சேர்ந்த இப்படத்தை "கிறிஸ்டியன் முன்கயு" என்பவர் இயக்கியுள்ளார். சோவியத் யூனியன் உடையும் தருவாயில், அதாவது 1987 ஆம் ஆண்டு இக்கதை நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. சோவியத்தின் கலாச்சரம், ஏறக்குறைய முடிவுக்கு வந்த சூழ்நிலையில், முந்தைய சமூக ஒழுக்கங்களின் மிச்ச சொச்சமும், புதிய சமூக சூழலின் வருகைக்கான எத்தநிப்பும், மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தி இருந்த தாக்கத்தின் ஊடாக கதை நகர்கின்றது. 


ஒடிலியா-வும், கபிடா-வும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள். இருவரும் ஒரே அறையில் தங்கி படித்துவருகின்றனர். கபிடா, எதிர்பாராத விதமாக கர்ப்பமடைய, தன் சிநேகிதியின் சிசுவை கலைப்பதற்கு ஒடிலியா எவ்வாறு உதவி செய்கிறாள் என்பதே கதை(ஒன்-லைன்). சோவியத் மக்களின் சமூக ஒழுக்கங்களில் ஒன்றான, கருகலைப்பு தடை சட்டம் அமுலில் இருந்த நாட்களில், பிடிபட்டால் கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொண்டு, ஓடிலியா , கபிடாவுக்கு உதவுகிறாள். 


கபிடாவும், ஒடிலியாவும் ஒரு ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுக்கின்றனர். கபிடாவை அதில் தங்கவைத்துவிட்டு கருகலைப்பவனை(சட்டவிரோதமாக), ஏற்க்கனவே தொலைபேசியில் பேசியபடி, குறிப்பிட்ட இடத்திற்க்கு சென்று அழைத்துவருகிறாள் ஒடிலியா. அவன் கபிடாவை சோதனை செய்துவிட்டு, தொலைபேசியில் கபிடா கூறியதைவிட அதிகநாட்கள் கரு வளர்ந்துவிட்டதாக கூறுகிறான். இச்சூழ்நிலையில் கருகலைப்பு செய்ய கூடுதல் பணம் வேண்டும் என்கிறான் அவன். கபிடா, ஒடிலியாவிடம் ஹோட்டலுக்கு கொடுத்தது போக அவனிடம் ஏற்க்கனவே பேசிய தொகையை தாண்டி வேறு பணம் இல்லை அவர்களிடம். இனியும் கருவை வளரவிட்டால் அதை எப்போதும் கலைக்க முடியாது என்கின்ற நிலையில் கபிடா. அவளின் நிலை கண்டு எப்படியும் உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒடிலியா. இதைக்கண்டு கொண்ட அவன், கூடுதல் பணத்திற்க்கு பதிலாக ஒடிலியாவை தன்னுடன் பாலியல் உறவுக்கு அழைக்கிறான். வேறு வழி இன்றி அதற்க்கு சம்மதிக்கிறாள் ஒடிலியா.


அழிந்து வரும் சோவியத் சமூகத்தின் இறுதிகட்டத்தில் நிகழும் கலாசார மாற்றத்தால், ஒழுங்கிற்கும், ஒழுங்கின்மைக்கும் இடையில் நிகழும் போட்டியின் மத்தியில் மக்களின் வாழக்கைநிலையை கபிடா, ஒடிலியா வாழ்க்கையில் நிகழும் சில சம்பவங்களின் மூலம் அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார் இயக்குனர். 

அசீப்

ஐயா, அம்மாவிடம் மாறி மாறி சிக்கித் தவிக்கும் தமிழகம்


கருணாநிதி முதல்வர் பதவியை இழந்தும், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றும் இரண்டு மாத காலமாகிவிட்டது. ஜெயலலிதாவின் அணுகுமுறையிலும், பணியாற்றும் விதத்திலும் ஓரளவு மாற்றம் இருந்தாலும், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்வதிலும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதிலும் அவரது வழக்கமான பாணி தொடர்கிறது.
முந்தைய திமுக அரசு செயல்படுத்திய இலவச அரிசி, கான்கிரீட் வீடு, காப்பீட்டு போன்ற திட்டங்களை பெயர் மாற்றி செயல்படுத்த முனைந்துள்ள போதிலும், தமிழகத்தின் நீண்டகால கனவுத் திட்டமான சமச்சீர் கல்விமுறையை நிறுத்தி வைத்ததன் அனைத்து தரப்பினரின் எதிர்ப்புகளையும் ஜெயலலிதா சம்பாதித்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகளும் பெற்றோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் 600 கோடி ரூபாய்க்கும் மேலான மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் பூட்டிவைத்துள்ளதன் மூலம் ஜெயலலிதா இன்னும் மாறவில்லை எனத் தெரிகிறது. தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்கு அதிமுகவின் கூட்டணிக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக கட்சிகள் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் அதை நிறுத்தி வைக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்தார். தற்போது நீதிமன்ற உத்தரவால் சமச்சீர் கல்வியை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
 திமுக கொண்டுவந்தது, கட்டியது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தியும், தலைமைச் செயலகத்துக்கு பூட்டுப்போட்டுவிட்டார்கள் என்று ஜெயலலிதா மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த பணிகளை இன்னமும் தொடங்காததால் தேர்தல் சமயத்தில் முடங்கிப்போன அரசு இயந்திரம் இன்னமும் செயல்பட ஆரம்பிக்கவில்ல.

­கடந்த காலத்தைப் போல சாலையில் செல்லும்போது நீண்டநேரம் போக்குவரத்தை நிறுத்தி வைக்காமல் மக்களுக்கு இடையூறு இன்றி நடந்து கொள்வது சற்று ஆறுதல் அளிக்கிறது. அதேபோல் பத்திரிகைகளை புறக்கணிக்கும் நிலையை கைவிட்டு வாராவாரம் பிரஸ் மீட் தருவதாக சொல்லி இருப்பது செய்தியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
 தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகள் சிலவற்றை ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் தடாலடியாக நிறைவேற்றி மக்களின் பாராட்டை பெற்றுள்ளார் ஜெயலலிதா. எளிமையாக இருந்து அமைச்சர்களையும் எளிமையாக மாற்றியது, அரசு விழாக்களை ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்துவது போன்ற நடவடிக்கைகள் ஜெயலலிதா தமிழகத்துக்கு நல்லாட்சி தருவார் என்ற நம்பி்க்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆட்சி வரும்போதெல்லாம் திமுகவின் தி்ட்டங்களை ரத்து செய்வதும்,திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அதிமுகவின் திட்டங்களை ரத்து செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்தப் போக்கு கட்டாயம் மாற்றப்பட வேண்டும். ஒரு அரசு செயல்படுத்தும் நலத்திட்டம் அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைவதற்கு 5 ஆண்டுகாலத்துக்கு மேல் ஆகிவிடுகிறது. இந்நிலையில் அத்திட்டத்தை அடுத்து வரும் அரசு ரத்து செய்துவிட்டால் அது எப்படி பயனாளிகளை சென்றடையும்? செயல்படுத்தும் ஒரு சில திட்டங்களையும் இப்படி ரத்து செய்துகொண்டே சென்றால் அவை மக்களுக்கு நன்மை பயக்காது. ஆட்சியாளர்களுக்கே பயனளிக்கும். எனவே, ஆட்சிமாறும்போது எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டங்களை ரத்து செய்யும் இந்த கீழ்த்தரமான கலாச்சாரத்தை திராவிடக் கட்சிகள் கைவிட்டால் மக்களும் செழிப்பார்கள். தமிழகமும் செழிக்கும்.

அம்மாவுக்கு ஆப்பு!

அம்மாவுக்கு ஆப்பு!

கடந்த தி.மு.க. அரசு, ஏழை, பணக்காரர் என்கிற வித்தியாசம் இல்லாமல் சமமான, சீரான கல்வியை அணைத்து மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற (உன்னத!?) நோக்கில் கொண்டுவந்ததே சமச்சீர் கல்வி பாடத்திட்டம். 

சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது பற்றி ஆராய கடந்த தி.மு.க. அரசு கல்வியாளர் பாலமுருகன் தலைமையில் நிபுணர் குழுவை அமைத்தது. அக்குழுவின் அறிக்கைப்படி ஒன்று மற்றும் ஆறு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வியை அமல்படுத்தியது. மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 9 & 10 ஆகிய வகுப்புகளுக்கு 2010-2011 கல்வியாண்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றும் தி.மு.க. அரசு கூறியது.

அதற்குள் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. அரசு அமைந்ததும், சமச்சீர் கல்வியை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நிறுத்தியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டு, சமச்சீர் கல்வியை இந்தாண்டே அமல்படுத்த வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம் ஒன்று மற்றும் ஆறு ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் இந்தாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்றும், மீதமுள்ள வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி தேவையா என்பதைப்பற்றி ஆராய நிபுணர் குழுவை அமைக்க வேண்டுமென்றும் கூறி அந்த குழுவின் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கால் செய்ய வேண்டுமென்றும் அதன் பிறகு வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்.அக்குழுவில் கல்வியாளர்களே இடம்பெறவில்லை, கல்விக் கொள்ளையர்கள்தான் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றும் ஒரு சர்ச்சை கிளம்பியது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வெறும் நான்கு அல்லது ஐந்து ஆலோசனைக்கூட்டம் மட்டுமே கூட்டிப் பேசிவிட்டு, 700 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை கடந்த 5 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு. அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்று, இறுதியாக தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (18/07/2011) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை இந்தக் கல்வியாண்டே அனைத்து வகுப்புகளுக்கும் முழுவதுமாக அமல்படுத்தவேண்டும் என்றும் வரும் 22 ஆம் தேதிக்குள் பாட புத்தகத்தை முழுவதுமாக பள்ளிகளுக்கு வழங்கவேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுதான் சென்னை உயர் நீதிமன்றத்திற்கே வழக்கு வந்தது. எனவே மேல் முறையீடு செய்தாலும் தமிழக அரசுக்கு எதிராகவே தீர்புக்கிடைக்கும் என நம்பப்படுகிறது.

எவ்வாறு உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கும் 2 ஜி ஊழல் வழக்கில் ஜாமீன் வேண்டி உச்ச நீதிமன்றத்திலேயே மனு செய்து, அதை நீதிமன்றமும் நிராகரித்து எப்படி தி.மு.க.வினர் அவமானப்பட்டார்களோ? அதே மாதிரியான அவமானத்தைதான் அ.தி.மு.க. அரசும் படப்போகிறது என்பது நிஜம்!

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை பொது மக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடியிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் 'இத்தீர்ப்பு அரசுக்குக் கிடைத்த தோல்வியென்று நினைக்காமல், தீர்ப்பை மதித்து இந்தாண்டே அமல் படுத்த வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

எது எப்படியோ, ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு அம்மாவுக்கு வைக்கப்பட்ட முதல் ஆப்பு என்பது மட்டும் உண்மை!

- உமர் முக்தார்.

உறைந்து கிடக்கிறதா காமம் ?

உறைந்து கிடக்கிறதா காமம் ?
 
 
 
 


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தோழர் ராஜ்மோகன் இந்த விஷயத்தை பற்றிச் சொன்னபோது நான் நம்பவில்லை ... இப்போது அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை ...ஆனால் தொடர்ச்சியாக நான் பார்த்த இந்த இரண்டு நிகழ்வுகளும் அது குறித்த விவாதத்தை என்னுள் ஏற்படுத்திவிட்டது ...


காமம் குறித்து பேசுவதும் ,எழுதுவதும் ,வாசகனை எப்போதும், ஈர்க்கும் என்று ,தெரிந்தே எழுதும் , எத்தனையோ எழுத்தாளர்கள் , இது குறித்தும் நிறைய எழுதி இருப்பார்கள் எனக்கு வேறு நிறைய வேலைகள் இருந்ததால் அதை நான் படிக்க மறந்திருக்கலாம் ..

நான் படிக்க மறந்ததை அன்று பார்க்க நேரிட்டது ...

நிகழ்வு ஒன்று :

கடந்த ஆண்டில் ,மழைக்காலம் ஒன்றின், மழை பெய்யாத நாளில் , இரவு எப்படியும் பன்னிரண்டு மணிக்கு மேல் இருக்கும் .. நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு , நிகழ்ச்சி அமைப்பாளரை திட்டிக்கொண்டே நான் வடபழனி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன் ..


எந்த பேருந்துகளும் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் , ஆட்டோவில் போகலாம் என்று முடிவு செய்து , பேரம் பேசுவதற்கு முன்னால் , பக்கத்தில் இருந்த டீ கடைக்கு போய் டீ சொல்லிவிட்டு , நின்று கொண்டிருந்தேன் ..
அப்போது தான் அந்த அதிர்ச்சியான காட்சியைப் பார்க்க நேரிட்டது ..

ஒரு தொழுநோயாளி ( எப்படியும் வயது நாற்பதுக்கும் மேல் இருக்கும் ) அருகில் படுத்திருந்த ஒரு நாயை புணர்ந்து கொண்டிருந்தார் ... என்னால் அதை நம்பவும் முடியவில்லை ... நம்பாமல் இருக்கவும் முடியவில்லை
இப்படி ஒரு காட்சியை தான் ஏற்கனவே பார்த்ததாக தோழர் ராஜ்மோகன் என்னிடம் சொல்லி இருப்பதால் அதை நம்பியாகவும் வேண்டி இருந்தது ..
 
 அருகில் செல்லாமல் டீ குடித்து கொண்டே, அந்த காட்சியை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தேன் ... எனக்கு ஆச்சர்யமான விஷயம் எப்படி அந்த நாய் அவருக்கு ஒத்துழைத்துக் கொண்டிருந்தது என்பது தான் .


சிறிது நேரம் கழித்து நான் அவரை கவனிப்பதைப் பார்த்துவிட்ட அந்த மனிதர் , நாயை விட்டு தள்ளிச் சென்று , அங்கு அவருக்காக , ஏற்கனவே அவர் விரித்து வைத்திருந்தப் பிளாஸ்டிக் பையில் படுத்து கொண்டார் ... சுவாரசியமான விஷயம் சிறிது நேரம் கழித்து அந்த நாயும் அவர் பக்கத்திலேயே போய் படுத்துகொண்டது ..
 
நுங்கம்பாக்கம் வர நூற்றி இருபது ரூபாய் பேசி ஆட்டோவில் ஏறி விட்டேன் ...அவ்வளவு தான் ..... மீண்டும் வடபழனிக்கு போகும்போதெல்லாம் அந்த மனிதரையும் அந்த நாயையும் தேடுவது எனக்கு பழக்கமாகி போனது ....

அந்த சம்பவம் அதற்கு பிறகு எனக்கு மறந்து போனது ...அதை வேறு ஒரு கோணத்தில் இன்னொரு சம்பவம் எனக்கு நினைவூட்டியது ....



நிகழ்வு இரண்டு :

சென்னை மெரினா கடற்கரை ...
அதே மாதிரி ஒரு இரவு , ஆனால் இது பனிக்காலம் ...
மெரீனாவில் இரவு பத்து மணிக்கு மேல் , பாலியல் விஷயங்கள் நடப்பது எனக்கு ஒன்றும் புதிய செய்தி இல்லை என்றாலும் கூட , அன்று நடந்த விஷயம் கொஞ்சம் வித்தியாசமானது ....

கலங்கரை விளக்கத்திற்கு , கொஞ்சம் முன்பாக , நான் வேறு ஒரு புலனாய்வு செய்தி சேகரிப்புக்காக ( அந்த புலனாய்வு செய்தியை இன்னொரு நாள் சொல்கிறேன் ) , அங்கு உட்கார்ந்திருந்தபோது ,இந்த விஷயம் நடந்ததது ..

ஒரு கல்லூரி மாணவனை போல் இருந்த ஒரு இளைஞன் , என்னிடமிருந்து நூறு மீட்டர் தள்ளி நின்று சத்தமாக போன் பேசிக்கொண்டே , கடற்கரையை சுற்றி கொண்டிருந்தான் ... இது ஒரு பத்து நிமிடத்திற்கு நீடித்தது .. சிறிது நேரம் கழித்து அங்கு , பச்சை புடவை கட்டி , கொஞ்சம் மல்லிகை பூ வைத்திருந்த ( உண்மையாகவே மல்லிகை .. கொஞ்சம் வாடி இருந்தது ) ஒரு சுமாரான பெண் அங்கு வந்தாள் ( எனக்கு சுமாராக தெரிந்தாள் ) .

அந்த பையனும் , இந்த பெண்ணும் கண்களால் ஏதோ பேசி கொண்டார்கள் . எனக்கு விஷயம் புரிந்த அளவிற்கு , அந்த சைகைகள் புரியவில்லை ( வருத்தம் தான் ) .அப்புறம் தான் கவனித்தேன் ... எனக்கு பின்னால் இதை இன்னொரு நபரும் கவனித்து கொண்டிருந்தார் ..


அவர் ஊனமுற்றோர் பயன்படுத்தும் கருவியுடன் அமர்ந்திருந்தார், ( அவர் கால்கள் சரி இல்லை வயது எப்படியும் முப்பத்தி ஐந்து இருக்கும் ) பக்கத்தில் ஒரு பையும் , கையில் கடலை பாக்கெட்டும் இருந்ததது .. எப்படி கடற்கரைக்கு வந்தார் ...துணைக்கு யார் வந்தார்கள் என்றும் தெரியவில்லை ... நாங்கள் இருவரும் அந்த பையனையும் , அந்த பச்சைப் புடவை பெண்ணையும் பார்த்து கொண்டிருந்தோம் ...


சிறிது நேரம் கழித்து இருவரும் தனி தனியாக நடக்க ஆரம்பித்தார்கள் ( கடலை நோக்கி ) .. கொஞ்சம் கொஞ்சமாய் இருவரும் பக்கம் பக்கமாய் வந்து , ஒரு கட்டத்தில் இருவரும் ஜோடி சேர்ந்தே நடக்க ஆரம்பித்தார்கள்..
 
அவர்கள் பின்னல் போகலாம் என்று எனக்கு இருந்த ஐடியா வை நான் மாற்றி கொண்டேன் .. ஏனெனில் நான் வந்த வேலையும் கெட்டு போய்விடும் என்பதாலும் , அந்த ஊனமுற்ற மனிதரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்ததாலும் (அது தான் உண்மை ) ..

பதினைந்து நிமிடங்கள் கழித்து ,


என் கணிப்பை பொய்யாக்கி விட்டு , அந்த மனிதர் தன் ஊன்றுகோல் உதவியுடன் அவர்கள் சென்ற திசையை நோக்கிச் சென்றார் ..எழுந்து போகும்போது நான் அவரை பார்க்கிறேனா என்பதை கவனித்து கொண்டே நடந்து சென்றார் . யோசித்து பாருங்கள் அவ்வளவு மணல் அடர்த்தியில் . ஊன்றுகோலுடன் அவர் நடந்து சென்றதை ..அது எனக்கு இப்போதும் ஆச்சர்யமான விடயம் தான் ...



இவர் நடுவில் மூச்சு வாங்கி . சற்று நின்று மீண்டும் நடக்க தொடங்கினார் ...
அதற்குள் அந்த இளைஞன் மட்டும் இவரைத் தாண்டிச் சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தான்.( அவர்கள் இருவரும் போய் அப்போதுவரை முப்பது நிமிடம் ஆகி இருந்ததது ..)

அந்த பெண்ணைக் காணவில்லை .. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதை என்னால் பார்க்க முடிந்ததது ...அவ்வளவு தான்.. அந்த இளைஞன் தன் பைக்கில் ஏறி , கிளம்பிவிட்டான் ,, கிளம்பும்போது அவரையும் என்னையும் தனித்தனியாக பார்த்துக்கொண்டே போனான் .. ( என்ன நினைத்தான் என்று தெரியவில்லை )
இந்த மனிதரும் தன் ஊன்றுகோலை வைத்து போய்க்கொண்டே இருந்தார் .. அந்த பெண்ணும் எதிரே வந்தார்.. இவர் ஏதோ அந்த பெண்ணிடம் பேச , இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். அவ்வளவு தான் .என் கண்களிடமிருது மறைந்து போயினர் .. ( ச்ச .. என்ன வாழ்க்கை இது )

ஒரு நிமிடம் கழித்து . அந்த பெண் பதற்றமாக திரும்பி வந்தார் .நான் என்ன என்னவோ நினைத்தேன் ... அந்த பெண் என்னை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே ( உண்மையிலேயே அப்படித்தான் பார்த்தார் ) என்னை கடந்து சென்று மறைந்து விட்டார்..அவர் ஆட்டோவில் போய் இருக்கலாம் என்பது என் கணிப்பு .. ஆனால் அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை ..


பத்து நிமிடம் கழித்து அவரும் கஷ்டப்பட்டு ஊன்றி வந்தார் ...
என்னை பார்த்துக்கொண்டே தான் வந்தார் ..என்னை கடந்து செல்லும் போது , என்னிடம் சொல்வது போல் மெதுவாய் பேசிக்கொண்டே போனார்
.. " நானும் தானே காசு குடுக்குறேன் னு சொல்றேன்...அவளுக்கு அப்படி என்ன கிராக்கி , என்னை பார்த்து ஓடிப் போய்ட்டா " ..

எனக்கு புரிந்தது. இவர் ஊனத்தை எண்ணி ஒதுக்கி விட்டு அவள் போய் இருக்கலாம் என்று ..



இப்போது தான் எனக்கு அந்த தொழுநோயாளி நிகழ்வு ஞாபகம் வந்தது ..


இரண்டு நிகழ்வுகளுக்கும் பொருத்தமான நிறைய விஷயங்கள் உள்ளது ..


காமம் என்பது , சிந்திப்பதையும் , கற்பனையும் தாண்டி , செயல்படுத்துவது என்ற நிலையை எட்டும் போது நிறைய பிரச்சனைகள் நமக்கு வருகிறது .. அதை சரிப்படுத்தவோ , வழிகாட்டவோ , நிறைய நிபுணர்கள் இங்கே உள்ளனர் ..( நாராயண ரெட்டி , காமராஜ் , ஷாலினி ,வகையறாக்கள் )..தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு போன் செய்து சந்தேகம் கேட்கிற அளவிற்கு பாலியல் குறித்த புரிதல் வளர்ந்திருக்கிறது ...
ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமாகி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் எனக்கு தெரியவில்லை ..




நாம் சாலையில் அன்றாடம் பார்க்கிற தொழுநோயாளிகள் , பிச்சைகாரர்கள், சுயநினைவோடு ஆனால் தெளிவின்றி திரிபவர்கள் , என இன்னும் பட்டியல் நீளும் இவர்களது பாலியல் தேவைகள் எப்படி பூர்த்தியாகின்றன ?
நாயோடு உறவு கொண்ட அந்த மனிதரின் பாலியல் தூண்டலை எதனால் சரிப்படுதவோ , ஈடுகட்டவோ முடியும் ?
நிச்சயமாய் அவர் அதை விரும்பி செய்திருக்க வாய்ப்பு உண்டா என்றால் தெரியவில்லை ..

ஆனால் அந்த மனிதர்களின் பாலியல் தேவைகள் சமூகத்தை எதிர்நோக்கியதாக இல்லை .. யாரும் தொடவே அஞ்சும் அவருக்கு அந்த எதிர்பார்ப்பும் இருக்கிற வாய்ப்பும் குறைவு ..
அவரோடு பழகி , அவரோடு உண்டு , அவரோடு திரிகிற , அந்த நாயிடம் தான் அவரும் தன் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது ..



இரண்டாவது நிகழ்வு இன்னும் மோசம் ,,,

திருமணம் ஆகாத உடல் ஊனமுற்ற ஒரு ஆண் /பெண்ணின் பாலியல் கற்பனைகளுக்கு , இந்த சமூகம் என்ன வடிகால்களை ஏற்படுத்தி இருக்கிறது ?

நிச்சயமாய் நான் கடற்கரையில் சந்தித்த அந்த மனிதர், உடல் தேவைக்காக தான் நிச்சயம் இங்கு வந்திருப்பார் ..ஏன் எனில் கடற்கரைக்கு அந்த நேரத்தில் தனியாக, அவ்வளவு சிரமப்பட்டு , காத்திருக்க , வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை ...

இது தவறான கணிப்பாக கூட இருக்கலாம் ..

ஆனால் அந்த பெண்ணால் அவர் புறக்கணிக்கப்பட்டது அவரை விட எனக்கு அதிகம் வலியை ஏற்படுத்தியது ..
இதுவும் ஆணாதிக்க சிந்தனையா என்று தெரியவில்லை


ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு,

தற்போது இங்கு கிடைக்கிற சுதந்திரம் ! ( கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடும்போது ) இந்த வகை மனிதர்களுக்கு கிடைக்காமல் போய் இருப்பது ஜீரணிக்க முடியாத கவலை ..

ஒரு வேளை, ஒரு ஊனமுற்ற மனிதர் ஒரு பால் ஈர்ப்பு கொண்டவராகவும் இருந்தால் அவர் நிலைமை இன்னும் மோசம் ....

அதே போல பெண்களை பொருத்தமட்டில் மேற்கண்ட எல்லா தரப்பிலும் அவர்கள் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது ..அது பற்றிய சிந்தனையை பேசினாலே நம்மை பண்பாட்டு விரோதி ஆக்கிவிடுவார்கள் ...

இதை பற்றி யாரவது பேசினால் , மேற்கண்ட அனைவருக்கும் வாழ்வாதார பிரச்சனைகளே தீர்க்க முடியாததாக இருப்பதை சுட்டி காட்டி இதை உதறிவிடுவார்கள் ..
 
 மத்திய அமைச்சர் ஒருவரே ஓரின சேர்கையை  நோய் என்று சொல்லும் அளவிற்கு முதிர்ச்சி இல்லாமல் இருக்கும் இந்த நாட்டில் ,இந்த வகை மனிதர்களின் உணர்வுகளை பற்றி பேசுவது  நமக்கு கேலியாக கூட இருக்கலாம் ...

உண்மையில் உணவு ,உறக்கம், உறைவிடம் ,இவை மூன்றும் நல்ல வாழ்க்கைகான அடிப்படையை போலவே , பாலியல் தேவை தொடர்பான் வசதிகளும் அவசியமாகிறது ..

சராசரி மனிதர்களுக்கே மூன்றாவது தளம் (Space ) தேவைப் படும்போது இப்படி பட்ட மனிதர்களுக்கு அது கட்டாய அவசியமாகிறது என்பதை நாம் நினைவில் வைத்துகொள்ள மறந்து போகிறோம் .. நாம் நம் , பிள்ளைகளோ ,நண்பர்களோ , உறவினர்களோ, இப்படி இருந்தால் கூட நாம் அது குறித்து சிந்திப்பதில்லை ..


" சரியாய் பூர்த்தி செய்யபடாத பாலியல் தேவைகளும் ,
நிரம்பி வழிகிற பாலியல் ஆசைகளும் " தான் இந்த் சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன என நினைக்கிறேன் .


வடிகால்கள் என்பவை எல்லா காலங்களிலும் , எல்லா மனிதர்களுக்கும் உரியது .., வடிகால்களை உருவாக்காமல் இருப்பதும் , இருப்பவற்றை பயன்படுத்தாமல் இருப்பதும் , சிலரை பயன்படுத்தாமல் இருக்க விடுவதும் , ஆரோக்கியமான சமூகத்துக்கான அறிகுறி இல்லை ..

இந்த் கட்டுரையை ஒரு பெண்ணின் , ( ஊனமுற்ற பெண்ணின் / ஒரு பால் ஈர்ப்பு கொண்ட பெண்ணின் ) பார்வையில் எழுத , இந்த சமூகம் எனக்குள் இட்டு நிரப்பி இருக்கிற , தடைகளை உடைத்து எறியவே , இந்த கட்டுரையை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்..


. நான் இங்கு எந்த தீர்வையும் முன் வைக்கவில்லை ..காரணம் அது எனக்கு தெரியவில்லை ..ஆனால் தீர்வு ஒன்று வேண்டும் என்று மட்டும் எனக்கு தெரியும் ...


எல்லோருக்குள்ளும் இங்கு காமம் உறைந்துகிடக்கிறது .. எல்லோருக்கும் சரிசமமாக ,
அதை தட்டி எழுப்பக்கூடிய தூண்டல்களை , ஒவ்வொரு தலைமுறையிலும் ,அதிகமாகவே உருவாக்க தெரிந்த இந்த சமூகத்துக்கு , அதை நெறிப்படுத்தவும் தெரிந்திருக்கவேண்டும் ..இல்லையேல் இந்த சமூகத்தில் வாழ்கிற நாம் , நம்மை மனிதர்கள் என்று சொல்லி கொள்வதற்கு தகுதிஆனவர்கள் இல்லை என்பதாவது தெரிந்திருக்கவேண்டும்..

நான் இந்த கட்டுரையை நிறைவு செய்ய போவதில்லை.. நிறைவை நோக்கி பயணிக்க விட்டுவிட போகிறேன்.. நீங்களே நிறைவு செய்து கொள்ளுங்கள் .. ஏனெனில் நான் பேசிக்கொண்டிருப்பதும் ஒரு வகை ஜனநாயகம் தான் ..அது நாம் பேச மறந்த
 

" பாலியல் ஜனநாயகம் "
 
 
 
 
 
 
 
செய்தியாளர் நெல்சன் சேவியர்

பொம்மலாட்டமும், முட்டாள் பார்வையாளர்களும்!


தமிழக அரசின் தலைமை தகவல் ஆணையர் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில், கடந்த மார்ச் மாதம் வழக்கு தொடரப்பட்டது. விஜயலட்சுமி என்ற வழக்கறிஞர் இந்த பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார். மாநில தகவல் ஆணையத்தின், தலைமை ஆணையர் நியமனத்தில், அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் கருத்து கேட்கப்படவில்லை என்றும், ஆகவே சட்டப்படி இந்த நியமனம் செல்லாது என்றும், விஜயலட்சுமி தன் மனுவில் கூறியிருந்தார். இதே விஜயலட்சுமி, மாநில தகவல் ஆணையர்களாக, மூன்று பேர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து மற்றொரு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கிலும், ஆணையர்கள் நியமனத்தில் எதிர்கட்சி தலைவரின் கருத்து கேட்கப்படவில்லை, ஆகவே நியமனத்தை செல்லாது என, நீதி மன்றம் அறிவிக்கவேண்டும் என கோரி இருந்தார். 

இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதி மன்றம் அப்போதைய தி.மு.க அரசை, இதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், தேர்தல் வந்துவிட்டதால் இந்த வழக்குகள் விசாரணைக்கு வரவில்லை. தற்போது இந்தவழக்குகளில், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கைகள், சம்பந்தப்பட்ட துறையின் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகளில், தலைமை தகவல் ஆணையர் நியமனத்திற்கு முன், அப்போதைய எதிர்கட்சி தலைவர், ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கு ஜெயலிதா எழுதிய பதில் கடிதத்தில், தேர்தல் நெருங்குவதாலும், அப்போதைய இந்திய அரசின் தலைமை கண்காணிப்பு ஆணையர் (பி.ஜே.தாமஸ்) தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், மாநில தலைமை தகவல் ஆணையர் நியமனத்தை தேர்தலுக்கு பின் நடத்தலாம் என்றும் கூறியதாக தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் ஜெயலிதாவின் கோரிக்கையை நிராகரித்த தி.மு.க அரசு, எதிர்கட்சி தலைவர் வராமலேயே தலைமை தகவல் ஆணையராக ஸ்ரீபதியை நியமித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மூன்று தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக, ஜெயலிதாவுக்கு தெரிவிக்கப்பட்டபோது, பரிசீலினையில் உள்ள நபர்களின் பட்டியலை அவர்கேட்டதாகவும், அதை அப்போதைய அரசு தரமறுத்ததால் நியமன கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் இவற்றை சுட்டி காட்டியுள்ள, அரசு செயலாளர்கள், முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட, தலைமை தகவல் ஆணையர் மற்றும் மூன்று ஆணையர்கள் நியமனம் சட்டத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளனர். ஆகவே இவர்களின் நியமனம் செல்லாது என்று கூறியுள்ளனர். இதேபோல், சமச்சீர் கல்வி வழக்கில், அரசின் தலைமை செயலாளர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், சமச்சீர் கல்வி தொடர்பாக கடந்த அரசு எடுத்த "கொள்கைமுடிவு" சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார். இன்னும் வெளிப்டையாக, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை, "மாநில கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம்" மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று, அரசின் தலைமை செயலாளர், அரசானை ஒன்றை பிறப்பித்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தலைமை செயலாளர் இப்படி ஒரு உத்தரவை பிறப்பிப்பதன் உள்நோக்கம், ஜெயலிதாவை காப்பாற்றுவதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? கற் 

இனிவரும் காலங்களில், துறை செயலாளர்கள் பிறப்பிற்க்க உள்ள உத்தரவின் மூலம், ஜெயலலிதா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் (அது எளிதில் நடக்க கூடியது). ஒவ்வொரு அரசும் மாறும்போதும், அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக செயல்பட நிர்பந்திக்கபடுவது என்பது இயல்பே. ஆனால் இந்தளவுக்கு வெளிப்படையாக அதிகாரிகளின் கைகளில் கட்டப்பட்ட கையிற்றை ஆட்டுவது, மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவர்களால் மட்டுமே செய்யமுடியும். 

நாம் உண்மையில் முட்டாள்களா?

அசீப் 

சமச்சீர்: பிழைக்குமா?

சமச்சீர் கல்வியை நிறுத்திவைப்பதாக அரசு எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவுற்று, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை நீதிமன்றத்தில் அரசு தரப்பிலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பிலும் எடுத்துவைக்கபட்ட வாதங்களை காண்போம். 

அரசு தரப்பை பொறுத்தவரையில், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்திவைப்பதற்கு அவர்கள் கூறும் முக்கிய காரணம், 
  • சமச்சீர் புத்தகங்கள் தரம் குறைவாக உள்ளது.
  • தனிப்பட்ட நபரை, துதிபாடும் வகையில் சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • மத்திய அரசின், வழிகாட்டுதலுக்கு இணங்க பாடத்திட்டங்கள் வகுக்கப்படவில்லை. அதாவது, "தேசிய பாடத்திட்ட வரையறை குழு" வகுத்துள்ள வழிகாட்டுதல்கள், சமச்சீர் பாடத்திட்டம் தயாரிக்கும்போது கணக்கில் எடுத்து கொள்ளபடவில்லை.
  •  மத்திய அரசின் "அனைவருக்கும் கல்வி உரிமை" சட்டத்திற்க்கு எதிராக, சமச்சீர் கல்வி சட்டம் உள்ளது, கல்வி, பொதுப்பட்டியலில் உள்ளதால், மத்திய அரசின் சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்தாமல், சமச்சீர் சட்டம் நிறைவேற்றபட்டது சட்ட விரோதம்.
  • ஏற்க்கனவே, சமச்சீர் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்தும் முன், அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளாக, உயர்நீதி மன்றம் வகுத்து கொடுத்த வழிமுறைகள் எதுவும், முந்தைய அரசால் கடைபிடிக்க படவில்லை. 
  • கல்வி, பொது பட்டியலில் உள்ளதால், கல்வியை பொறுத்தவரையில், மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது. 
  • சமச்சீர் புத்தகங்களில், ஏராளமான சொல் மற்றும் கருத்து பிழைகள் உள்ளன.
  • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சமச்சீர் பாடத்திட்டம் சுமையாக இருக்கும். (அதாவது, அரசுப்பள்ளி மாணவர்களின் சிறு, மூளைக்கு ஏற்ற வகையில் சமச்சீர் பாடத்திட்டம் இல்லை)
  • சமச்சீர் குறித்து ஆராய்வதற்காக, உச்சநீதி மன்றத்தின் உத்தரவின்படி தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற, ஒய்.ஜி.பார்த்தசாரதி கல்விக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஜெயதேவ் என்பவர் ஏழை மாணவர்களுக்காக இலவச பள்ளி நடத்திவருபவர். விஜயலட்சுமி ஸ்ரீநிவாசன் என்பவர், மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் கல்வி நிலையத்தை நடத்தி வருபவர்.
  • இந்த குழு, நான்கு முறை மட்டுமே கூடியதாகவும், அதற்க்குள் 10400 பக்கங்கள் கொண்ட சமச்சீர் புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்தது எப்படி என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, குழு நான்கு முறைதான் கூடி இருந்தாலும், குழுவில் உள்ளவர்கள் தினமும் இரவு, பகல் பாராமல் தங்கள் வீட்டில் இருந்தபடி சமச்சீர் புத்தகத்தை ஆராய்ந்ததாக கூறப்பட்டுள்ளது.  
பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள்.
  • சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்துவது குறித்து ஆராய்வதற்காக, உச்சநீதி மன்றத்தின் உத்தரவுபடி, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற அனைவரும், கல்வியாளர்கள் அல்ல. மாறாக, கல்வியை கொண்டு வியாபாரம் நடத்துபவர்கள்(ஒய்.ஜி.பார்த்தசாரதி, ஜெயதேவ், விஜயலட்சுமி ஸ்ரீனிவாசன்)
  • குழுவில் இடம்பெற்ற அனைவரும், முன்னதாக சமச்சீர் கல்வியை எதிர்த்தவர்கள்.
  • சமச்சீர் கல்வி சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம், சமச்சீர் கல்வியை மீண்டும் எப்போது நடைமுறை படுத்துவது என்பது குறித்து கூறவில்லை. ஆகவே, அரசு நிரந்தரமாக சமச்சீர் கல்வியை நிறுத்த நினைக்கிறது. 
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் சுமையாக அமையும் என்பது ஏற்றுகொள்ள முடியாத வாதம்.
  • சமச்சீர் குறித்து ஆராய்வதற்காக அமைக்கபட்ட குழுவின் தலைவரும், தமிழக அரசின் தலைமை செயலாளருமான, தேவேந்த்ரநாத் சாரங்கி, ஏற்கனவே நீதிமன்றத்தில் அரசு சார்பாக தாக்கல் செய்த மனுவில், சமச்சீர் குறித்து முந்தைய அரசு எடுத்த கொள்கை முடிவு சட்டவிரோதம் என்று கூறியுள்ளார். அப்படிபட்டவர் எப்படி நடுநிலைமையாக இருந்து சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்துவது குறித்து ஆராய்ந்திருப்பார்.
  • குழுவின் இறுதி அறிக்கையை முடிவு செய்தவர் தலைமை செயலாளர்தான். குழுவில் இருந்த மற்ற நபர்களுக்கு அந்த அறிக்கை காண்பிக்க படாமலேயே அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. 
  • குழுவின் அறிக்கை, அரசின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது. அல்லது, அரசுக்கு ஆதரவாக அறிக்கை அளிக்கும்படி, குழு உருவாக்க பட்டுள்ளது.
இதுதவிர சில விஷயங்கள்.....
  • சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்துவது குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற, ஒரு நபருடன், தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்துதாஸ், ஒன்றாக சுற்றி திரிந்ததை எங்கள் செய்தியாளர்கள் பலமுறை நேரில் பார்த்துள்ளனர்.
  • நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்காத நிலையில், பழைய பாடத்திட்டங்களின் அடிப்படையில் புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை அரசு செய்துவருகிறது. இதுகுறித்து செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்த செய்தியை சுட்டிகாட்டி, தலைமை நீதிபதி, அரசுதரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது, அதாவது, இது நீதி மன்ற அவமதிப்பு இல்லையா என்று நீதிபதி கேட்டபோது, அரசு தரப்பு சரியான விளக்கத்தை கொடுக்கவில்லை, மேலும் அந்த செய்தி குறித்து மறுப்பும் தெரிவிக்க வில்லை.
இந்நிலையில், நாளை மறுநாள் சமச்சீர் கல்வியை இந்தவருடம் நடைமுறை படுத்தலாமா, இல்லையா என்பது குறித்து, சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

அசீப் 

ஒரு வேண்டுகோள்!

நண்பர்களே!

கடந்தவாரம் நம் தோழர்கள் சந்திப்பின்போது, நாம் ஏற்கனவே யோசித்துவைத்தபடி ஒரு புத்தகத்தை அனைவரும் வாசித்து அது குறித்து வரும் வாரங்களில் விவாதம் நடத்தலாம் என்று முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில், அ.மார்க்ஸ் எழுதிய "ஆரிய கூத்து " என்ற புத்தகத்தின் முதல் இரண்டு தலைப்புகளை வரும் வாரம் விவாதிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். ஆகவே, அனைவரும் அப்புத்தகத்தை வாசிக்கும்படி கேட்டு கொள்ளபடுகின்றனர்.

 - மாற்றத்திற்க்கான செய்தியாளர்கள்.

Time

Total Page Views

About this blog

நம்மைச்சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகள் , அதன் பின்னணியிலிருக்கும் அரசியல் , அந்த நிகழ்வை நகர்த்தும் அடிப்படை,அதற்கான தேவை, என நாங்கள் புரிந்துகொண்டதை , நாங்களே பகிர்ந்து கொள்ளவும் , நாங்கள் பகிர்ந்து கொண்டதை , உங்களோடு பகிர்ந்து கொள்ளவுமே இந்தத் தளம்.
Powered by Blogger.

Followers

Blog Archive